காக்காத்திய விலங்கியல் பூங்கா
திறக்கப்பட்ட தேதி | 1985 |
---|---|
இடம் | கன்னம்கொண்டா, வாரங்கல், தெலங்காணா |
பரப்பளவு | 47.5 ஏக்கர் |
அமைவு | 17°59′34″N 79°33′32″E / 17.99278°N 79.55889°E |
விலங்குகளின் எண்ணிக்கை | 405 |
உயிரினங்களின் எண்ணிக்கை | 41 |
உறுப்பினர் திட்டம் | மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் |
இணையத்தளம் | kakatiyazoologicalpark |
காகாதியா விலங்கியல் பூங்கா (வாரங்கல் வன விஞ்ஞான கேந்திரம் அல்லது வாரங்கல் மிருகக்காட்சி சாலை) என்பது இந்தியாவின் தெலங்காணாவின் வாரங்கல் கனம்கொண்டாவில் அமைந்துள்ள ஒரு மிருகக்காட்சிசாலையாகும்.[1]
வரலாறு[தொகு]
இயற்கையின் புனிதத்தைப் பாதுகாத்துப் பராமரிக்க வாரங்கல் மாவட்ட நிர்வாகம் இந்த மிருகக்காட்சிசாலையை உருவாக்கியுள்ளது. வாரங்கல் மிருகக்காட்சிசாலை 1985ல் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது.[2] இந்த மிருகக்காட்சிசாலை கல்வி மற்றும் பொழுதுபோக்கு மையமாகச் செயல்படுகிறது.
இந்திய மிருகக்காட்சிசாலை ஆணையம் 2010ல் இந்த மிருகக்காட்சிசாலையை தேசிய விலங்கியல் பூங்காவாக மாற்ற உத்தரவிட்டது. இதனை 2013க்குள் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டது.[3]
விலங்குகள் மற்றும் கண்காட்சிகள்[தொகு]
இந்த மிருகக்காட்சிசாலை சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குப் பல வகையான பறவைகள், விலங்குகள் மற்றும் ஊர்வன உள்ளன. இவற்றில் சில கரடி, சிறுத்தை, மான், ஆசியக் கறுப்புக் கரடி, தீக்கோழி, மயில்கள், காட்டுப்பூனை, ஆமை, ரியா, புறாக்கள், பொன்னிறக் குள்ளநரி, முதலைகள் போன்ற விலங்குகள் உள்ளன. மிருகக்காட்சிசாலையில் பட்டாம்பூச்சிப் பூங்காவும் உள்ளது.
போக்குவரத்து[தொகு]
மிருகக்காட்சிசாலையில் மிகச் சிறந்த போக்குவரத்து வசதி உள்ளது. தெலங்காணா மாநில சாலை போக்குவரத்துக் கழகம் உட்படப் பல தனியார் சேவைகள் மிருககாட்சி சாலையினை பிற நகரங்களுடன் இணைக்கின்றன. அருகிலுள்ள தொடருந்து நிலையம் காசிபேட் சந்திப்பு தொடருந்து நிலையமாகும். இது மிருகக்காட்சிசாலையில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Archived copy". http://www.exploretelangana.com/vana-vigyan-park-a-nature-park-of-warangal-telangana-tourism/.
- ↑ "Kakatiya Zoo likely to get tigers or lions". https://telanganatoday.com/kakatiya-zoo-likely-to-get-tigers-or-lions.
- ↑ "Warangal zoo to become National Park". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/cities/hyderabad/2012/mar/01/warangal-zoo-to-become-national-park-344797.html. பார்த்த நாள்: 19 December 2018.