கவுந்தி அடிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கவுந்தி அடிகள் சிலப்பதிகாரக் கதை மாந்தர்களுள் ஒருவர். கோவலனையும் கண்ணகியையும் மதுரைக்கு கூட்டி வருவது கவுந்தி அடிகளேயாகும். வரும் வழியில் சிலர் கண்ணகியையும் கோவலனையும் பார்த்து வினவ கவுந்தி அடிகளோ "இவர்கள் எம் மக்கள்" என்கிறார். கேட்டவர்களோ "உம் மக்கள் ஒருவரையொருவர் மணமுடிப்பரோ" என்று கேலி பேச அவர்களை நரிகளாகுமாறு சாவிக்கிறார். இது இவரது தவவலிமைக்கு தக்க சான்றாகும். பின்னர் மாதரி என்னும் விருந்தோம்பலில் சிறந்த பெண் வீட்டில் கண்ணகியை தங்கவும் வைக்கிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கவுந்தி_அடிகள்&oldid=1839463" இருந்து மீள்விக்கப்பட்டது