காசா ஆளுநரகம்
Appearance
காசா ஆளுநரகம் | |
---|---|
நாடு | பலத்தீன் |
காசா கவர்னரேட் (Gaza Governorate, அரபு மொழி: محافظة غزة Muḥāfaẓat Ġazza) என்பது பாலஸ்தீனத்தின் 16 ஆளுநரகங்களில் ஒன்றாகும். இது வட மத்திய காசா பகுதியில் உள்ளது. இது இஸ்ரேலின், வான்வெளி மற்றும் கடல் பிரதேசத்துடனான எல்லையைத் தவிர்த்து பாலஸ்தீனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. பாலஸ்தீனிய புள்ளிவிவர பணியகத்தின் படி, மாவட்டத்தின் மக்கள் தொகை 2006 இல் 505,700 ஆக இருந்தது. இதன் அனைத்து தொகுதிகளும் 2006 நாடாளுமன்றத் தேர்தலில் ஹமாஸ் இயக்கத்தினரால் வெல்லப்பட்டது. இதை முகமது கடோரா நிர்வகிக்கிறார்.
இந்த ஆளுநரகமானது ஒரு மாநகரம், மூன்று நகரங்கள் மற்றும் ஏராளமான அகதி முகாம்களைக் கொண்டுள்ளது.
வட்டாரங்கள்
[தொகு]மாநகரங்கள்
[தொகு]- காசா நகரம் (தலைநகரம்)
நகராட்சிகள்
[தொகு]- அல்-சஹ்ரா
கிராம சபைகள்
[தொகு]- ஜுஹோர் அட்-டிக்
- மதினத் அல்-அவ்தா
- அல்- முகராக்கா ( அபு மிடீன் )
அகதி முகாம்கள்
[தொகு]- அல்-சதி (முகாம்) (கடற்கரை முகாம்)