கல் ஹோ நா ஹோ
கல் ஹோ நா ஹோ | |
---|---|
![]() பட வெளியீட்டுச் சுவரொட்டி | |
இயக்கம் | நிகில் அத்வானி |
தயாரிப்பு | யாஷ் ஜோகர் |
கதை | கதை மற்றும் திரைக்கதை: கரண் ஜோஹர் உரையாடல்கள்: நிரஞ்சன் ஐயங்கார் |
கதைசொல்லி | பிரீத்தி சிந்தா |
இசை | சங்கர்-இஷான் -லாய் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | அனில் மேத்தா |
படத்தொகுப்பு | சஞ்சய் சன்க்லா |
கலையகம் | தர்மா புரடக்சன்ஸ் |
விநியோகம் | யாஷ் ராஜ் பிலிம்சு (வெளிநாடு) |
வெளியீடு | 28 நவம்பர் 2003 |
ஓட்டம் | 187 நிமிடங்கள்[1] |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
ஆக்கச்செலவு | ₹28–32 கோடி[2][3] |
மொத்த வருவாய் | ₹86.09 கோடி (ஆரம்ப வெளியீடு) ₹5.60 கோடி (மறு வெளியீடு)[4] |
கல் ஹோ நா ஹோ (Kal Ho Naa Ho) என்பது 2003 ஆம் ஆண்டு இந்தி மொழியில் வெளியான காதல் நகைச்சுவை நாடகத் திரைப்படமாகு. இதனை அறிமுக இயக்குனர் நிகில் அத்வானி இயக்கியிருந்தார். கரண் ஜோஹர் மற்றும் நிரஞ்சன் அய்யங்கார் திரைக்கதை எழுத, தர்மா புரொடக்டசன்ஸ் கீழ் யாஷ் ஜோஹர் தயாரித்தார். இத்திரைப்படத்தில் ஷாருக்கான், சைஃப் அலி கான் மற்றும் ப்ரீத்தி ஜிந்தா ஆகியோர் நடித்துள்ளனர், ஜெயா பச்சன், சுஷ்மா சேத், ரீமா லாகு, லில்லெட் துபே மற்றும் டெல்னாஸ் இரானி ஆகியோரும் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
28 நவம்பர் 2003 வெளியிடப்பட்ட கல் ஹோ நா ஹோ திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இது ₹860.9 மில்லியன் (US$18.8 மில்லியன்) வசூலித்தது, மேலும் அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த இந்தி திரைப்படம் மற்றும் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது. இந்தப் படம் வெளிநாடு வாழ் இந்தியர்கள், சாதி மறுப்புத் திருமணம் மற்றும் ஓரினச்சேர்க்கை ஆகியவற்றை மறைமுகமான பேச்சுக்கள் மற்றும் ஓரினச்சேர்க்கை பிணைப்பு மூலம் ஆராய்கிறத.. இது இரண்டு தேசிய திரைப்பட விருதுகள், எட்டு பிலிம்பேர் விருதுகள், பதின்மூன்று சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள், ஆறு தயாரிப்பாளர்கள் கில்ட் திரைப்பட விருதுகள் மற்றும் மூன்று திரை விருதுகள் மற்றும் 2004 ஆம் ஆண்டில் இரண்டு ஜீ சினி விருதுகளை வென்றது.
நடிகர்கள்
[தொகு]செய பாதுரி பச்சன், ஷாருக்கான், சைஃப் அலி கான் மற்றும் பிரீத்தி சிந்தா ஆகியோர் டிசம்பர் 2002 இல் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.[5]
தயாரிப்பிற்கு முந்தைய வேலைகள் 2003 ஆம் ஆரம்பிக்கப்பட்டன. ஊதியப் பிரச்சனை தொடர்பாக கரீனா கபூர் படத்திலிருந்து விலகினார்.[6] பின்னர், பிரீத்தி ஜிந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[7]
நியூயார்க் நகரத்தில் 2003 ஆம் ஆண்டு படப்பிடிப்பு ஆரம்பமானது. அங்கு தயாரிப்பு செலவுகள் அதிகமாக இருந்த காரணத்தால் திரைப்படத்தின் பெரும் பகுதிகள் டொராண்டோ நகரத்தில் படமாக்கப்பட்டன.[8]
இசை
[தொகு]சங்கர்-ஈசன்-லாய் ஆகிய மூவரும் இசையமைத்த ஏழு அசல் பாடல்களும், ஜாவேத் அக்தர் எழுதிய பாடல்களும் படத்தில் இடம்பெற்றிருந்தன.[a][10] பாடல் தொகுப்பை சோனி மியூசிக் இந்தியா செப்டம்பர் 27,2003 அன்று வெளியிட்டது [11] பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது.
வரவேற்பு
[தொகு]கல் ஹோ நா ஹோ படம் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இயக்கம், கதை, திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு மற்றும் நடிப்பு ஆகியவை அதிக கவனத்தை ஈர்த்தன.[12] திரைப்பட விமர்சகரும் எழுத்தாளருமான அனுபமா சோப்ரா அத்வானியின் இயக்கத்தைப் பாராட்டி தனது இந்தியா டுடே மதிப்பாய்வில் எழுதியிருந்தார். படத்தின்தொழில்நுட்ப அம்சங்களை அவர் பாராட்டிய போதிலும், படத்தின் முதல் பாதி மற்றும் அதன் துணைக் கதைகளை விமர்சித்தார்.[13]
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
[தொகு]51வது தேசிய திரைப்பட விருதுகளில், சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை சங்கர்-இசான்-லாய் பெற்றனர். மேலும் சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான விருதையும் சோனு நிகம் பெற்றார்.[14] 49வது பிலிம்பேர் விருதுகளில் கல் ஹோ நா ஹோ பதினொரு பரிந்துரைகளைப் பெற்றது, மேலும் எட்டு விருதுகளை வென்றது - அந்த ஆண்டின் எந்தப் படத்திற்கும் இல்லாத அதிகபட்ச விருது, இதில் அடங்கு. சிறந்த நடிகை (ஜிந்தா) சிறந்த துணை நடிகர் (சைஃப் அலி கான்) மற்றும் சிறந்த துணை நடிகை (பச்சன்).[15] 5வது சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகளில் பதினாறு பரிந்துரைகளில் பதின்மூன்று பரிந்துரைகளை இந்த படம் வென்றது. சிறந்த படம், சிறந்த நடிகை (ஜிந்தா) சிறந்த துணை நடிகர் (சைஃப் அலி கான்) மற்றும் சிறந்த துணை நடிகை (பச்சன்).[16][17]
குறிப்புகள்
[தொகு]- ↑ Shankar–Ehsaan–Loy is a trio consisting of சங்கர் மகாதேவன், Ehsaan Noorani and Loy Mendonsa.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kal Ho Naa Ho". British Board of Film Classification. Archived from the original on 1 February 2022. Retrieved 1 February 2022.
- ↑ "KAL HO NAA HO". Archived from the original on 21 September 2024. Retrieved 29 November 2024.
- ↑ "Nikkhil Advani reveals Kal Ho Naa Ho cost Rs 32 crore, made the equivalent of thousands of crores in revenue: 'It gave equity to Dharma'". 12 November 2024. Archived from the original on 14 November 2024. Retrieved 29 November 2024.
- ↑ "Kal Ho Naa Ho Re-Release Box Office Collections 3rd Weekend: Shah Rukh Khan, Preity Zinta, Saif Ali Khan's film continues winning hearts; earns Rs 5.60 crore in 17 days". 2 December 2024. Archived from the original on 3 December 2024. Retrieved 9 December 2024.
- ↑ "Karan's new role". B4U. Archived from the original on 22 February 2003. Retrieved 27 December 2017.
- ↑ "SRK, Preity, Saif's love song". Rediff.com. Retrieved 2008-04-18.
- ↑ Verma, Sukanya (26 November 2003). "KHNH bigger than KMG? I hope!". Rediff.com. Retrieved 2008-04-18.
- ↑ Bhandari, Aparita (2004-01-06), "Bollywood extends its reach", Toronto Star, pp. CO7
{{citation}}
: CS1 maint: date and year (link) - ↑ "Ehsaan Noorani Calls Working with Shankar Mahadevan, Loy Spiritual". News18. 26 August 2017. Archived from the original on 7 January 2018. Retrieved 7 January 2018.
- ↑ Lalwani, Vicky (23 August 2013). "Shankar-Ehsaan-Loy out of Karan Johar's next". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 28 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20171228145530/https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Shankar-Ehsaan-Loy-lose-yet-another-Karan-Johar-project/articleshow/21993964.cms.
- ↑ "The Kal Ho Naa Ho concert". ரெடிப்.காம். 30 September 2003. Archived from the original on 28 December 2017. Retrieved 28 December 2017.
- ↑ "14 years of 'Kal Ho Naa Ho': Dialogues that will always be etched in our hearts". Zee News. 28 November 2017. Archived from the original on 15 January 2018. Retrieved 15 January 2018.
- ↑ Chopra, Anupama (8 December 2003). "Beyond formula". இந்தியா டுடே. Archived from the original on 2 January 2018. Retrieved 2 January 2018.
- ↑ "51st National Film Awards 2004" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 7 January 2018. Retrieved 7 January 2018.
- ↑ "Filmfare Nominees and Winners" (PDF). பிலிம்பேர். pp. 116–119. Archived from the original (PDF) on 19 October 2015. Retrieved 7 January 2018.
- ↑ Kay, Jeremy (2 April 2004). "Kal Ho Naa Ho leads IIFA nominees". Screen Daily. Archived from the original on 7 January 2018. Retrieved 7 January 2018.
- ↑ "IIFA Through the Years – IIFA 2004 : Singapore". International Indian Film Academy. Archived from the original on 7 January 2018. Retrieved 7 January 2018.
நூல் ஆதாரங்கள்
[தொகு]- Ausaja, S. M. M. (2009). Bollywood in Posters. நொய்டா: Om Books International. ISBN 978-81-87108-55-9. Archived from the original on 7 April 2023. Retrieved 16 August 2019.
- Gopinath, Gayatri (2005). Impossible Desires: Queer Diasporas and South Asian Public Cultures. Durham, North Carolina: Duke University Press. ISBN 978-0-8223-8653-7. Archived from the original on 7 April 2023. Retrieved 16 August 2019.
- Holtzman, Dina (2011). "Between Yaars: The Queering of Dosti in Contemporary Bollywood Films". In Mehta, Rini Bhattacharya; Pandharipande, Rajeshwari (eds.). Bollywood and Globalization: Indian Popular Cinema, Nation, and Diaspora. London: Anthem Press. ISBN 978-0-85728-782-3. Archived from the original on 7 April 2023. Retrieved 16 August 2019.
- Johar, Karan; Saxena, Poonam (2017). An Unsuitable Boy. குருகிராம்: Penguin Random House. ISBN 978-0-670-08753-2.
- Kumar, Anup (2013). "Bollywood and the Diaspora: The Flip Side Of Globalization and Cultural Hybridity In Kal Ho Naa Ho and Salaam Namaste". In Medina-Rivera, Antonio; Wilberschied, Lee (eds.). Constructing Identities: The Interaction of National, Gender and Racial Borders. கேம்பிரிட்ச்: Cambridge Scholars Publishing. ISBN 978-1-4438-5092-6. Archived from the original on 7 April 2023. Retrieved 16 August 2019.
- Ridda, Maria (2014). "Inside 'The Temple of Modern Desire': Recollecting and Relocating Bombay". In Viswamohan, Aysha Iqbal (ed.). Postliberalization Indian Novels in English: Politics of Global Reception and Awards. London: Anthem Press. ISBN 978-1-78308-334-3. Archived from the original on 7 April 2023. Retrieved 16 August 2019.
- Varia, Kush (2012). Bollywood: Gods, Glamour, and Gossip. New York City: Columbia University Press. ISBN 978-1-906660-15-4. Archived from the original on 7 April 2023. Retrieved 16 August 2019.
வெளி இணைப்புகள்
[தொகு]- Official Website
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் கல் ஹோ நா ஹோ
- பாக்சு ஆபிசு மோசோவில் கல் ஹோ நா ஹோ
- அழுகிய தக்காளிகளில் கல் ஹோ நா ஹோ