கஸ்தூரி பாலாஜி
கஸ்தூரி பாலாஜி (Kasturi Balaji) (பிறப்பு 1955) ஒரு இந்திய இதழியலாளரும், வெளியீட்டாளரும் ஆவார். இவர் மார்ச் 20, 2010 முதல் தி இந்துவின் நிர்வாக இயக்குநராக உள்ளார் [1]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]பாலாஜி, 1955 இல் கோ. கஸ்தூரி - கமலா ஆகியோருக்கு பிறந்தார். சென்னை, இலயோலாக் கல்லூரியில் வணிகவியலிலும், பின்னர் மும்பை பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக மேலாண்மை பட்டமும் பெற்றார்.
தொழில்
[தொகு]பாலாஜி, 1977இல் தி இந்துவில் சேர்ந்தார். 1991 வரை இவர் செய்தித்தாள் மற்றும் பத்திரிகைத் தயாரிப்புடன் தொடர்பிலிருந்தார். மை உற்பத்தி ஆலை அமைப்பதில் இவர் முக்கிய பங்கு வகித்தார்.
1991 முதல் 2000 வரை, பாலாஜி சங்க கிராபிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும், 2000 முதல் 2010 வரை, தி இந்து பத்திரிகையை வெளியிட்ட கஸ்தூரி அண்ட் சன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார். இவர் உற்பத்தி, ஈடிபி, கணக்குகள், விநியோகம் ஆகியவற்றை கவனித்து வருகிறார்.
இதையும் காண்க
[தொகு]- எ. இரங்கசுவாமி ஐயங்கார்
- சௌ. பார்த்தசாரதி
- கோ. நரசிம்மன்
- கோபாலன் கஸ்தூரி
- க. கோபாலன்
- மு. வீரராகாவாச்சாரியார்
- எஸ். கஸ்தூரி ரங்க ஐயங்கார்
- சீ. இரங்கசுவாமி ஐயங்கார்
- சீ. இரங்கராஜன்
- கஸ்தூரி சீனிவாசன்
மேற்கோள்கள்
[தொகு]குறிப்புகள்
[தொகு]- "Kasturi Balaji". World Association of Newspapers and News Publishers.[தொடர்பிழந்த இணைப்பு]