கீழ்வாளை ஓவியங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கீழ்வாளை ஓவியங்கள் என்பவை தமிழ்நாட்டில் விழுப்புரம்-திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் விழுப்புரத்திலிருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் உள்ள கீழ்வாளை என்னும் கிராமத்தில் காணப்படும் பாறை ஓவியங்கள் ஆகும்.இந்த ஓவியங்கள் அக்கால மக்களின் வாழ்க்கை முறையினை அடிப்படையாககொண்டு வரையப்பட்டுள்ளன. பல்லாயிரம் ஆண்டுகளாக அனைத்து பருவ நிலைகளையும் தாங்கி இந்த ஓவியங்கள் சிறிதும் மங்காமல் காட்சியளிக்கின்றன. இப்பகுதி தற்போது இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் பாதுகாப்பில் உள்ளது.[சான்று தேவை]

காணப்படும் அம்சங்கள்[தொகு]

கீழ்வாளை ஓவியங்கள் ஒரு சிறு குன்றின் மீது அமைந்துள்ள இரண்டு பாறைகளுக்கிடையேயான பகுதியில் வரையப்பட்டுள்ளது. இவை அழியாத சிவப்பு மையினால் வரையப்பட்டுள்ளன. ஆண், பெண், ஆடு, மாடுகள், சூரியன், ஸ்வஸ்திக் சின்னம், கைகோர்த்து செல்லும் குடும்பம், மரம், விலங்கின் மேல் பவனி வரும் தலைவன், உடுக்கை வடிவம், மேலும் பல்வேறு வகையான குறியீடுகள் இப்பாறை ஒவியத்தில் வரையப்பட்டுள்ளன. ஆண் உருவம் அலங்கரிக்கப்பட்டு விலங்கின் மேல் பவனி வருவது போலவும் கீழே நின்றுகொண்டிருக்கும் மனிதன் அவ்விலங்கினை ஒரு கயிறால் பற்றிகொண்டு வருவது போலவும் உள்ளது. இதனைகொண்டு அக்கால மக்கள் விலங்கினை தங்களுக்கு பழக்கப்படுத்தி பயன்படுத்தியது புலனாகும். ஆணோ அல்லது பெண்ணோ உடை அணிந்தது போல ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளது அக்காலமக்கள் உடையிலும் அலங்காரத்திலும் கவனம் செலுத்தியருந்தது புலனாகின்றது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழ்வாளை_ஓவியங்கள்&oldid=1908707" இருந்து மீள்விக்கப்பட்டது