கோபாலன் கஸ்தூரி
கோபாலன் கஸ்தூரி | |
---|---|
பிறப்பு | சென்னை, பிரித்தானிய இந்தியா | 17 திசம்பர் 1924
இறப்பு | 21 செப்டம்பர் 2012 சென்னை, இந்தியா | (அகவை 87)
பணி | ஊடகவியலாளர் |
அறியப்படுவது | ஊடகவியல் |
கோபாலன் கஸ்தூரி (Gopalan Kasturi) (17 திசம்பர் 1924 - 21 செப்டம்பர் 2012) ஓர் இந்திய பத்திரிகையாளர் ஆவார் . இவர் 1965 முதல் 1991 வரை தி இந்துவின் ஆசிரியராக பணியாற்றினார். இந்துவின் வரலாற்றில் இன்றுவரை, இவர் செய்தித்தாளின் மிக நீண்ட காலம் பணியாற்றிய ஆசிரியர் ஆவார்.[1]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]கஸ்தூரி, 1924 திசம்பர் 17 அன்று சென்னையில் க. கோபாலன்- இரங்கநாயகி தம்பதியருக்கு பிறந்தார். கஸ்தூரி குடும்பத்தின் தலைவரான எஸ். கஸ்தூரி ரங்க ஐயங்கரின் பேரன் ஆவார். இவர் பிறப்பதற்கு ஒரு வருடம் முன்பு இவரது தாத்தா இறந்தார். இவர், சென்னை, மாநிலக் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர், குடும்ப செய்தித்தாளான தி இந்துவில் சேர்ந்தார்.
இவர், கமலா என்பவரை மணந்தார். இவர்களுக்கு க. பாலாஜி, க. வேணுகோபால் என்ற இரண்டு மகன்களும் லட்சுமி ஸ்ரீநாத் என்ற ஒரு மகளும் உள்ளனர். இவரது மூத்த சகோதரரான, கோ. நரசிம்மன், 1959 முதல் 1977 வரை இந்துவில் நிர்வாக இயக்குனராகப் பணியாற்றினார்.
ஆசிரியர்
[தொகு]இவர், 1965ஆம் ஆண்டில் இந்துவின் ஆசிரியர் சௌ. பார்த்தசாரதியின் சிறுவயது இறப்புக்குப் பின்னர் ஆசிரியரானார். இவர், 1965 முதல் 1991 வரை அதன் ஆசிரியராக பணியாற்றினார். 1991இல் ஓய்வு பெற்றார். இவருக்குப் பிறகு ந. இரவி ஆசிரியரானார்.
இறப்பு
[தொகு]கஸ்தூரி, 21 செப்டம்பர் 2012 அன்று தனது 88 வயதில் சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார். [2] தி இந்து செய்தித்தாள் நிறுவப்பட்ட 134 வது ஆண்டு நிறைவுக்கு ஒரு நாள் கழித்து இவரது மரணம் ஏற்பட்டது.
இதையும் காண்க
[தொகு]- எ. இரங்கசுவாமி ஐயங்கார்
- சௌ. பார்த்தசாரதி
- கஸ்தூரி பாலாஜி
- கோ. நரசிம்மன்
- க. கோபாலன்
- மு. வீரராகாவாச்சாரியார்
- எஸ். கஸ்தூரி ரங்க ஐயங்கார்
- சீ. இரங்கசுவாமி ஐயங்கார்
- சீ. இரங்கராஜன்
- கஸ்தூரி சீனிவாசன்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ T. S. Subramanian (10 October 2003). The Hindu at 125. 20. http://hindu.com/fline/fl2020/stories/20031010005512800.htm.
- ↑ "Former Editor G. Kasturi passes away". The Hindu. 21 September 2012. https://www.thehindu.com/news/national/former-editor-g-kasturi-passes-away/article3919690.ece?homepage=true. பார்த்த நாள்: 18 July 2018.
குறிப்புகள்
[தொகு]- Who's who in India. Guide Publications. 1966. p. 207.