காக்கை வாகனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காக்கை வாகனம்
உரிய கடவுள்: சனீஸ்வரன்

காக்கை வாகனம் என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ சனீஸ்வரன் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும். இந்த வாகனம் சனீஸ்வர பரிகார தலங்களிலும், சில சிவாலயங்களில் மட்டுமே காணப்படுகிறது. [1] திருமகளின் அக்கா தவ்வை தெய்வத்திற்கும் காகம் வாகனமாகும். [2]

கோவில்களில் உற்சவ விழா[தொகு]

  • காரைக்கால் மாவட்டம் திருநல்லாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனீஸ்வரன் அனுகிரக மூர்த்தியாக உள்ளார். இக்கோயிலில் தங்க காக்கை வாகனம் உள்ளது. [3] சனிப்பெயர்ச்சி விழாக் காலத்தில் உற்சவர் சனீஸ்வரன் காக்கை வாகனத்தில் வசந்த மண்டபத்தில் காட்சி தருகிறார். [4]
  • பவானி சங்கமேசுவரர் கோயில்

இவற்றையும் காண்க[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hindu Gods Vaganas drawings
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

ஆதாரங்கள்[தொகு]

  1. புத்தகம்:தமிழகக் கோயில் வாகனங்கள். ஆசிரியர்:சக்கரவர்த்தி, பிரதீப். பக்கம் 37
  2. https://m.dinamalar.com/weeklydetail-amp.php?id=56732
  3. https://m.dinamalar.com/temple_detail.php?id=3825
  4. https://www.hindutamil.in/amp/news/spirituals/615824-thirunallaru-sanipeyarchi-festival.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=காக்கை_வாகனம்&oldid=3711868" இலிருந்து மீள்விக்கப்பட்டது