கா. ப. இலட்சுமண ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திவான் பகதூர் சர் காசர்கோடு பதனாசெட்டி இலட்சுமண ராவ் (K. P. Lakshmana Rao)(15 திசம்பர் 1887 -?) சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றிய இந்திய வழக்கறிஞர் ஆவார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இலட்சுமண ராவ் 1887ஆம் ஆண்டு திசம்பர் 15ஆம் தேதி மதராசில் ஒரு கவுட சாரஸ்வத் பிராமண குடும்பத்தில் பிறந்தார். இச்சமூக பிறப்பிடம் தென் கன்னட மாவட்டத்தில் உள்ளது.[1] இலட்சுமண ராவ் தனது கல்வியைச் சென்னையில் பயின்றார். சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.[1] பட்டம் பெற்றதும், இலட்சுமண ராவ் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். பின்னர் வழக்கறிஞராகப் பணியில் சேர்ந்தார்.[1]

நீதிபதி பணி[தொகு]

இலட்சுமண ராவ், 1924 முதல் 1929 வரை திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதிபதியாக பதவி வகித்தார்.[2] 1930-ல், இலட்சுமண ராவ் சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்காலிக நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சில ஆண்டுகளுக்குப் பிறகு இவரது நியமனம் உறுதி செய்யப்பட்டது. இவருடைய பதவிக்காலத்தில் இவர் விசாரித்த முக்கியமான வழக்குகளில் ஒன்று லட்சுமிகாந்தன் கொலை வழக்கு. சுதந்திரத்திற்கு முந்தைய ஆண்டான 1946ஆம் ஆண்டு பிறந்தநாள் கௌரவப் பட்டியலில் இவர் நைட் பட்டம் பெற்றார்.[3]

விளையாட்டு வீரராக[தொகு]

இலட்சுமண ராவ் துடுப்பாட்ட வீரராக மதராசு துடுப்பாட்ட குழுவில் நடுத்தர விரைவு பந்து வீச்சாளராக இருந்தார்.[4] 1936-ல், தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 1947-ல் குழுவின் அலுவலகப் பொறுப்பாளர்களில் ஒருவரானார்.[5][6]

இருப்பினும், இலட்சுமண ராவ் ஒரு டென்னிசு வீரராக மிகவும் பிரபலமானவர். 1917-ல் சென்னையில் நடைபெற்ற முதல் தென்னிந்தியப் புல்வெளி வாகையாளர் போட்டியில் இரட்டையர் பட்டத்தை வென்ற அணியின் ஓர் வீரராக இருந்தார்.[7][8]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 The Who's who in Madras: A pictorial who's who of distinguished personages, princes, zemindars and noblemen in the Madras Presidency. Pearl Press. 1938. பக். 87. 
  2. https://tiruchirappalli.dcourts.gov.in/former-judges/page/4/
  3. The London Gazette, 13 June 1946
  4. Muthiah, p 245
  5. Muthiah, p 441
  6. Muthiah, p 448
  7. Muthiah, p 332
  8. Muthiah, p 336

மேலும் காண்க[தொகு]

S. Muthiah (1998). The spirit of Chepauk: the MCC story, a 150 year sporting tradition. East West Books (Madras) Pvt Ltd. 

"https://ta.wikipedia.org/w/index.php?title=கா._ப._இலட்சுமண_ராவ்&oldid=3816897" இலிருந்து மீள்விக்கப்பட்டது