கல்வியின் மூலம் பள்ளி வன்முறையைத் தடுத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடந்த 12 மாதங்களில் கொடுமைப்படுத்துதலை அனுபவித்த சிறுவர் மற்றும் சிறுமிகளின் சதவீதம்

கல்வியின் மூலம் பள்ளி வன்முறையைத் தடுத்தல் (School violence prevention through education) என்பது கல்வித் துறையில் விரிவான அணுகுமுறைகள் மற்றும் தலையீடுகள் மூலம் வன்முறை மற்றும் கொடுமைப்படுத்துதலைக் குறைக்கும் முயற்சியாகும். இது பாதுகாப்பான மற்றும் வன்முறையற்ற கற்றல் சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. [1]

பின்னணி[தொகு]

பள்ளி வன்முறை என்பது உடல், உளவியல் மற்றும் பாலியல் வன்முறை மற்றும் கொடுமைப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இது, எல்லா நாடுகளிலும் நிகழ்கிறது.பாலினம் மற்றும் சமூக விதிமுறைகள் மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வு, வருமானப் பற்றாக்குறை, ஓரங்கட்டப்படுதல் மற்றும் மோதல்கள் போன்ற பரந்த கட்டமைப்பு ஆகியவை முதன்மையான காரணிகளாகும். ஒவ்வொரு ஆண்டும் 246 மில்லியன் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் ஏதேனும் ஒரு வடிவத்திலாவது பள்ளி வன்முறையை அனுபவிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. [2]

பள்ளிகளில் வன்முறை மற்றும் கொடுமைப்படுத்துதல் ஆகியவை குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் கல்வி மற்றும் சுகாதார உரிமை உள்ளிட்ட அவர்களின் உரிமைகளை மீறுகின்றன. பள்ளி வன்முறை மற்றும் கொடுமைப்படுத்துதல் பாதிக்கப்பட்டவர்களின் கல்வி செயல்திறன், உடல் மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவற்றினைப் பாதிக்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. [3] கற்றலுடன் ஒத்துப்போகாத பதகளிப்பு, பயம் மற்றும் பாதுகாப்பின்மை போன்ற சூழல் பரந்த பள்ளிச் சூழலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. [3] [4]

மேலும் பார்க்கவும்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. UNESCO (2019). Behind the numbers: ending school violence and bullying. UNESCO. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-92-3-100306-6. https://unesdoc.unesco.org/ark:/48223/pf0000366483. 
  2. UNESCO (2017). School violence and bullying: global status report. UNESCO. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-92-3-100197-0. https://unesdoc.unesco.org/ark:/48223/pf0000246970?posInSet=1&queryId=da35db16-d0ae-444b-ae55-dd08f4de924e. 
  3. 3.0 3.1 UNESCO (2017). School violence and bullying: global status report. UNESCO. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-92-3-100197-0. https://unesdoc.unesco.org/ark:/48223/pf0000246970?posInSet=1&queryId=da35db16-d0ae-444b-ae55-dd08f4de924e. 
  4. Fry, Deborah, auteur.. Child protection and disability : methodological and practical challenges for research. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-78046-575-3. http://worldcat.org/oclc/1052491801.