கர்தார்பூர், பாகிஸ்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
town in India குறித்து அறிய, காண்க கர்தார்பூர், இந்தியா.
கர்தார்பூர்
کرتارپور
நகரம்
குரு நானக் அடக்கம் செய்யப்பட்ட கர்தார்பூர் குருத்துவார்.
குரு நானக் அடக்கம் செய்யப்பட்ட கர்தார்பூர் குருத்துவார்.
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Pakistan" does not exist.
ஆள்கூறுகள்: 32°05′N 75°01′E / 32.08°N 75.01°E / 32.08; 75.01ஆள்கூற்று: 32°05′N 75°01′E / 32.08°N 75.01°E / 32.08; 75.01
நாடு பாக்கித்தான்
மாகாணம்பஞ்சாப்
மாவட்டம்நரோவல்
ஏற்றம்155
நேர வலயம்பாகிஸ்தான் சீர் நேரம் (ஒசநே+5)

கர்தார்பூர் (Kartarpur) (உருது کرتارپور) பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின், நரோவல் மாவட்டத்தின், சகர்கர் வருவாய் வட்டத்தில், இந்திய-பாகிஸ்தான் எல்லையோரத்தில் அமைந்த நகரம் ஆகும். லாகூர் நகரத்திலிருந்து 180 கிமீ தொலைவில் கர்த்தார்பூர் நகரம் உள்ளத

இனக்குழுக்கள்[தொகு]

கர்தார்பூர் நகரத்தில் பஞ்சாபி மொழி மற்றும் உருது மொழி பேசும் சீக்கிய, இசுலாமிய குஜ்ஜர், ஜாட் மற்றும் முஸ்லீம் இராசபுத்திர இன மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

சமயம்[தொகு]

கர்தார்பூர் நகரத்தில் இசுலாமிய குஜ்ஜர் இன மக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். 1947 இந்திய விடுதலையின் போது, கர்தார் நகரத்தில் வாழ்ந்த சிறுபான்மை மக்களான சீக்கிய மற்றும் இந்து சமயத்தினர் இந்தியாவிற்கு புலம்பெயர்ந்தனர். மேலும் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு புலம்பெயர்ந்த இசுலாமியர்கள் கர்தார்பூர் நகரத்தில் குடியேறினர்.

வரலாறு[தொகு]

1522ல் சீக்கிய சமய நிறுவனரான குருநானக் கர்தார்பூர் நகரத்தை நிறுவினார்.[1] மேலும் கர்தார்பூர் நகரத்தில் இறந்த குருநானக் நினைவாக ஒரு தர்பார் சாகிப் குருத்துவார் கட்டப்பட்டது. [2]

கர்தார்பூர் - தேரே பாபா நானக் இணைப்புச் சாலைப் போக்குவரத்து திட்டம்[தொகு]

நவம்பர் 2019ல் குருநானக்கின் 550-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, கர்தார்பூருக்கும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் மாவட்டத்தின், பாகிஸ்தான் எல்லைப் புற நகரான தேரா பாபா நானக் நகரத்தை இணைக்கும் பன்னாட்டு சாலைப்போக்குவரத்து அமைக்க இந்திய-பாகிஸ்தான் அரசுகள் அடிக்கல் நாட்டியுள்ளது. [3][4]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]