காசாக்கரையிலுள்ள நகரங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காசாக்கரையின் நிலப்படம்

காசாவிலுள்ள ஹமாஸ் அரசாங்கத்தின் ஆளுகைக்குட்பட்ட 5 ஆளுநரகங்களில் அடங்கும் நகரங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

வரலாறு[தொகு]

மேற்குக் கரை, காசாக்கரை ஆகியவை குறித்த 1995 ஆம் ஆண்டு இடைக்கால ஒப்பந்தங்களின் அடிப்படையில், பாலத்தீனியர்கள் அதிகம் வாழுமிடங்களுக்கான (நிலப்பரப்பு A மற்றும் B) பொதுமக்கள் விவகாரங்களை பலத்தீன தேசிய ஆணையம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. (கிழக்கு ஜெருசலத்தின் நகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் இங்கு விதிவிலக்கு ஆகும்) நிலப்பரப்பு Bக்கு உரிய பாதுகாப்பு விவகாரங்களுக்கு இசுரேல் பொறுப்பேற்றுக்கொண்டது.

பாலத்தீனிய புள்ளியியல் நடுவண் செயலகம் தனது அலுவல்முறை மக்கட்தொகை கணக்கெடுப்பினை 1997 ஆம் ஆண்டில் முதன்முதலாக செய்தது. அதன் பிறகு உத்தேசமான கணக்கீட்டின் அடிப்படையிலேயே மக்கட்தொகை குறித்த தரவு அறிவிக்கப்படுகிறது.[1] கடைசியாக 2006 ஆம் ஆண்டில் மக்கட்தொகை குறித்த தரவு வெளியிடப்பட்டது. 2007 ஆம் ஆண்டு நடந்த 'காசாவிற்கான போராட்டம்' நிகழ்விற்குப் பிறகு, ஹமாஸ் குழுவால் காசாக்கரை நிர்வகிக்கப்படுகிறது.

நகரங்களின் பட்டியல்[தொகு]

காசா நகரம்
பொதுப் பெயர் அரபு மொழி பெயர் ஆளுநரகம் ஆட்சி எல்லை மக்கட்தொகை (2006)[2]
பனி சுகெலா بني سهيلا கான் யூனிசு நிலப்பரப்பு A 32,800
பியிட் கனவுன் بيت حانون வடக்கு காசா நிலப்பரப்பு A 32,200
பியிட் லகியா بيت لاهيا வடக்கு காசா நிலப்பரப்பு A 59,500
டெயிர் அல்-பலா دير البلح தீர் அல்-பலகு ஆளுநரகம் நிலப்பரப்பு A 62,200
காசா நகரம் غزة هاشم காசா நிலப்பரப்பு A 830,700
ஜபலியா جباليا வடக்கு காசா நிலப்பரப்பு A 82,900
கான் யூனிசு خان يونس கான் யூனிசு நிலப்பரப்பு A 179,800
ரஃபா رفح ரஃபா நிலப்பரப்பு A 71,000

மேற்கோள்கள்[தொகு]

  1. "PCBS 1997 Census Final Result-Summary". Archived from the original on 2012-02-07. பார்க்கப்பட்ட நாள் 2012-05-03.
  2. PCBS Small Area Population Estimates 2004-2006