உள்ளடக்கத்துக்குச் செல்

காட்சில்லா (2014 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காட்சில்லா
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்கரேத் எட்வர்ட்ஸ்
இசைஅலெக்சாண்டர் டெசுபிளாத்
நடிப்புஆரோன் டெய்லர்-சான்சன்
கென் வாடனாபே
எலிசபெத் ஓல்சன்
சூலியட் பினோச்சே
சாலி ஆக்கின்ஸ்
டேவிட் சுடெரய்தரின்
பிரையன் கிரான்சுடன்
வெளியீடு16 மே 2014
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$160 மில்லியன்

காட்சில்லா 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் அமெரிக்க நாட்டு திரைப்படம் ஆகும். இது சப்பானிய கதைகளில் வரும் பழம்பெரும் மிருகமான காட்சில்லாவை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.[1] இந்த திரைப்படத்தை கரேத் எட்வர்ட்ஸ் இயக்க ஆரோன் டெய்லர்-சான்சன், கென் வாடனாபே, எலிசபெத் ஓல்சன், சூலியட் பினோச்சே, சாலி ஆக்கின்ஸ்,டேவிட் சுடெரய்தரின் மற்றும் பிரையன் கிரான்சுடன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

நடிகர்கள்

[தொகு]
பாத்திரம் நடிகர்
லெப்டினன்ட் போர்டு பிராடி ஆரோன் டெய்லர்-சான்சன்
டாக்டர் இச்சிரோ செரிசவா கென் வாடனாபே
எல்லே பிராடி எலிசபெத் ஓல்சன்
சாண்ட்ரா பிராடி சூலியட் பினோச்சே
டாக்டர் விவியன் கிரகாம் சாலி ஹாக்கின்ஸ்
ரியர் அட்மிரல் வில்லியம் சுடென்சு டேவிட் சுடெரய்தரின்
சோ பிராடி பிரையன் கிரான்சுடன்

தமிழ் மொழிமாற்றம்

[தொகு]
  • பதிப்பு வெளியீட்டு தேதி: மே 16, 2014
  • ஊடகம்: சினிமா
  • கலைக்கூடம்: சவுண்ட் அண்ட் விசன் இந்தியா

வெளியீடு

[தொகு]

இந்த திரைப்படம் 16 மே 2014 இல் முப்பரிமாணத்தில் வெளியிடப்பட்டது.[2]

வரவேற்பு

[தொகு]

திரைப்படத்தில் நாயகன் ஆரோன், நாயகி ஓல்சன், நாயகனின் தந்தை பிரையன், பினோச்சே, ஆராய்ச்சியாளர் வாடனாபே ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அலெக்சாண்டரின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது, குறிப்பாக பிரம்மாண்ட காட்சிகளுக்கு ஏற்ப சிறப்பாக இசையமைத்திருக்கிறார். சீமசின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

வெளி இணைப்புகள்

[தொகு]

திரைப்பட மதிப்பீடு தளங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Holmes, Matt (August 7, 2007). "Godzilla 3D!". WhatCulture.com.
  2. Siretta, Peter (August 7, 2007). "Godzilla 3D gets a green light". Slash Film.