கருந்தலைக் குயில் கீச்சான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்த கருந்தலை குயில் கீச்சான் இந்திய துணை கண்டத்திலும் தென்கிழக்கு ஆசியாவிலும் காணப்படும் சிற்றினம் ஆகும்.

கருந்தலை குயில் கீச்சான்
Black-headed Cuckooshrike (Coracina melanoptera) at Sindhrot near Vadodara, Gujrat Pix 110.jpg
Male at Sindhrot in Vadodara district of குசராத்து, இந்தியா.
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: Aves
வரிசை: Passeriformes
குடும்பம்: Campephagidae
பேரினம்: Coracina
இனம்: C. melanoptera
இருசொற் பெயரீடு
Coracina melanoptera
(Rüppell, 1839)

பெயர்கள்[தொகு]

தமிழில் : கருந்தலை குயில் கீச்சான்

ஆங்கிலத்தில் : Black-headed cuckooshrike

அறிவியல் பெயர் :Coracina melanoptera

உடலமைப்பு[தொகு]

19 செ . மீ - இதன் தலை முழுவதும் நல்ல கருப்பாகவும் உடல் கருஞ்சாம்பல் நிறமாகவும் இருக்கும். வால் கருப்பாக வெள்ளை முனையுடன் கூடியது.

கருந்தலை குயில் கீச்சான்

காணப்படும் பகுதிகள் & உணவு[தொகு]

தனியாகவும் சில நேரங்களில் கூட்டாமாகவும் காணப்படும் மின் சிட்டு. காட்டுக் கீச்சான், வால்காக்கை ஆகிய இரை தேடும் குழுக்களில் ஒன்றாக இரைதேடும். .புழு பூச்சிகல் சிறு பழங்களையும் உணவாகக்கொள்ளும். பிட்-பிட்-பிட் எனவும் டுவிட்-டுவிட் எனவும் முடியும் சீழ்க்கைக் குரலில் ஆண் பறவை குரல் கொடுக்கும். பெண் இது போலத் தொடர்ந்து குரல் கொடுக்காது ஒரு முறை மட்டும் குரல் கொடுக்கும்.

இனப்பெருக்கம்[தொகு]

ஏப்ரல் முதல் சூன் வரை உலர்ந்த புல்லைச் சிலந்தி நூலால் இணைத்து 8 செ.மீ குறுக்களவிலான கோப்பை வடிவிலான கூட்டினை மரங்களில் கவட்டியில் இரண்டு முதல் எட்டு மீட்டர் உயரத்தில் அமைத்து 3 முட்டைகள் இடும். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Coracina melanoptera". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க . ரத்னம் -மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:109