கரோலினா குச்சார்சிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரோலினா குச்சார்சிக்
2013இல் ஒரு போட்டியாளராக குச்சார்சிக்
தனிநபர் தகவல்
தேசியம்போலந்து
பிறப்பு24 ஏப்ரல் 1991 (1991-04-24) (அகவை 32)
இராவிச், போலந்து
விளையாட்டு
விளையாட்டுதடகளம்
மாற்றுத்திறன் வகைப்பாடுடி 20
நிகழ்வு(கள்)நீளம் தாண்டுதல்
பயிற்றுவித்ததுஜ்பிக்னியூ லெவ்கோவிச் (தேசியம்)
டேரியஸ் கோர்ஸ்கி (உள்ளூர்)
பதக்கத் தகவல்கள்
இணை ஒலிம்பிக் தடகளப் போட்டிகள்
நாடு  போலந்து
இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2012 இலண்டன் மகளிர் நீளம் தாண்டுதல் எப் 20
மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச தடகளப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2013 லியோன் மகளிர் நீளம் தாண்டுதல் டி20
தங்கப் பதக்கம் – முதலிடம் 2015 தோகா மகளிர் நீளம் தாண்டுதல் டி20
தங்கப் பதக்கம் – முதலிடம் 2019 துபாய் மகளிர் நீளம் தாண்டுதல் டி20
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2011 கிறைஸ்ட்சேர்ச் மகளிர்
மாற்றுத் திறனாளிகளுக்கான ஐரோப்பியப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2012 ஸ்டாட்கனால் மகளிர் நீளம் தாண்டுதல் டி20
தங்கப் பதக்கம் – முதலிடம் 2016 கிரெசெட்டோ மகளிர் நீளம் தாண்டுதல் டி20

கரோலினா குச்சார்சிக் (Karolina Kucharczyk) (பிறப்பு: ஏப்ரல் 24, 1991 ) இவர் போலந்தைச் சேர்ந்த ஓர் இணை ஒலிம்பிக் விளையாட்டு வீரராவார். நீளம் தாண்டுதல் எஃப் 20 வகையில் 2012 கோடைகால இணை ஒலிம்பிக்கில் போலந்துக்காக தங்கம் வென்றார். [1] 6.00 மீட்டர் தாண்டுதலுடன் தனது சொந்த சாதனையை முறியடித்தார். [2]

ஆரம்ப ஆண்டுகள்[தொகு]

வர் தனது 12 வயதில் தடகளப் பயிற்சியைத் தொடங்கினார். 2009 ஆம் ஆண்டில் இவர் தனது முதல் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றார். போலந்து இளையோர் பல்வகைப் போட்டியில் ஹெப்டத்லானில் பன்னிரண்டாவது இடத்தைப் பிடித்தார். ஒரு போலந்து போட்டியில் இவரது மிக முக்கியமான ஒட்டுமொத்த முடிவு 2013 ஆம் ஆண்டில் உள்ளரங்கத்தில் நீளம் தாண்டுதலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. அடுத்த ஆண்டு இவர் முழுமையான வெளியரங்கினுள் நீளம் தாண்டுதலில் எட்டாவது இடத்தில் இருந்தார்.

இணை ஒலிம்பிக் போட்டிகள்[தொகு]

இணை ஒலிம்பிக் தடகள வீரராக இவரது முதல் சர்வதேச போட்டி 2011 ஆம் ஆண்டிலிருந்து, கிறைட்சேர்ச்சில் நடந்த இணை ஒலிம்பிக் உலகப் போட்டிகளில் பங்கேற்று, எஃப் 20 நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அடுத்த ஆண்டு, இலண்டனில் நடந்த இணை ஒலிம்பிக் போட்டிகளில், வெற்றியாளாரானார். லியோன் 2013 தோகா 2015 ஆகியவற்றின் நடைபெற்ற இணை ஒலிம்பிக் தடகள உலகப் போடிகளில் இவர் டி 20 நீளம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்றார்.

2016 கிராசெட்டோவில் நடந்த இணை ஒலிம்பிக் ஐரோப்பிய போட்டி இவருக்கு திருப்பமாக இருந்தது. அங்கு இவர் டி 20 நீளம் தாண்டுதலில் ஐரோப்பிய பட்டத்தை வென்றார். அதே ஆண்டில், இரியோ டி செனீரோவில் நடந்த இணை ஒலிம்பிக் போட்டிகளில் டி 20 நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். .

2018 ஆம் ஆண்டில் பெர்லினில் நடந்த இணை ஒலிம்பிக் ஐரோப்பியப் போட்டிகளில் டி 20 நீளம் தாண்டுதலில் ஐரோப்பிய வெற்றியாளராக மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டார். அடுத்த ஆண்டு துபாயில் நடந்த இணை ஒலிம்பிக் உலகப் போட்டிகளில் உலகப் பட்டத்தை வென்றார். இரண்டு நிகழ்வுகளிலும் இவர் டி 20 நீளம் தாண்டுதலில் புதிய உலக சாதனை படைத்தார்.

குறிப்புகள்[தொகு]

  1. "IPC bio". Archived from the original on 2012-09-28. பார்க்கப்பட்ட நாள் 2020-08-30.
  2. Inside World Parasport
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரோலினா_குச்சார்சிக்&oldid=3842297" இலிருந்து மீள்விக்கப்பட்டது