கரீம் உதீன் பர்புய்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரீம் உதீன் பர்புய்யா
Karim Uddin Barbhuiya
அசாம் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
21 மே 2021
முன்னையவர்அமினுல் ஏக்கு லசுகர்
தொகுதிசொணாய் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புcirca 1970 (அகவை 53–54)
 India
தேசியம்[[இந்தியா}இந்தியர்]]
அரசியல் கட்சிஅகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
பிள்ளைகள்2
பெற்றோர்
  • மறைந்த இரகீம் உதின் பர்புய்யா (father)
வாழிடம்(s)கனக்பூர், கசார் மாவட்டம், அசாம்
கல்விபட்டதாரி

கரீம் உதீன் பர்புய்யா (Karim Uddin Barbhuiya) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியில் உறுப்பினராகவும் ஒரு தொழிலதிபராகவும் அசாம் மாநில அரசியலில் செயல்பட்டார். 2021 ஆம் ஆண்டு முதல் சோனாயின் அசாம் சட்டப் பேரவை தொகுதியில் அசாம் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறார்

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் குடும்பம்[தொகு]

கரீம் உதீன் பர்புய்யா, அசாம் மாநிலத்தின் கச்சார் மாவட்டத்தில் உள்ள கனக்பூரில் ஒரு வங்காள முசுலிம் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை, இரகீம் உதீன் பர்புய்யா, ஒரு மிராசுதாரின் வழித்தோன்றல் என்று கூறப்படுகிறது. அரசுக்கு நிதி உதவி செலுத்தியதற்காக கச்சாரின் முன்னாள் இராசா இவருக்கு பர்புய்யா என்ற பட்டத்தை வழங்கினார். [1]

2019 ஆம் ஆண்டில் கரீம் உதீன் பர்புய்யா மீரட்டில் உள்ள சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கலைப் பட்டம் பெற்றார். [2]

தொழில்[தொகு]

பர்புய்யா அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் மத்தியக் குழுவின் பொதுச் செயலாளராகவும், கட்சியின் பார்பெட்டா கிளைத் தலைவராகவும் உள்ளார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அசாம் சட்டப் பேரவைத் தேர்தல்களின் போது இவர் அமினுல் அக் லசுகரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார், ஆனால் 2021 அசாம் சட்டப் பேரவைத் தேர்தலில் அமினுல் அக் லசுகரை 19,654 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அசாம் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. E M Lewis. Principal Heads of the History and Statistics of the Dacca Division. Calcutta Central Press Company. 
  2. (in ஆங்கிலம்). {{cite web}}: Missing or empty |title= (help); Missing or empty |url= (help)
  3. "KARIM UDDIN BARBHUIYA | Vidhan Sabha Election Candidate Search Result | ElectionAdmin.in".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரீம்_உதீன்_பர்புய்யா&oldid=3836656" இலிருந்து மீள்விக்கப்பட்டது