உள்ளடக்கத்துக்குச் செல்

கல்பனா மோர்பாரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்பனா மோர்பாரியா
ஜேபி மோர்கன் நிறுவனத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி
பதவியில்
2008–2021[1]
பின்னவர்லியோ புரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு30 மே 1949 (1949-05-30) (அகவை 75)
முன்னாள் கல்லூரிசோபியா மகளிர் கல்லூரி,மும்பை
வேலைமுதன்மை செயல் அலுவலர், ஜேபி மோர்கன்

கல்பனா மோர்பாரியா (Kalpana Morparia) ஓர் இந்திய வங்கியாளர் ஆவார். இவர் முப்பத்து மூன்று ஆண்டுகளாக ஐசிஐசிஐ வங்கியுடன் தொடர்புடையவர். 2,1 டிரில்லியன் டாலர் அமெரிக்க நிறுவனத்தின் இந்திய விரிவாக்கமான ஜே. பி. மோர்கனின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். கல்பனா பல முன்னணி இந்திய நிறுவனங்களின் வாரியங்களில் சுயாதீன இயக்குநராக பணியாற்றுகிறார். மும்பை பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பட்டம் பெற்ற கல்பனா, இந்திய அரசால் அமைக்கப்பட்ட பல குழுக்களில் பணியாற்றியுள்ளார். ஃபார்ச்சூன் இதழ் சர்வதேச வணிகத்தில் ஐம்பது மிகவும் சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக இவரை தரவரிசைப்படுத்தியுள்ளது.[2][3][4][5]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

மூன்று சகோதரிகளில் இளையவரான கல்பனா மோர்பாரியா 30 மே 1949 அன்று பாவந்தாஸ் மற்றும் லட்சுமிபென் தன்னா ஆகியோருக்குப் பிறந்தார். சிறு வயதிலேயே இவரது தந்தை இறந்து விட்டார். தனது பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் அறிவியல் படிப்பதற்காக மும்பையின் சோபியா கல்லூரியில் சேர்ந்து அங்கு 1970 இல் வேதியியலில் இளமறிவியல் பட்டம் பெற்றார். பின்னர் இளங்கலைச் சட்டப் பட்டமும் பெற்றார்.

தொழில்[தொகு]

பட்டப்படிப்பை முடித்த பிறகு கற்பித்தலைத் தொடங்கினார். இவரது மூத்த சகோதரி பாருல் தாக்கர் சட்டம் படித்தவர். மேலும் வழக்கறிஞர் நிறுவனத்தில் தொடர்புடையவர். அதையே தானும் பின்பற்ற முடிவு செய்து சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். இதற்கிடையில், இவருக்கு ஜெய்சிங் என்பவருடன் திருமணம் நடந்தது. பின்னர் தனது சட்டப் பட்டப்படிப்பை முடித்தார். 1974 இல் மாதுபாய் ஜமியத்ரம் என்ற சட்ட நிறுவனத்திலும், மடோன் என்ற சட்ட நிறுவனத்திலும் சம்பளம் இல்லாமல் சேர்ந்தார். 1975 ஆம் ஆண்டில், கல்பனா ஐசிஐசிஐ வங்கியின் சட்டப் பிரிவில் பணியாற்ற சேர்ந்தார். 1991 இல் நிர்வாகம் இவரை அமெரிக்காவில் மூலதனச் சந்தையைப் படிக்க அமெரிக்காவிற்கு அனுப்பியது. அங்கு நியூயார்க்கின் டேவிட் போல்க் மற்றும் வார்டுவெல்லில் மூன்று மாதங்கள் பணியாற்றினார். 1999 இல் நியூயார்க் பங்குச் சந்தையில் ஐசிஐசிஐ வங்கி பட்டியலிடப்பட்டதற்கு கல்பனா அவர் காரணமாக இருந்தார்.[6]

தொழில் முன்னேற்றம்[தொகு]

கல்பனா 1975 முதல் 1994 வரை ஐசிஐசிஐயின் சட்டப் பிரிவில் பணியாற்றினார். 1996 இல் பொது மேலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் சட்டம், திட்டமிடல், கருவூலம் மற்றும் பெருநிறுவனத் தொடர்பு ஆகிய துறைகளின் பொறுப்பாளராக இருந்தார். 1998 இல், ஐசிஐசிஐயின் மூத்த பொது மேலாளராக நியமிக்கப்பட்டார். மே 2001 இல் அதன் இயக்குநர்கள் குழுவில் சேர்ந்தார். மே 2002 இல், நிர்வாக இயக்குநராக கல்பனாவை வாரியம் நியமித்தது. மீண்டும் 2006 ஏப்ரலில் துணை நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு இணை நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். பின்னர் பெருநிறுவன மையத்தின் பொறுப்பாளராக இருந்தார். இன்று அவர் ஜேபி மோர்கனின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். டாடா கன்சல்டன்சியின் சிஎம்சி லிமிடெட் டாக்டர் ரெட்டிஸ் லேப், பென்னட் & கோல்மன் ஆகியவற்றின் சுயாதீன இயக்குநராகவும் உள்ளார். ஏர்டெல்லின் சுனில் மித்தல் நடத்தும் பாரதி அறக்கட்டளையின் தொண்டுப் பணிகளை இவர் கவனித்து வருகிறார். இது பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பள்ளிகளை கட்டுவதில் ஈடுபட்டுள்ளது. மேலும், புறக்கணிக்கப்பட்ட பள்ளிகளை தத்தெடுக்கிறது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Leo Puri to take over as Chairman of JP Morgan". thehindubusinessline.com. 27 May 2020. பார்க்கப்பட்ட நாள் 3 Jul 2021 – via thehindubusinessline.com/news.
  2. "MOSTPOWERFUL WOMEN". fortuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 3 Jul 2021 – via fortuneindia.com.
  3. "The Complete Businesswoman" (PDF). chitralekha.com. பார்க்கப்பட்ட நாள் 3 Jul 2021 – via chitralekha.com.
  4. "Kalpana Morparia to retire from JPM". indiatimes.com. 28 May 2020. பார்க்கப்பட்ட நாள் 3 Jul 2021 – via timesofindia.indiatimes.com.
  5. "Kalpana Morparia, an iconic banker, set to draw curtains on an illustrious career". moneycontrol.com. 28 May 2020. பார்க்கப்பட்ட நாள் 3 Jul 2021 – via moneycontrol.com/news.
  6. "Kalpana Morparia to retire from JPM". indiatimes.com. 28 May 2020. பார்க்கப்பட்ட நாள் 3 Jul 2021 – via timesofindia.indiatimes.com."Kalpana Morparia to retire from JPM".
  7. "Kalpana Morparia to retire from JPM". indiatimes.com. 28 May 2020. பார்க்கப்பட்ட நாள் 3 Jul 2021 – via timesofindia.indiatimes.com."Kalpana Morparia to retire from JPM".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்பனா_மோர்பாரியா&oldid=3967756" இலிருந்து மீள்விக்கப்பட்டது