கார்பனாக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கார்பனாக்கல் (Carbonization) என்பது தாவரங்கள் மற்றும் இறந்த விலங்குகள் ஆகியவை மரம் வடித்தல் என்ற செயல்முறையின் மூலமாக முழுவதுமாக கரியணுக்களாக மாற்றப்படும் செயல்முறையாகும்.

கார்பனாக்கல் செயல்முறையில் உள்ள சிக்கல்[தொகு]

கார்பனாக்கலில் உள்ளடங்கிய தொடர் செயல்முறைகளின் விளக்கப்படம்[1]

கார்பனாக்கல் என்பது ஒரு வெப்பச்சிதைவு வினையாகும், எனவே, ஐதரசனேற்றம், ஒடுக்கம், ஹைட்ரஜன் பரிமாற்றம் மற்றும் மாற்றியமாக்கல் போன்ற பல வினைகள் ஒரே நேரத்தில் நிகழும் ஒரு சிக்கலான செயல்முறையாகக் கருதப்படுகிறது.

கார்பனாக்கல் என்பது தனது வினை வேகத்தின் காரணமாக நிலக்கரியாக்கல் செயல்முறையிலிருந்து வேறுபடுகிறது. நிலக்கரியாக்கல் செயல்முறையோடு ஒப்பிடும் போது எண்ணளவில் பல மடங்குகளில் கார்பனாக்கல் வினையின் வேகம் அதிகமாக உள்ளது.

வெப்பச்சிதைவு வினையின் இறுதி வெப்பநிலைக்கு, பயன்படுத்தப்படும் வெப்பத்தின் அளவு கார்பனேற்றத்தின் அளவு மற்றும்  பிற அயல் தனிமங்களின் எஞ்சிய உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. உதாரணமாக, T ~ 1200 கெல்வின் வெப்பநிலையில் மீந்திருக்கும் பகுதியின் கார்பன் பொதிவு நிறையில் 90 விழுக்காடு பகுதியைக் கொண்டிருக்கிறது, அதே நேரத்தில் T ~ 1600 கெல்வின் வெப்பநிலையில் நிறையில் 99 விழுக்காடு கார்பனைக் கொண்டுள்ளது.[1] கார்பனாக்கல் என்பது பெரும்பாலும் வெப்பம் உமிழ் செயல்முறை ஆகும். அதாவது, இது கொள்கையளவில் தன்னிறைவு பெறக்கூடியதாகவும், கார்பனீராக்சைடை உற்பத்தி செய்யாத ஆற்றல் மூலமாகவும் பயன்படுத்தப்படலாம்.[2] குளுக்கோசின் கார்பனாக்கல் வினையைப் பொறுத்தவரை இந்த வினையானது சற்றேறக்குறைய கிராம ஒன்றுக்கு 237 கலோரிகளை வெளிவிடுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Nic, M. (2014). "Carbonization". The IUPAC Compendium of Chemical Terminology. IUPAC Gold Book. doi:10.1351/goldbook.C00840. http://goldbook.iupac.org/C00840.html. 
  2. "Burying biomass to fight climate change" by Richard Lovett, New Scientist, 3 May 2008, pp. 32-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்பனாக்கல்&oldid=3642661" இலிருந்து மீள்விக்கப்பட்டது