காலி கலங்கரை விளக்கம்

ஆள்கூறுகள்: 6°01′28.48″N 80°13′09.76″E / 6.0245778°N 80.2193778°E / 6.0245778; 80.2193778
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காலி கலங்கரை விளக்கம்
காலி கலங்கரை விளக்கம்
அமைவிடம்காலிக் கோட்டை
காலி
தென் மாகாணம்
இலங்கை
ஆள்கூற்று6°01′28.48″N 80°13′09.76″E / 6.0245778°N 80.2193778°E / 6.0245778; 80.2193778
கட்டப்பட்டது1848 (முதலில் கட்டப்பட்டது)
ஒளியூட்டப்பட்டது1939 (தற்போதுள்ளது)
தானியக்கம்ஆம்
கட்டுமானம்வார்ப்பிரும்பு
உயரம்26.5 மீட்டர்கள் (87 அடி)
குவிய உயரம்28 மீட்டர்கள் (92 அடி)
ஒளி மூலம்மின்சாரம்
வீச்சு47 கடல் மைல்கள் (87 km; 54 mi)
சிறப்பியல்புகள்Fl (2) W 15s.
Admiralty எண்F0830
NGA எண்27284
ARLHS எண்SLI-0018
மேலாண்மை முகவர்இலங்கை துறைமுக அதிகார சபை[1]

காலி கலங்கரை விளக்கம் (Galle Lighthouse) (பாயிண்ட் டி காலி லைட் என்றும் அழைக்கப்படுகிறது) [2] இலங்கையில் காலியில் அமைந்துள்ள ஒரு கடற்கரை கலங்கரை விளக்கம் ஆகும். இது இலங்கை துறைமுக அதிகாரசபையால் இயக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.[3]

வரலாறு[தொகு]

இது இலங்கையின் மிகப் பழமையான ஒளி நிலையம் ஆகும்.[1] இது 1848 ஆம் ஆண்டு 24.5 மீற்றர் (80 அடி) உயரத்தில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது.[2][4] இக் கலங்கரை விளக்கம் 1934 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீவிபத்தில் அழிந்தது. பின், 1939 ஆம் ஆண்டு 26.5 மீட்டர் (87 அடி) உயரத்தில் தற்போதுள்ள கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. தற்போதுள்ள கலங்கரை விளக்கமானது பிரித்தானியர்களால் அமைக்கப்பட்டிருந்த கலங்கரை விளக்கத்திலிருந்து 100 மீட்டர் (332 அடி) தொலைவில் அமைந்துள்ளது .

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளம் மற்றும் நன்கு அறியப்பட்ட சுற்றுலாத்தலமான பண்டைய காலி கோட்டையில் இந்த ஒளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.[1] கலங்கரை விளக்கம் மூலோபாய ரீதியாக தெற்கு முனையில் அமைந்துள்ளது. சாலை மட்டத்திலிருந்து சுமார் 6 மீட்டர் (20 அடி) உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இது பாயிண்ட் உட்ரெக்ட் பாசுடன் என்று அழைக்கப்படுகிறது. இங்கிருந்து காலி துறைமுகத்திற்குள் நுழையும் எந்தவொரு கப்பலையும் முழுமையாக பார்வையிடலாம்.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Rowlett, Russ (13 February 2006). "Lighthouses of Sri Lanka". University of North Carolina at Chapel Hill. பார்க்கப்பட்ட நாள் 22 December 2014.
  2. 2.0 2.1 "Galle Light". Lighthouse Explorer. Foghorn Publishing. பார்க்கப்பட்ட நாள் 22 December 2014.
  3. "List of Lighthouses in Sri Lanka". The Team Traveller. Archived from the original on 14 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 1 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Sailing Directions for the West Coast of India - Issue 159. United States Hydrographic Office. 1920. p. 167.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காலி_கலங்கரை_விளக்கம்&oldid=3924826" இலிருந்து மீள்விக்கப்பட்டது