மூலம் (நோய்)
மூலம் Hemorrhoids | |
---|---|
வரைபடம் மூலம் ஏற்பட்டுள்ள உள் மற்றும் வெளி குத அமைப்புக்களைக் காட்டுகின்றது | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | general surgery |
ஐ.சி.டி.-10 | I84. |
ஐ.சி.டி.-9 | 455 |
நோய்களின் தரவுத்தளம் | 10036 |
மெரிசின்பிளசு | 000292 |
ஈமெடிசின் | med/2821 emerg/242 |
பேசியண்ட் ஐ.இ | மூலம் (நோய்) |
ம.பா.த | D006484 |
மூலம் (HEMORROIDS), என்பது ஆசன வாயிலுள்ளும், வெளியிலும் தேவையற்ற சதைகள் வளர்ந்து குத வாயிலை அடைத்துத் துன்புறுத்துவக்கூடியது. மூல நோய் மலச் சிக்கலாலும், மரபு வழியாகவும் தோன்றக் கூடியது.[1]
மூல நோயை உள்மூலம், ( Internal piles ), வெளிமூலம் ( External piles ), பவுத்திர மூலம் ( Fistula ) மூன்று வகைகள் உள்ளது. அறுவை சிகிச்சையால் மட்டுமே மூல நோய்கள்களைக் குணப்படுத்த இயலும்.
உள் மூலம்
[தொகு]மலத் துளையின் உட்பகுதியில் சவ்வு படர்ந்து, மலம் கழிக்கும்போது மலக் குழாயின் உட்புறம் உள்ள தசைகள் உப்பி வெளிப்புறம் நீண்டு வரும். இதனால் மலம் வெளிப்படுதல் சிக்கலாகி இரத்தம் வெளியேறும்.
வெளி மூலம்
[தொகு]மலத்துளையின் அருகில் சிறிது சதை வளர்ந்து தொங்கும். இப்பகுதியில் அடிக்கடி அரிப்பு ஏற்படுவதுடன், மலம் வெளியேறும்போது இரத்தமும் சிந்தும்.
பவுத்திர மூலம் (FISTULA)
[தொகு]உள் மூலம் முதிர்வதால் பவுத்திரம் தோன்றுகிறது. பவுத்திர நோய் தோன்றுகையில் மலத்துளையைச் சுற்றிக் கண்ணுக்குத் தெரியாத சிறு சிறு துளைகள் தோன்றி அதனின்று தூய்மையற்ற சீழ் வெளிவரும்.
மேற்கோள்கள்
[தொகு]வெளியிணைப்பு
[தொகு]