உள்ளடக்கத்துக்குச் செல்

காதின் மாகாணம்

ஆள்கூறுகள்: 18°20′N 105°54′E / 18.333°N 105.900°E / 18.333; 105.900
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காதின் மாகாணம்
திகாதின்
காதின் வியட்நாமில் அமையும் இருப்பிடம்
காதின் வியட்நாமில் அமையும் இருப்பிடம்
ஆள்கூறுகள்: 18°20′N 105°54′E / 18.333°N 105.900°E / 18.333; 105.900
நாடு வியட்நாம்
வியட்நாம் வட்டாரம்நடுவண் வடக்குக் கடற்கரை
தலைநகர்காதின்
அரசு
 • மக்கள் மன்றத் தலைவர்நிகுயேன் தான்பின்
 • மக்கள்குழுத் தலைவர்இலேவான் சாத்
பரப்பளவு
 • மொத்தம்5,997.8 km2 (2,315.8 sq mi)
மக்கள்தொகை
 (2014)[1]
 • மொத்தம்12,55,300
 • அடர்த்தி210/km2 (540/sq mi)
மக்கள்தொகையியல்
 • இனக்குழுக்கள்வியட்நாமியர்கள், தாய் மக்கள், சூத் மக்கள், மூவோங் மக்கள்
நேர வலயம்ஒசநே+7 (இந்தோசீன நேர வலயம்)
தொலைபேசிப் பகுதிக் குறிமுறைகள்239
ஐஎசுஓ 3166 குறியீடுVN-23
இணையதளம்www.hatinh.gov.vn

காதின் (Hà Tĩnh) என்பது வியட்நாமின் 63 மாகாணங்களில் ஒன்றாகும். இது வியட்நாமின் நடுவண் வடக்குக் கடற்கரை வட்டாரத்தில் அமைந்துள்ளது. அண்மையில் உள்ல நிகேயான் மாகாணத்துடன் இணைந்து இரண்டு மாகாணங்களும் நிகேதின் மாகாணம் எனப்படுகிறது. இங்கு வாழும் வியட்நாமியர் குறிப்பாக அறியப்பட்ட குரல் ஒலிப்புடன் வியட்நாம் மொழியைப் பேசுகின்றனர்.[2][3]

புவிப்பரப்பியல்

[தொகு]

காதின் மாவட்டம் கனாய்க்குத் தெற்கே 340 கிமீ தொலைவில் நடுவண் வியட்நாம் மண்டலத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் வடக்கில் நிகேயான் மாகாணமும் தெற்கே குவாங் பின் மாகாணமும் மேற்கே இலாவோசும் கிழக்கே தென்சீனக் கடலும் அமைந்துள்ளன.

ஆட்சிப் பிரிவுகள்

[தொகு]

காதின் மாகாணம் 13 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

 • 10 மாவட்டங்கள்:
  • சாம் சுயேன் மாவட்டம்
  • சான்லோசு மாவட்டம்
  • தூசுதோ மாவட்டம்
  • குவோங்கே மாவட்டம்
  • குவோங்சோன் மாவட்டம்
  • கய்யான் மாவட்டம்
  • உலோசு கா மாவட்டம்
  • நிகி சுவான் மாவட்டம்
  • தாட்ச்கா மாவட்டம்]
  • வூ குவாங்
 • 2 மாவட்ட மட்ட நகரியங்கள்:
  • கோங்லின்
  • கய்யான் (புதியதாக 2015 இல் உருவாக்கப்பட்டது)
 • 1 மாகாண நகரம்:
  • நாதின் (தலைநகர்)

இவை மேலும் 12 குமுக மட்ட நகரியங்களாகவும் (அல்லது சிறுநகரங்களாகவும்), 235 குமுகங்களாகவும் 15 சிறகங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

சுற்றுலாவும் சுற்றுலாத் தளங்களும்

[தொகு]

காதின் வரலாற்று, பண்பாட்டுச் சிறப்புள்ள பல சுற்றுலாத் தளங்களைக் கொண்டுள்ளது. இது இலேகூ திராக், நிகுயேந்து (கின்வான் கியேயு காப்பியத்தின் ஆசிரியர்), நிகுயேன் சோங்திரூ, பாந்தின் பூங், திரான்பூ, நிகோ தூசுகே, நிகுயேன் பான்சான், கோவாங் நிகோசு பாச், சுவான் தியேயு, குய்சான், கோவாங் சுவான்கான், நிகுயேன் காசு வியேன், இலேவான் தியேம், தியேம் பூங்தி, நிகுயேந்தோ போன்ற தேசியத் தலைவர்களும் ஆளுமைகளும் தோன்றிய இடமாகும் .

குறிப்பிடத் தக்க இயற்கைக் காட்சிகள் நிறைந்த இடங்களாக இலா ஆறு, வூமோன் அருவி, வூ குவாங் தோட்டம், கேகோ ஏரி, சோன்கிம் வெப்பநீர் ஊற்றுகள், தேவோ நிகாங் கணவாய், குவோங் திட்ச் அடுக்குத் தூபி, தியேன்சாம் கட்ற்கரை, தேவோசோன் கடற்கரை, சுவாந்தான் கடற்கரை, சான் தியேன் கடற்கரை (இக்கடற்கரைப் பகுதிகள் நெடுஞ்சாலைகள் 1A, 8 ஆகியவற்ரின் வழியில் உள்ளன) ஆகியவை அமைகின்றன.

போக்குவரத்து

[தொகு]

காதின் மாகாணத்தில் பெந்துய் பாலதில் இருந்து (வின் மாநகரம்) தேவோ நிகாங் கணவாய் வரை காதினையும் குவாங் பினையும் இணைக்கும்130 கிமீ நீளமுள்ள நெடுஞ்சாலை 1A வழித்தடம் அமைந்துள்ளது. இம்மாகாணத்தில் உள்ள இரண்டாம் வழித்தடம் ஓ சி மின் வழித்தடமாகும். இவை மட்டுமன்றிக் காதின் மாகாணத்தில் கோங்லின் நகரியத்தில் இருந்து இலாவோசுக்குச் செல்லும் நெடுஞ்சாலை 8 வழித்தடமும் வூங்காங் துறைமுகத்தில் (குய்யான் மாவட்டம்) இருந்து இலாவோசுக்குச் செல்லும் வியட்லாவோ வழித்தடமும் இயங்குகின்றன. காதின் மாகானத்தில் இருந்து இலாவோசுக்குச் செல்லும் தொடர்வண்டித் தடம் ஒன்றுக்கும் 2007 இல் முன்வரைவு உருவாக்கப்பட்டுள்ளது .

பொருள்வளம்

[தொகு]

காதின் வியட்நாமின் மிக ஏழ்மையான மாகாணம் ஆகும். 2008 இல் இதன் தொகு உள்நாட்டு விளைபொருள் ஆளுக்கு 420 அமெரிக்க டாலர் ஆகும். இதன் ஏழ்மைக்கு ஒருவகையில் இங்கு நிலவும் மழைக்கால கடுங்குளிரும் கோடைக்கால கடும்வெயிலும் இலையுதிர்கால வெள்ளங்களும் புயல்களும் பயனற்ற மண்நிலையும் இயற்கை வளங்களும் காரணங்கள் ஆகின்றன. மிக திறமையற்ற மாவட்ட, மாகாண ஆட்சியமைப்புகளும் முன்னேற்றத்துக்கு முட்டுகட்டைகள் ஆகின்றன.

வரலாறு

[தொகு]

சீனோ-வியட்நாமிய எழுத்துகளில், இந்த மாகாணத்தின் பெயர் அமைதியாறு எனப்பொருள்படும் என எழுதப்பட்டது. 1930 இல் தொடங்கி, காதின் தொடர்ந்து நிகேயான், குவாங் நிகாய் மாகாணங்களோடு சேர்ந்து வியட்நாமிய ஊரகச் சோவியத்து கிளர்ச்சி இயக்கத்தைக் கட்டியமைத்து கலகங்கள் புரிந்த இடமாகும்.[4][5]

மேற்கோள்கள்

[தொகு]
 1. 1.0 1.1 Statistical Handbook of Vietnam 2014 பரணிடப்பட்டது சூலை 6, 2015 at the வந்தவழி இயந்திரம், General Statistics Office Of Vietnam
 2. Thê ́Anh Nguyêñ, Alain Forest Guerre et paix en Asie du Sud-Est Page 110 1998 " ... the regional way of speaking in the southern part of Thanh Nghệ, the so-called Nghệ Tĩnh (Nghệ An and Hà Tĩnh) dialect, ..."
 3. Jonathan D. London Education in Vietnam 2011 Page 186 "A teacher from Hà Tĩnh Province acknowledged this issue, quipping that his distinctive and “heavy” Hà Tĩnh accent would be tough even for most Việt teachers, let alone students."
 4. Patricia M. Pelley Postcolonial Vietnam: New Histories of the National Past 2002 Page 196 "In September 1930, the first Vietnamese soviet (in the village of vi:Võ Liệt) was formed, and soon it encompassed the three provinces of Nghệ An, Hà Tĩnh, and Quảng Ngãi. By this point, a number of Vietnamese students were already attending ..."
 5. Nguyen Công LuanNationalist in the Viet Nam Wars: Memoirs of a Victim Turned Soldier 2011 "... "Soviet" style that led farmers from several villages in Nghệ An and Hà Tĩnh provinces to stage mass protests for months after May 1930"

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ha Tinh Province
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=காதின்_மாகாணம்&oldid=3850675" இலிருந்து மீள்விக்கப்பட்டது