கர்தார்பூர் தர்பார் சாகிப் குருத்துவார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கர்தார்பூர் தர்பார் சாகிப் குருத்துவார்
ਗੁਰਦੁਆਰਾ ਦਰਬਾਰ ਸਾਹਿਬ ਕਰਤਾਰਪੁਰ
گردوارا دربار صاحب کرتارپور
Kartarpur Guru Nanak.jpg
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலைப் பாணிசீக்கியக் கட்டிடக் கலை
நகர்கர்தார்பூர், பஞ்சாப்
நாடுபாக்கித்தான் பாகிஸ்தான்

கர்தார்பூர் தர்பார் சாகிப் குருத்துவார் (Gurdwara Darbar Sahib Kartarpur (பஞ்சாபி, உருது: گردوارا دربار صاحب کرتارپور) பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள் நாரோவல் மாவட்டத்தில், இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்புறத்தில் அமைந்த நகரமான கர்தார்பூரில் உள்ள சீக்கிய சமய குருத்துவார் ஆகும். இக்குருத்துவார் பாகிஸ்தான் நாட்டின் லாகூரிலிருந்து 120 கிமீ தொலைவிலும், [1] இந்திய நாட்டின் குர்தாஸ்பூர் மாவட்டம், தேரா பாபா நானக்கிலிருந்து 4 கிமீ தொலைவிலும் உள்ளது. இக்குருத்துவார் சீக்கியர்களின் மிக முக்கிய புனிதத்தலங்களில் ஒன்றாகும்.[2]

வரலாறு[தொகு]

கர்தார்பூர் நகரத்தில் 22 செப்டம்பர் 1539 அன்று மறைந்த சீக்கிய சமய நிறுவனர், குருநானக்கின்[3]சமாதி மீது தர்பார் சாகிப் குருத்துவார் நிறுவப்பட்டுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டின் அருகே கர்தார்பூரில் அமைந்த தர்பார் சாகிப் குருத்துவராவை, இந்தியப் பகுதியிலிருந்து கண்கூடாக பார்க்கலாம். [4]

தேரே பாபா சாகிப் நானக் குருத்துவார் - கர்தார்பூர் இணைப்புச் சாலை[தொகு]

இந்தியாவின் எல்லைப்புறத்தில் அமைந்த தேரா பாபா நானக் எனும் ஊரிலிருந்து, பாகிஸ்தானின் எல்லைப்புற நகரமாக கார்தார்பூரை இணைக்கும் சாலை அமைக்க, இந்திய - பாகிஸ்தான் அரசுகள் நவம்பர் 2018ல் அடிக்கல் நாட்டியுள்ளனர்.[5][6][7]

அமைவிடம்[தொகு]

ராவி ஆற்றின் கரையில் அமைந்த தேரா பாபா நானக் குருத்துவார், தேரா பாபா தொடருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவில் உள்ளது. இந்திய எல்லைப்புறத்திலிருந்து மிக மிக அருகில் உள்ளது.

கர்தார்பூர் தர்பார் சாகிப் நானக் குருத்துவாரை நிறுவ பாட்டியாலா மன்னர் சர்தார் புபீந்தர் சிங் ரூபாய் 1,35,600 நன்கொடையாக வழங்கினார். 2004ல் இக்குருத்துவார் முற்றிலும் சீரமைத்து கட்டப்பட்டது.

முக்கியத்துவம்[தொகு]

சீக்கிய சமயத்தை நிறுவிய குருநானக், கர்தார்பூர் தர்பார் சாகிப் நானக் குருத்துவார் அமைந்த கர்தார்பூரில் பதினெட்டு ஆண்டுகள் தங்கி சமயப் பரப்புரையை மேற்கொண்டுள்ளார். மேலும் குருநானக் தனது இறுதிக் காலத்தை 18 ஆண்டுகள் கர்தார்பூரில் கழித்து இறந்த பின், அவரது சமாதி மீது கர்தார்பூர் தர்பார் சாகிப் நானக் குருத்துவார் நிறுவப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]