பாத்திரம்கழுவி

உணவு சமைக்க உதவும் உபகரணங்களையும், உண்ண பயன்படும் பாத்திரங்களையும் கழுவக்கூடிய இயந்திரம் பாத்திரம்கழுவி ஆகும். இது சூடேற்றப்பட்ட (55-65 degrees Celsius) நீரை வேகமாக பாத்திரங்கள் மீது தெளிப்பதன் மூலம் பாத்திரங்களை சுத்தமாக்குகிறது. முதலில் அழுக்ககற்றும் கலவை கலந்த சூடுநீரை தெளித்து, பின்னர் தெளிவான சுடுநீரைத் தெளிக்கிறது. மின்சக்தியில் இயங்கும் இந்த இயந்திரம் நேரத்தையும் மனித உழைப்பையும் சேமிக்கிறது.[1][2][3]
இந்த இயந்திரத்தில் பாத்திரங்களை அடுக்கி வைக்க பிரத்யேக தட்டுகள் இருக்கும். சில இயந்திரங்களில் பாத்திரங்களை உலர வைக்கும் வசதியும் உண்டு. வெவ்வேறு வகையான பாத்திரங்களுக்கு ஏற்றவாறு பல்வேறு சலவை முறைகள் இந்த இயந்திரத்தில் இருக்கும். இதனால் கண்ணாடிப் பாத்திரங்கள், பீங்கான் பாத்திரங்கள், சமையல் பாத்திரங்கள் என அனைத்தையும் திறம்பட சுத்தம் செய்யலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Özçevik, Ö; Brebbia, C. A.; Şener, S. M. (2015). Sustainable Development and Planning VII (in ஆங்கிலம்). WIT Press. p. 794. ISBN 978-1845649241.
- ↑ Zoller, Uri (2008). Handbook of Detergents, Part E: Applications (in ஆங்கிலம்). CRC Press. pp. 60–62. ISBN 978-1574447576.
- ↑ "What Does It Take To Get Us To Try Something New?". The Indicator from Planet Money. NPR. 26 May 2021.