உள்ளடக்கத்துக்குச் செல்

கருங்காலி குதிரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருங்காலி குதிரை ( The Ebony Horse )
இளவரசன் இயந்திரக் குதிரையில் இளவரசியுடன் பறக்க்கும் ஒரு கற்பனைப்படம்.
நாட்டுப்புறக் கதை
பெயர்: கருங்காலி குதிரை ( The Ebony Horse )
AKA: மந்திரக் குதிரை
தகவல்
Aarne-Thompson Grouping:ATU 575 (The Prince's Wings)
Published in: ஆயிரத்தொரு இரவுகள்
Related: 'தி உடன் ஈகிள் (ru)

கருங்காலி குதிரை (The Ebony Horse) மந்திரித்த குதிரை அல்லது மந்திரக் குதிரை [1] [2] என்பது ஆயிரத்தொரு இரவுகள் கதையில் இடம்பெறும் ஒரு நாட்டுப்புறக் கதையாகும். பறக்கும் இயந்திரக் குதிரையான இதை விசைகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம். குதிரையால் விண்வெளியிலும் சூரியனை நோக்கியும் பறக்க முடியும். கருங்காலி குதிரை ஒரே நாளில் ஒரு வருட தூரம் பறக்க முடியும். மேலும் பாரசீக இளவரசர் கமர் அல்-அக்மர் பாரசீகம், அரேபியா மற்றும் பைசாந்தியம் முழுவதும் தனது சாகசங்களில் வாகனமாக பயன்படுத்தினான். [3]

தோற்றம்

[தொகு]

ஆராய்ச்சியாளர் உல்ரிச் மார்சோல்பின் கூற்றுப்படி, "கருங்காலி குதிரை" என்ற கதை, பிரெஞ்சு எழுத்தாளர் அன்டோயின் காலண்டிற்கு பல கதைகளை வழங்கிய கிறிஸ்தவ மரோனைட் ஹன்னா தியாப்பின் கதை தொகுப்பின் ஒரு பகுதியாகும்.[4][5] காலண்டின் நாட்குறிப்பின்படி, இந்தக் கதை[6] ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி சொல்லப்பட்டது.

கதைச் சுருக்கம்

[தொகு]

வங்காளக் கைவினைஞரும் மந்திரச் சாதனங்களை கண்டுபிடிப்பவருமான ஒருவர் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பாரசீக நகரமான ஷிராஸுக்கு வந்து, ஒரு அற்புதமான குதிரையின் மீது ஏறி சுந்றி வருவதைக் கண்ட மன்னன் மிகவும் ஈர்க்கப்பட்டார். மன்னன் அவனை சிறையில் அடைத்து விட்டு இளவரசனுக்கு அற்புதமான குதிரையை பரிசளிக்கிறான்வு செய்தா

இளவரசன் தன்மேல் ஏறியவுடன் குதிரை வேகமாக வானத்தில் பறந்தது. இளவரசன் தான் போதுமான உயரத்தில் பறந்துவிட்டதாக முடிவெடுத்ததும், குதிரையை தரையிறக்க முயற்சிக்கிறான். ஆனால் அவனால் முடியவில்லை. தரையிறங்குவதற்குப் பதிலாக, குதிரை இளவரசருடன் பறந்து, தெரியாத நாடுகளுக்கு அவனை அழைத்துச் சென்று உற்சாகப்படுத்துகிறது. பின்னர், அவன் பறக்கும் இயந்திரக் குதிரையுடன் வங்காள ராச்சியத்திற்குச் செல்கிறான். அங்கு ஒரு அழகான இளவரசியைச் சந்தித்து அவள் மேல் காதல் கொள்கிறான்.

இளவரசன் தனது சாகசங்களை இளவரசியிடம் மீண்டும் கூறுகிறான். அவர்கள் காதலில் இனிமையானவற்றை பரிமாறிக் கொள்கிறார்கள். விரைவில், பாரசீக இளைஞன் வங்காள இளவரசியை தன்னுடன் தனது தாயகமான பாரசீகத்திற்கு இயந்திர அதிசயத்துடன் அழைத்துச் செல்கிறான்.

இதற்கிடையில், சிறையிலிருக்கும் குதிரையை உருவாக்கிய வங்காளக் கலைஞன் தனது மாயவித்தையால் இளவரசன் காதலியுடன் வருவதைக் காண்கிறான். அவன் பழிவாங்கும் எண்ணத்துடன் குதிரையைப் பயன்படுத்தி இளவரசியைக் கடத்தி, அவளுடன் அடிவானத்தில் வேகமாக மறைந்தான்.

அவர்கள் காஷ்மீர் இராச்சியத்திற்கு வருகிறார்கள். அந்த நாட்டு மன்னன் இளவரசியை வங்காளியிடமிருந்து மீட்டு மணமுடிக்க முடிவு செய்கிறான்.

தனது காதலியின் இழப்பால் சோகமடைந்த பாரசீக இளவரசர் அலைந்து திரிந்து இறுதியில் காஷ்மீரை அடைகிறான் அங்கு அவன் தனது காதலி உயிருடன் இருப்பதை அறிந்து, தனது காதலியுடன் இயந்திரக் குதிரையில் பாரசீகத்திற்குத் திரும்புவதற்கான திட்டத்தைத் தீட்டுகிறார்.

மரபு

[தொகு]

இந்த கதை ஐரோப்பாவிற்கு குடிபெயர்ந்தது. மேலும், ஒரு அற்புதமான இயந்திர குதிரையைப் பற்றிய இதேபோன்ற இடைக்கால கதைகளை ஊக்கப்படுத்தியது என்று அறிஞர்களின் கூற்று சுட்டிக்காட்டுகிறது.[7][8]

இந்தக் கதை ஆர்னே-தாம்சன்-உதர் இண்டெக்ஸில் ATU 575, "தி பிரின்ஸ் விங்ஸ்" என வகைப்படுத்தப்பட்டுள்ளது. [9] இந்தக் கதைகள் இரண்டு வகையான கதைகளைக் காட்டுகின்றன:

  • முதலாவது: மன்னனையும் அவனது மகனையும் கவர ஒரு இயந்திர அதிசயத்தை உருவாக்கும் போட்டியில் ஒரு உலோகத் தொழிலாளிகள் இருவர் பங்கேற்கின்றனர். இளவரசனின் மகிழ்ச்சிக்காக ஒரு இயந்திர குதிரை கட்டப்பட்டு மன்னனிடம் ஒப்படைக்கப்பட்டது.
  • இரண்டாவது: இளவரசர் ஒரு திறமையான கைவினைஞரிடம் இருந்து அவர் பறக்க அனுமதிக்கும் ஒரு சிறகு கருவியை வடிவமைக்கிறார் (எ.கா. ஒரு ஜோடி இறக்கைகள் அல்லது ஒரு மர பறவை).

தோற்றம்

[தொகு]

கருங்காலி குதிரை என்ற கதை, குறிப்பாக, புராணவியலாளர் தாமஸ் கெய்ட்லி, அவரது கதைகள் மற்றும் பிரபலமான புனைகதைகள் புத்தகத்தில், இஸ்லாமிய மதத்தின் கூறுகளைக் கொண்டிருக்காததால், உண்மையான பாரசீக மூலத்திலிருந்து தோன்றியதாக பரிந்துரைத்தார். [10]

கதை வகையின் மிகப் பழமை மற்றும் சாத்தியமான தோற்றம் 11 ஆம் நூற்றாண்டின் சமண சமயத்தின் பஞ்சதந்திரம் கதை என என்று பரிந்துரைக்கப்படுகிறது. இது விஷ்ணுவாக நெசவாளர் கதையில் உள்ளது. இந்தக் கதையில், ஒரு ஏழை நெசவாளர், விஷ்ணுவின் வாகனமான கருடன் போன்ற செயற்கை உருவத்தை உருவாக்குகிறார். தான் காதலித்த இளவரசியின் உச்சி அறையை அடைய அவர் கட்டுமானத்தைப் பயன்படுத்துகிறார். மேலும் தனது காதலியைக் கவர விஷ்ணுவாகக் காட்சியளிக்கிறார். [11] [12] [13] [14]

சான்றுகள்

[தொகு]
  1. Scull, William Ellis; Marshall, Logan (ed.). Fairy Tales of All Nations: Famous Stories from the English, German, French, Italian, Arabic, Russian, Swedish, Danish, Norwegian, Bohemian, Japanese and Other Sources. Philadelphia: J. C. Winston Co. 1910. pp. 129-140.
  2. For other versions of the title, see: "LIST OF STORIES". In: Scheherazade's Children: Global Encounters with the Arabian Nights. Edited by Kennedy Philip F. and Warner Marina. NYU Press, 2013. p. 403. Accessed July 20, 2021. http://www.jstor.org/stable/j.ctt9qfrpw.27.
  3. Marzolph, Ulrich; van Leewen, Richard. The Arabian Nights Encyclopedia. Vol. I. California: ABC-Clio. 2004. pp. 172-173. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85109-640-X (e-book)
  4. Scull, William Ellis; Marshall, Logan (ed.). Fairy Tales of All Nations: Famous Stories from the English, German, French, Italian, Arabic, Russian, Swedish, Danish, Norwegian, Bohemian, Japanese and Other Sources. Philadelphia: J. C. Winston Co. 1910. pp. 129-140.
  5. For other versions of the title, see: "LIST OF STORIES". In: Scheherazade's Children: Global Encounters with the Arabian Nights. Edited by Kennedy Philip F. and Warner Marina. NYU Press, 2013. p. 403. Accessed July 20, 2021. http://www.jstor.org/stable/j.ctt9qfrpw.27.
  6. Marzolph, Ulrich; van Leewen, Richard. The Arabian Nights Encyclopedia. Vol. I. California: ABC-Clio. 2004. pp. 172-173. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85109-640-X (e-book)
  7. Burton, Richard F. The Book of the Thousand Nights and one Night. With introduction, explanatory notes on the manners and customs of Moslem men and a terminal essay upon the history of The Nights. Volume 5. USA: Printed by the Burton Club. p. 2 (footnote nr. 5)
  8. Marzolph, Ulrich; van Leewen, Richard. The Arabian Nights Encyclopedia. Vol. I. California: ABC-Clio. 2004. p. 174. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85109-640-X (e-book)
  9. Thompson, Stith (1977). The Folktale. University of California Press. p. 78. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-03537-2
  10. Keightley, Thomas. Tales And Popular Fictions: Their Resemblance, And Transmission From Country to Country. London: Whittaker. 1834. pp. 71-72.
  11. Hahn, Johann Georg von. Griechische und Albanesische Märchen 1-2. München/Berlin: Georg Müller. 1918 [1864]. p. 401-402.
  12. Burton, Richard F. The Book of the Thousand Nights and one Night. With introduction, explanatory notes on the manners and customs of Moslem men and a terminal essay upon the history of The Nights. Volume 5. USA: Printed by the Burton Club. p. 2 (footnote nr. 5)
  13. Marzolph, Ulrich; van Leewen, Richard. The Arabian Nights Encyclopedia. Vol. I. California: ABC-Clio. 2004. pp. 173-174. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85109-640-X (e-book)
  14. Jones, H. S. V. "The Cléomadès and Related Folk-Tales". In: PMLA 23, no. 4 (1908): 576-577. Accessed August 30, 2021. doi:10.2307/456771.

உசாத்துணை

[தொகு]
  • Chauvin, Victor Charles. Bibliographie des ouvrages arabes ou relatifs aux Arabes, publiés dans l'Europe chrétienne de 1810 à 1885. Volume V. Líege: H. Vaillant-Carmanne. 1901. pp. 221-231.

மேலும் படிக்க

[தொகு]
  • Akel, Ibrahim. "Redécouverte d’un manuscrit oublié des Mille et une nuits". In: The Thousand and One Nights: Sources and Transformations in Literature, Art, and Science. Leiden, The Netherlands: Brill, 2020. pp. 57-67. doi: https://doi.org/10.1163/9789004429031_005
  • Bottigheimer, Ruth B. and Claudia Ott. “The Case of the Ebony Horse, part 1”. Gramarye. vol. 5, 2014, pp. 8–20.
  • Bottigheimer, Ruth B. “The Case of the Ebony Horse, part 2: Hannā Diyāb’s Creation of a Third Tradition”. Gramarye, vol. 6, 2014, pp. 7–16.
  • Cox, H.L. "'L'Histoire du cheval enchante" aus 1001 Nacht in der miindlichen Oberlieferung Franzosisch-Flanders". In: D. HARMENING & E. WIMMER (red.), Volkskultur - Geschichte - Region: Festschrift für Wolfgang Brückner zum 60. Geburtstag. Würzburg: Verlag Königshausen & Neumann GmbH. 1992. pp. 581-596.
  • Marzolph, Ulrich. 101 Middle Eastern Tales and Their Impact on Western Oral Tradition. Detroit: Wayne State University Press, 2020. pp. 86-94. muse.jhu.edu/book/77103.
  • Olshin, Benjamin B. "Ancient Tales of Flying Machines". In: Lost Knowledge. Leiden, The Netherlands: Brill, 2019. pp. 40-113. doi: https://doi.org/10.1163/9789004352728_003
  • Starostina, Aglaia. "The Prince’s Wings: Possible Origin of the Tale Type and Its Early Chinese Variants". In: Journal of Ethnology and Folkloristics, [S.l.], v. 15, n. 1, pp. 154–169, june 2021.

பன்னாட்டுத் தர தொடர் எண் 2228-0987. Available at: <https://www.jef.ee/index.php/journal/article/view/399 பரணிடப்பட்டது 2023-02-21 at the வந்தவழி இயந்திரம்>. Date accessed: 19 july 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருங்காலி_குதிரை&oldid=4110398" இலிருந்து மீள்விக்கப்பட்டது