கருவிழி புண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருவிழி புண்
பாக்டீரியாக்களால் கருவிழியில் ஏற்பட்ட புண்
சிறப்புகண் மருத்துவம்
சிகிச்சைபாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு அல்லது வைரஸ் தடுப்பு சொட்டு மருந்துகள்

கருவிழி புண் (Corneal ulcer) கருவிழியில் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ் கிருமிகள் தொற்றுகளால் கருவிழி புண் அல்லது கருவிழி வீக்கம் ஏற்படலாம்.[1][2][3] பொதுவாக ஒவ்வாமை (அழற்சி) காரணமாகவும் கருவிழி புண் ஏற்படும். மேலும் கண்ணில் அடிபட்டாலும் இப்புண் ஏற்படலாம்.

அறிகுறிகள்[தொகு]

கண்கள் சிவப்படைதல், கண்களில் வலி, வழக்கத்தை விட அதிகமான கண்ணீர் வடிதல், கண் இமைகள் திறக்க கடினமாக இருத்தல், ஒளியைப் பார்க்கும்போது கண் கூசுதல், கண்ணில் ஏதோ விழுந்தது போன்ற உணர்வு மற்றும் மங்கலான பார்வை ஆகியவைகள் கருவிழி புண்களுக்கான அறிகுறிகள் ஆகும்.

காரணங்கள்[தொகு]

  • கண்களில் காயம்
  • அழுக்கடைந்த காண்டாக் லென்ஸ்
  • வைரஸ்கள்
  • அசுத்தமான நீரில் முகம் கழுவுதல்
  • குறைவான நோய் எதிர்ப்புத் திறன்
  • கண்ணீர் பாதையில் அடைப்பு மற்றும் தொற்று

அறிவுறுத்தல்கள்[தொகு]

மருத்துவம்[தொகு]

ஒவ்வாமை ஏற்பட்ட காரணத்தைப் பொறுத்து, கருவிழி புண்களுக்கான சிகிச்சை மாறுபடும். பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் ஏற்பட்ட கருவிழி புண்ணைக் குணப்படுத்த சொட்டு மருந்துகள் (Antibacterial and antifungal eye drops) உள்ளது. வைரஸ் கிருமிகளால் ஏற்படும் கருவிழி புண்ணைக் குணப்படுத்த சிறப்பு சொட்டு மருந்துகள் (Antiviral eye drops ) உள்ளது. சொட்டு மருந்துகளால் புண் ஆறவில்லை எனில், கருவிழி மாற்று அறுவை சிகிச்சையை மருத்துவர் பரிந்துரைக்கப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Infectious keratitis: A review". Clinical and Experimental Ophthalmology 50 (5): 543–562. July 2022. doi:10.1111/ceo.14113. பப்மெட்:35610943. 
  2. "Corneal ulcer". Cleveland Clinic. 8 March 2022. பார்க்கப்பட்ட நாள் 6 February 2023.
  3. David Turbert (13 October 2022). "What is corneal ulcer (keratitis)?". American Academy of Ophthalmology. பார்க்கப்பட்ட நாள் 6 February 2023.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Corneal ulcer
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
வகைப்பாடு
வெளி இணைப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருவிழி_புண்&oldid=3734003" இலிருந்து மீள்விக்கப்பட்டது