கரும்புள்ளி மரங்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கரும்புள்ளி மரங்கொத்தி
Heart Spotted Woodpecker (male).jpg
ஆண்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணிகள்
வகுப்பு: பறவைகள்
வரிசை: Piciformes
குடும்பம்: Picidae
பேரினம்: Hemicircus
இனம்: H. canente
இருசொற் பெயரீடு
Hemicircus canente
(Lesson, 1830)
வேறு பெயர்கள்

Hemicercus cordatus

கரும்புள்ளி மரங்கொத்தி (இந்த ஒலிக்கோப்பு பற்றி ஒலிப்பு) மரங்கொத்தி குடும்பத்தில் ஒரு சிற்றினம் ஆகும். இதன் முதுகு நல்ல கருப்பாகவும் மார்பு வெளிர் கருப்பாகவும் இருக்கும் வித்தியாசமான தோற்றத்தை கொன்டது.

பெயர்கள்[தொகு]

தமிழில் :கரும்புள்ளி மரங்கொத்தி

ஆங்கிலப்பெயர் :Heart-spotted woodpecker

அறிவியல் பெயர் :Hemicircus canente [2]

உடலமைப்பு[தொகு]

16 செ.மீ- ஆணும் பெண்ணும் கருப்பு நிறக் கொண்டை உடையதாயினும் பெண்ணின் நெற்றி ஆணின் நெற்றி போலக் கருப்பாக இல்லாது பளிச்சென வெண்மையாக இருக்கும். இரண்டுக்கும் தொண்டையும் கன்னங்களும் வெண்மை, முதுகு நல்ல கருப்பாகவும் மார்பு வெளிர் கருப்பாகவும் இருக்கும். முதுகில் காணப்படும் வெண்மையான பகுதிகளில் இதய வடிவிலான சிறிய கருப்புத் திட்டுகள் இடம் பெற்றிருக்கும்.

காணப்படும் பகுதிகள் ,உணவு[தொகு]

மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் சார்ந்த பகுதிகளில், ஈரப்பதம் மிகுந்த இலையுதிர்காடுகள், தேக்கு, மூங்கில் பயிராகும் இடங்கள், காபி தோட்டங்களில் நிழல் தரும் மரங்கள் ஆகியவற்றைச் சார்ந்து தனித்தும் இணையாகவும் புழு பூச்சிகளை வேட்டையாடும். பிற பறவை இனங்களோடு சேர்ந்தும் திரியக் காணலாம். பெரிய அடி மரங்களின் பட்டைகளைத் தவிர்த்துச் சிறு கிளைகளில் இலைக் கொத்துக்களிடையே சுற்றி வந்து அக்கிளை களைத் தட்டி பூச்சிகளை வெளிப்படச் செய்து தின்னும். எறும்பு, கறையான், முட்டைப்புழு ஆகியன இதன் முக்கிய உணவு, கா;h; என உரக்கத் தொடர்ந்து குரல் கொடுப்பது கொண்டு ஒரு மரத்தில் இது இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம். [3]

இனப்பெருக்கம்[தொகு]

பெண் கரும்புள்ளி மரங்கொத்தி

நவம்பர் முதல் ஏப்ரல் வரை பட்டுப்போன மரக்கிளைகளில் வங்கு குடைந்து 3 முட்டைகள் இடும்.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hemicircus canente". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. "கரும்புள்ளி மரங்கொத்தி Heart-spotted_woodpecker". பார்த்த நாள் 17 அக்டோபர் 2017.
  3. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:99