உள்ளடக்கத்துக்குச் செல்

காஞ்சியூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காஞ்சூர் அல்லது காஞ்சியூர் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி தாலுகாவில் உள்ள ஒரு குக்கிராமம் ஆகும். இவ்வூரில் வசிக்கும் மக்களின் முக்கியத் தொழில் விவசாயம் ஆகும். 2011 ஆம் ஆண்டில் இவ்வூரின் மக்கள்தொகை 400 ஆகும் [1]

அமைவிடம்

[தொகு]

காஞ்சியூர் 37 கிலோமீட்டர்கள் (23 mi) விழுப்புரத்திலிருந்து வடமேற்கே 37 கி.மீ. (23 மைல்) தொலைவிலும், திருவண்ணாமலைக்கு தென்கிழக்கே 20 கி.மீ. (12 மைல்) தொலைவிலும், செஞ்சிக்கு தென்மேற்கில் 23 கி.மீ தொலைவிலும், அமைந்துள்ளது.. தமிழ்நாட்டின் பிற பாறை ஓவிய தளங்களான கீழ்வாளை மற்றும் செத்தவரை இவ்வூரிலிருந்து முறையே 19 கி.மீ. மற்றும் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளன

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் (தடம் எண்: 23) நகரப் பேருந்துகள் நீலந்தாங்கல் வரை செல்லும். நீலந்தாங்கலில் இருந்து காஞ்சியூர் குன்று அரை கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஆவூரில் இருந்து நீலந்தாங்கல் செல்ல இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சிற்றுந்துகள் உள்ளன.

கிராமத்தைப் பற்றி

[தொகு]
காஞ்சியூர் மலை

காஞ்சியூர் 3000 ஆண்டு பாரம்பரியம் கொண்டது. இவ்வூரில், கிமு 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாறை ஓவியங்கள், கிபி 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணக் குகை, மற்றும் கற்படுக்கைகள் கொண்ட குன்று இருப்பதால், இதன் வரலாற்று முக்கியத்துவம் நிரூபிக்கப்பட்டுள்ளது. காஞ்சியூர் மலைக்கு அருகில் உள்ள மாதம்பூண்டி என்ற கிராமத்தில் சில தமிழ் சமணர்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.

சமணக் குகை மற்றும் கற்படுக்கைகள்

[தொகு]
சமணர் கற்படுக்கைகள் 1

காஞ்சியூர் குன்று சுமார் 400 அடி உயரம் கொண்டது. மலையின் உச்சியில், தரையில் 10 கற்படுக்கைகளைக் கொண்ட ஒரு குகை அமைந்துள்ளது.[2] படுக்கைகளுக்கு அருகில் ஒரு கல் இருக்கையும் அமைந்துள்ளது. அனைத்து கற்படுக்கைகளிலும் செதுக்கப்பட்ட தலையணைகள் உள்ளன. 10 கற்படுக்கைகளில், சோழபாண்டியபுரத்தின் ஆண்டிமலை மலையில் உள்ளதைப் போலவே நான்கு கல் படுக்கைகளின் தலையணைகள் அரை வட்ட வடிவில் செதுக்கப்பட்டுள்ளன (படத் தொகுப்பைப் பார்க்கவும்). மலைக்கு அருகில், கிபி 1 அல்லது 2 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த உடைந்த பானைகளின் துண்டுகள் அதிக அளவில் கண்டறியப்பட்டன.[3]

பாறை ஓவியங்கள்

[தொகு]

உலகளவில், பாறை ஓவியக் கலை, இவை குறித்த விளக்கங்கள், மற்றும் ஆய்வுகள் தொல்லியல் துறையில் எழுச்சி பெற்றள்ளது. தொல்லியலாளர்கள், இந்த ஓவியங்களைத் தீட்டிய மக்களின் கலைத்திறனை மட்டுமின்றி, இவர்களின் நம்பிக்கைகள் மற்றும் இவர்களின் அன்றாட செயல்பாடுகளையும் குறிப்பிடுகின்றனர். பாறை உறைவிடங்களில் உள்ள ஓவியங்கள் பெரும்பாலும் வேட்டையாடும் காட்சிகள் மற்றும் தொடர்புடைய மனித செயல்பாடுகள் குறித்து சித்தரிக்கின்றன.[4]

இங்கு காணப்படும் பாறை ஓவியங்கள் முக்கியமாக வெண்சாந்து நிறத்தில் வரையப்பட்ட குறியீடுகளைக் கொண்டுள்ளது. எனவே வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த மக்கள் இந்தக் குறியீடுகளை வரைவதற்கு சுண்ணாம்பைப் (கால்சியத்தைப்) பயன்படுத்தியிருக்கலாம். இங்கு வரையப்பட்டிருக்கும் இந்த குறியீடுகள் சிந்து சமவெளி நாகரிகத்தில் காணப்படுவதை ஒத்து உள்ளன.

படக்காட்சியகம்

[தொகு]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tehsil Kanjur of district Viluppuram, Tamil Nadu". indiamapped.com. பார்க்கப்பட்ட நாள் 2017-11-08.
  2. T.S. Subramanian (20 June 2008). "Newfound Jain sites". தி இந்து. Archived from the original on 22 June 2008. பார்க்கப்பட்ட நாள் 2012-03-08.
  3. Ananthapuram K. Krishnamurthy, "Senji pagudhiyil samanam", Malayamaan Publishers, Varkkalpattu, Cuddalore(2005)
  4. S. Vasanthi, "KALVETTU", Vol no:75, page no:40 (2008), State department of Archaeology, Chennai

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காஞ்சியூர்&oldid=3867450" இலிருந்து மீள்விக்கப்பட்டது