உள்ளடக்கத்துக்குச் செல்

காட்டூர், திருவாரூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காட்டூர் (kattur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் திருவாரூர் மாவட்டத்தில், உள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும்[1][2]. காவேரி டெல்டாவின் ஒரு பகுதியாக அமைந்துள்ள இந்த கிராமத்தின்  முக்கிய தொழில்   விவசாயம்  ஆகும். காவேரி நதியின் துணை நதிகளான வெண்ணாறு மற்றும் வெட்டாறு ஆகியவை காட்டூர் கிராமத்தைச் சுற்றி உள்ள முக்கிய  நீர்நிலைகள் ஆகும்.   காட்டூர் கிராமமானது காட்டூர்   பஞ்சாயத்தின் கீழ் உள்ளது. திருவாரூர் மாவட்ட தலைமையகத்தில் இருந்து தோராயமாக 3 கி.மீ. வடக்கிலும், சென்னை நகரத்திலிருந்து 313 கிமீ தொலைவிலும் காட்டூர் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் மத்திய பல்கலைக்கழகம் மற்றும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆகியவை இக்கிராமத்திற்கு அருகில்  உள்ளன. இங்கு உள்ள சிவன் கோயில் மற்றும் காளியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும்.

காட்டூரின் மக்கள் தொகை 3500 எனக்கூறப்படுகிறது.

ஊராட்சி தலைவராக விமலா பிரபாகரன் செயல்படுகிறார்.

சான்றுகள்

[தொகு]
  1. "kaattur".
  2. "kattur details".