எஸ். கஸ்தூரி ரங்க ஐயங்கார்
எஸ். கஸ்தூரி ரங்க ஐயங்கார் | |
---|---|
பிறப்பு | கும்பகோணம், சென்னை மாகாணம் | 15 திசம்பர் 1859
இறப்பு | 12 திசம்பர் 1923 சென்னை, பிரித்தானிய இந்தியா | (அகவை 63)
பணி | வழக்கறிஞர், ஊடகவியலாளர் |
அறியப்படுவது | ஊடகவியல், அரசியல் இயக்கம் |
பிள்ளைகள் | கஸ்தூரி சீனிவாசன், க. கோபாலன் |
எஸ். கஸ்தூரி ரங்க ஐயங்கார் (S. Kasturi Ranga Iyengar) (15 திசம்பர் 1859 - 12 திசம்பர் 1923) ஓர் இந்திய வழக்கறிஞரும், இந்திய சுதந்திர ஆர்வலரும், அரசியல்வாதியும், பத்திரிகையாளரும் ஆவார், இவர் 1905 ஏப்ரல் 1 முதல் 1923 திசம்பரில் தான் இறக்கும் வரை தி இந்துவின் நிர்வாக இயக்குநராக பணியாற்றினார்.
குடும்பம்
[தொகு]இவரது சகோதரர், திவான் பகதூர் சே. சீனிவாச ராகவையங்கார், சென்னை மாகாணத்தில் பத்திரப்பதிவுத் துறையில் தலைமை இயக்குநராக பணியாற்றினார்.[1]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]கஸ்தூரி ரங்க ஐயங்கார் 1859 திசம்பர் 15 அன்று கும்பகோணத்தில் இன்னாம்பூர் என்ற கிராமத்தில் பிறந்தார். கல்வி முடிந்ததும், இவர் ஒரு வழக்கறிஞராக பயிற்சியைத் தொடங்க கோயம்புத்தூர் சென்றார்.[1] இவர் ஒரு வளமான தொழிலை தேடி சென்னைக்குச் சென்றார். தான் கோயம்புத்தூரில் இருந்ததைப் போல சென்னையில் வெற்றிபெறவில்லை. இறுதியில், 1895 ஆம் ஆண்டில், ஜி. சுப்பிரமணிய ஐயரால் நடத்தப்பட்டு வந்த தி இந்துவில் சேர்ந்து அதன் சட்ட நிருபர் ஆனார். இவர், இந்துவில் "கோயம்புத்தூர் கடிதங்கள்" நன்கு அறியப்பட்ட கட்டுரையை எழுதினார். இந்த காலகட்டத்தில், கோ. கருணாகர மேனனிடமிருந்து இவருக்கு ஏராளமான ஊக்கமும் கிடைத்தது. இந்து செய்தித்தாளை 1 ஏப்ரல் 1905 அன்று ரூ. 75,000 கொடுத்து வாங்கினார்.[2] பின்னர், தி இந்து பத்திரிகையின் ஆசிரியராகி மக்களின் சக்திவாய்ந்த குரலாக மாறினார்.[3]
நிர்வாக இயக்குநராக
[தொகு]ஜூலை 1905 இல், கஸ்தூரி ரங்க ஐயங்கார் தனது மருமகன் எ. இரங்கசுவாமி ஐயங்காரை பத்திரிக்கையின் உதவி ஆசிரியராக நியமித்தார்.[4] பின்னர், விளம்பரங்களை அதிகரித்து, முன்கூட்டியே பணம் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கான சந்தாக்களை நிறுத்துவதன் மூலம் பத்திரிக்கையை மீட்பதற்கு திட்டமிட்டார். இது வெற்றி பெற்று 1910 வாக்கில் தனது கடன்களை தீர்க்க முடிந்தது. ராய்டர்ஸ் என்ற செய்தி நிறுவனத்திடம், வானிலை அறிக்கைகள், நீதிமன்ற வழக்குகள், வர்த்தகம், விளையாட்டுகளுக்கான செய்திகளை பெற்று இந்துவில் இடம்பெறச் செய்தார். 1905 ஆம் ஆண்டில், தி இந்து, அதன் தலையங்கத்தில், இந்தியாவுக்கு முழுச் சுதந்திரம் கேட்காமல் பகுதி சுயாட்சியைக் கோரியது. அன்னி பெசண்ட்டையும் அவரது பிரம்மஞான சபையையும் கடுமையாக விமர்சித்தார். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியை மைத்ரேய புத்தராக இவர் செய்த பகிரங்க விளம்பர பிரச்சாரம் உட்பட. இருப்பினும், அன்னி பெசண்ட்டின் ஹோம் ரூல் இயக்கத்திற்கு ஆதரவை வழங்கியதுடன், பென்ட்லேண்ட் பிரபுவின் உத்தரவின் பேரில் அவர் தடுத்து வைக்கப்படுவதை எதிர்த்தார். ஜலியன்வாலா பாக் படுகொலைகளை இந்து கடுமையாக கண்டனம் செய்தது.
இறப்பு
[தொகு]கஸ்தூரி ரங்க ஐயங்கார் தனது 64 வது பிறந்தநாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் 1923 திசம்பர் 12 அன்று காலமானார். [5] [6] இவருக்குப் பிறகு ஆசிரியராக இவரது மருமகன் சீ. இரங்கசுவாமி ஐயங்கார் பொறுப்பேற்றார். இவரது மூத்த மகன் கஸ்தூரி சீனிவாசன் தி இந்துவின் நிர்வாக இயக்குநரானார்.
இவரது சந்ததியினர் இப்போது தங்கள் குடும்ப நிறுவனமான கஸ்தூரி & சன்ஸ் லிமிடெட் மூலம் தி இந்து குழுமத்தை நடத்தி வருகிறார்கள்.
இதையும் காண்க
[தொகு]- எ. இரங்கசுவாமி ஐயங்கார்
- சௌ. பார்த்தசாரதி
- கஸ்தூரி பாலாஜி
- கோ. நரசிம்மன்
- கோபாலன் கஸ்தூரி
- க. கோபாலன்
- மு. வீரராகாவாச்சாரியார்
- சீ. இரங்கசுவாமி ஐயங்கார்
- சீ. இரங்கராஜன்
- கஸ்தூரி சீனிவாசன்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Some Madras Leaders, Pg 43
- ↑ "Looking back:MAKING NEWS THE FAMILY BUSINESS". தி இந்து. 13 September 2003 இம் மூலத்தில் இருந்து 7 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121107214243/http://www.hindu.com/thehindu/th125/stories/2003091300800200.htm.
- ↑ Gopal, Madan (1990). K.S. Gautam (ed.). India through the ages. Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India. p. 164.
- ↑ "Looking back:MAKING NEWS THE FAMILY BUSINESS". தி இந்து. 13 September 2003 இம் மூலத்தில் இருந்து 7 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121107214243/http://www.hindu.com/thehindu/th125/stories/2003091300800200.htm."Looking back:MAKING NEWS THE FAMILY BUSINESS" பரணிடப்பட்டது 2012-11-07 at the வந்தவழி இயந்திரம். The Hindu. 13 September 2003.
- ↑ S. Muthiah. "Looking bck: A clarion call against the Raj".
- ↑ Appiah S. Kuppuswami (1980). The crest jewel of divine Dravidian culture. Sri Venkateswar Book Depot. p. xxvii.
குறிப்புகள்
[தொகு]- Some Madras Leaders. Babu Bishambher Nath Bhargava. 1922.
மேலும் படிக்க
[தொகு]- V. K. Narasimhan (1963). Kasturi Ranga Iyengar. Ministry of Information and Broadcasting, Government of India.