கல் உருக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல் உருக்கி செடி

கல் உருக்கி அல்லது கல்லுருக்கி (Scoparia dulcis), வாழைக் குடும்பத்தைச் சேர்ந்த மூலிகைச் செடியாகும்.[1] [2] இச்செடிகள் புவி முழுவதும் வளர்கிறது. இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் இதனை களையாக கருதினாலும், இச்செடி மூலிகை மருத்துவத்தில் சிறுநீரக கற்களை கரைப்பதற்கு அதிகம் பயன்படுகிறது.[3]இச்செடிகள் மண் வளம் அற்ற சரளை பூமியில் நன்கு விளைகிறது.

பாரம்பரிய மருத்துவப் பயன்பாடுகள்[தொகு]

இந்தியா மற்றும் தைவானில் இச்செடியின் இலைகள் இரத்த சர்க்கரை, இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.[4]ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் நாட்பட்ட சிறுநீரகக் கற்களை (kallurukki (stone melter) கரைத்து வெளியேற்றப் பயன்படுகிறது. பிரேசில் நாட்டில் மூல நோய்களுக்கும், அடிபட்ட காயங்களுக்கு மருந்தாக தரப்படுகிறது.[5]

படக்காட்சிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Scoparia dulcis". Natural Resources Conservation Service PLANTS Database. USDA. பார்க்கப்பட்ட நாள் 8 November 2015.
  2. Jain, Rakesh; Singh, Megh (1989). "Factors Affecting Goatweed (Scoparia dulcis) Seed Germination". Weed Science 37 (6): 766–70. doi:10.1017/S0043174500072817. https://archive.org/details/sim_weed-science_1989-11_37_6/page/766. 
  3. Majumder, S; Rahman, MM; Bhadra, SK (2011). "Micropropagation of Scoparia dulcis Linn. through induction of indirect organogenesis". Asia-Pacific Journal of Molecular Biology and Biotechnology 19 (1): 11–7. http://www.msmbb.org.my/apjmbb/html191/191b.pdf. 
  4. Pari, Leelavinothan; Latha, Muniappan (2004). "Protective role of Scoparia dulcis plant extract on brain antioxidant status and lipidperoxidation in STZ diabetic male Wistar rats". BMC Complementary and Alternative Medicine 4: 16. doi:10.1186/1472-6882-4-16. பப்மெட்:15522116. 
  5. Freire, SM; Torres, LM; Souccar, C; Lapa, AJ (1996). "Sympathomimetic effects of Scoparia dulcis L. And catecholamines isolated from plant extracts". The Journal of Pharmacy and Pharmacology 48 (6): 624–8. doi:10.1111/j.2042-7158.1996.tb05985.x. பப்மெட்:8832498. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்_உருக்கி&oldid=3874557" இலிருந்து மீள்விக்கப்பட்டது