வரம்பு மீறல்
வரம்பு மீறல் (Abuse) என்பது ஒரு பொருளின் நியாயமற்ற அல்லது முறையற்ற நன்மைகளைப் பெறுவதற்காக ஈடுபடும் செயல்பாடுகளைக் குறிப்பதாகும். [1] வரம்பு மீறல் என்பது உடல் அல்லது வாய்மொழி வாயிலாக தவறாக நடத்தல், காயம், தாக்குதல்,விதிமீறல், வன்கலவி, நியாயமற்ற நடைமுறைகள், குற்றங்கள் அல்லது பிற வகையான தீங்கு செய்தல் ஆகிய பல வடிவங்களில் நடைபெறலாம். சில ஆதாரங்கள் வரம்பு மீறுதல் என்பது "சமூக ரீதியாக கட்டமைக்கப்பட்டவை" என்று விவரிக்கின்றன, அதாவது வெவ்வேறு காலங்களிலும் சமூகங்களிலும் பாதிக்கப்பட்டவரின் துன்பத்தை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அங்கீகரிப்பதாக இருக்கலாம். [2]
வரம்பு மீறல் வகைகள் மற்றும் சூழல்கள்[தொகு]
அதிகார வரம்பு மீறல்[தொகு]
அதிகார வரம்பு மீறல் என்பதில் துன்புறுத்தல், குறுக்கீடு, அழுத்தம் மற்றும் பொருத்தமற்ற கோரிக்கைகள் அல்லது உதவிகள் கோருவது ஆகியவை அடங்கும். [3]
பிணத்தை தவறாகப் பயன்படுத்துதல்[தொகு]
நெக்ரோபிலியா என்பது இறந்த உடல்களின் மீது உருவாகும் பாலியல் ஈர்ப்பினைக் குறிப்பதாகும். இது பாலியல் வன்புறுத்தல்களுக்கு வழிவகுக்கிறது. சடலங்கள் ஒப்புதல் அளிக்க முடியாததால், எந்தவொரு கையாளுதலும், உறுப்புகளை அகற்றுவது, சிதைப்பது அல்லது இறந்த உடலில் செய்யப்படும் பாலியல் செயல்கள் வரம்பு மீறலாகக் கருதப்படுகிறது. [4]
விருப்புரிமை வரம்பு மீறல்[தொகு]
விருப்புரிமையின் வரம்பு மீறல் என்பது ஒரு குறிப்பிட்ட விடயத்துடன் தொடர்புடைய உண்மைகள் மற்றும் சட்டங்களை சரியான கருத்தில் எடுக்கத் தவறியதாகும்; தன்னிச்சையாகவோ அல்லது சரியான காரணம் இல்லாமலோ நீதித்துறை வழக்கத்திலிருந்து விலகுவதனைக் குறிப்பதாகும். [5]
ஆதிக்க வரம்பு மீறல்[தொகு]
நிறுவனங்களின் சந்தை மேலாதிக்கம் போட்டிச் சட்டத்தின் பொது மற்றும் தனியார் அமலாக்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது, இது நம்பிக்கையற்ற அல்லது தனியுரிமை எதிர்ப்புச் சட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.[சான்று தேவை]
இரகசிய வரம்பு மீறல்[தொகு]
இரகசிய வரம்புமீறல் என்பது பாலியல், உளத்தியல் அல்லது உடல் ரீதியான வன்புணர்வு ஆகியவற்றினைக் குறிக்கிறது. "இது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக இரகசியமாக வைக்கப்படுகிறது அல்லது மறைக்கப்படுகிறது." [6]
சான்றுகள்[தொகு]
- ↑ "Abuse – Defined at Merriam-Webster Dictionary".. (2013). Merriam-Webster, Incorporated. “abuse [may be defined as the following]...to treat (a person or animal) in a harsh or harmful way...[or] to use or treat (something) in a way that causes damage [or] to use (something) wrongly”
- ↑ Child Neglect and Emotional Abuse: Understanding, Assessment and Response. Sage. 2014.
- ↑ "Abuse of power or authority | United Nations Educational, Scientific and Cultural Organization". www.unesco.org. 2021-11-23 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Troyer, John (2008-05-01). "Abuse of a corpse: A brief history and re-theorization of necrophilia laws in the USA". Mortality 13 (2): 132–152. doi:10.1080/13576270801954518. பன்னாட்டுத் தர தொடர் எண்:1357-6275. https://doi.org/10.1080/13576270801954518.
- ↑ "Abuse of Discretion". Answers.encyclopedia.com. 18 July 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 5 December 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Forensic Glossary – C – Clandestine Abuse". Forensiceducation.com. 27 September 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. 5 December 2013 அன்று பார்க்கப்பட்டது.