கார உப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கார உப்புகள் (Alkali salts or basic salts) என்பவை ஒரு வலிமையான காரம் மற்றும் பலவீனமான அமிலம் ஈடுபடும் நடுநிலையாக்கல் வினையில் உருவாகும் உப்புகள் ஆகும்.

சிலவகை உப்புகள் நடுநிலையாக இருப்பது போல் அல்லாமல் கார உப்புகள் அவற்றின் பெயருக்கு ஏற்பவே காரங்களாகச் செயல்படுகின்றன. பலவீனமான அமிலத்தில் இருந்து கிடைக்கும் இணைக்காரம் நீராற்பகுப்பு அடைந்து காரக்கரைசலாக மாறுவதால் இச்சேர்மங்கள் காரத்தன்மையைப் பெறுகின்றன. உதாரணமாக சோடியம் கார்பனேட்டில், கார்பானிக் அமிலத்திலிருந்து கிடைக்கும் கார்பனேட்டு நீராற்பகுப்பு அடைந்து ஒரு காரக் கரைசலாக மாறுகிறது. ஐதரோகுளோரிக் அமிலத்திலிருந்து கிடைக்கும் குளோரைடு உப்பான சோடியம் குளோரைடு நீராற்பகுப்பு அடைவதில்லை. அதனால் இவ்வுப்பு ஒரு கார உப்பாக இல்லை.

கார உப்புக்கும் காரத்திற்கும் உள்ள வேறுபாடு என்னவெனில், காரம் என்பது கார உலோகங்கள் அல்லது காரமண் உலோகங்களின் கரையக்கூடிய ஐதராக்சைடு உப்புகள் ஆகும். ஆனால் கார உப்புகள் என்பவை, எந்த உப்பு நீராற்பகுப்பு அடைந்து காரக்கரைசலைக் கொடுக்கிறதோ அவ்வுப்பு காரவுப்பு எனப்படுகிறது. பொதுவாக ஐதராக்சைடு சேர்மங்கள் உப்புகள் என்று அழைக்கப்படுவதில்லை. ஐதராக்சைடு அயனி மற்றும் பிற அயனிகளைக் கொண்டிருக்கும் சேர்மங்களையும் காரவுப்புகள் எனலாம். உதாரணம் வெள்ளை ஈயம். இது கார உப்பு அல்லது ஈய கார்பனேட்டு ஐதராக்சைடு என அழைக்கப்படுகிறது.

கரையாத இக்கார உப்புகள் வீழ்படிவாக்கல் வினைகளின் மூலமாகத் தயாரிக்கப்படுகின்றன.

உதாரணங்கள்:

சோடியம் கார்பனேட்டு

சோடியம் அசிட்டேட்டு

பொட்டாசியம் சயனைடு

சோடியம் சல்பைடு

கார உப்புகள் பெரும்பாலும் பாத்திரம்கழுவி சலவைக்காரத் தூளின் பகுதிப்பொருளாகக் காணப்படுகின்றன[1].

உதாரணங்கள்:

கார மெட்டா சிலிக்கேட்டுகள்

காரவுலோக ஐதராக்சைடுகள்

சோடியம் கார்பனேட்டு

சோடியம் பெர்கார்பனேட்டு

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார_உப்பு&oldid=2747343" இருந்து மீள்விக்கப்பட்டது