கரிச்சான் குயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரிச்சான் குயில்
இளம் கரிச்சான் குயில்
தென்னிந்தியாவில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட முட்கரண்டி வால் கரிச்சானின் ஓசை
உயிரியல் வகைப்பாடு
உலகம்: மெய்க்கருவுயிரி
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: குக்குலிபார்மிசு
குடும்பம்: குக்குலிடே
பேரினம்: சர்னிகுலசு
இனம்: ச. டைகுருராய்டிசு
இருசொற் பெயரீடு
சர்னிகுலசு டைகுருராய்டிசு
(கோட்ஜ்சன், 1839)

முட்கரண்டி-வால் கரிச்சான் அல்லது கரிச்சான் குயில் (Fork-tailed drongo-cuckoo) (சர்னிகுலசு டைகுருராய்டிசு) என்பது ஒரு கருப்பு கரிச்சானை போன்ற பறவை ஆகும். இது முக்கியமாக தீபகற்ப இந்தியாவில் மலைக்காடுகளில் காணப்படுகிறது. இருப்பினும் இவை இமயமலை அடிவாரத்திலிருந்தும் அறியப்படுகின்றன. இதன் நேரான அலகு மற்றும் வெள்ளை பட்டை குதம் ஆகியவற்றால் இதை எளிதாக வேறுபடுத்தி அறியலாம். இது ஒரு நன்கு பிளவுப்பட்ட முட்கரண்டி வாலினைக் கொண்டது. பெரும்பாலும் இதன் தலையின் பின்புறத்தில் ஒரு வெள்ளை புள்ளியை உள்ளது. இந்த ஓசை 5 அல்லது 6 விசில் "பிப்-பிப்-பிப்-பிப்-பிப்-" குறிப்புகளுடன் ஒவ்வொரு "பிப்" உடன் சுருதியில் உயரும் தொடராக விவரிக்கப்பட்டுள்ளது.[2]

பெயர்கள்[தொகு]

தமிழில்  : கரிச்சான் குயில் (ஒலிப்பு)

ஆங்கிலத்தில்  : Drongo Cuckoo , Fork-tailed drongo-cuckoo

அறிவியல் பெயர்  : Surniculus dicruroides

உடலமைப்பு[தொகு]

ஆனைமலை புலிகள் காப்பகம் தமிழ்நாடு

25 செ.மீ. - தோற்றத்தில் கரிச்சானை முழுதும் ஒத்ததான இதனை வாலடியின் ஓர வால்இறகுகளில் காணப்படும் வெண்கோடுகள் கொண்டு மட்டுமே வேறுபடுத்தி அறிய முடியும். முழு வளார்ச்சி பெறும் முன் படத்தில் உள்ளது போன்று வெண்புள்ளிகள் கொண்ட தோற்றம் தரும்.

காணப்படும் பகுதிகள்[தொகு]

தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரை சார்ந்த வட்டாரங்கள் நீங்கலாக மற்ற பகுதிகளில் மரங்கள் நிறைந்த காடுகளில் தனித்து மங்களின் உயரகிளைகளில் கம்பளிப் பூச்சி முதலிய மென்மையான உடல் கொண்ட பூச்சிகளை இரையாகத் தேடித் தின்பதோடு அத்தி முதலிய பழவகைகளையும் உணவாகக் கொள்ளும் குளிர் காலத்தில் கோடையில் குரல் கொடுப்பதுபோல குரல்கொடுக்காது மௌனம் காப்பதால் இதனைக் கரிச்சானில் வேறுபடுத்தி அறிவது கடினம். [3]

குரலொலி[தொகு]

சிலபோது இறக்கைகளை உயர்த்தியபடி அக்கா குயிலின் முதல் இரண்டு மூன்று சுருதி குறைந்த குரலைப் போலப் குரல்கொடுப்பதும் உண்டு.பீஇ பீஇ பீஇ பீஇ என ஆறேழு முறைதொடார்ந்து கத்தும் குரலொலி கொண்டு இதன் இருப்பை அறியலாம்.

இனப்பெருக்கம்[தொகு]

மார்ச் முதல் அக்டோபர் முடிய கரிச்சான், சிலம்பன் ஆகிய பறவைகளின் கூடுகளில் முட்டையிட்டுச் செல்லும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Surniculus dicruroides". International Union for Conservation of Nature and Natural Resources. Retrieved 2014-12-31.
  2. Rasmussen, P. C. & Anderton, J. C. 2005 Birds of South Asia. The Ripley Guide. Smithsonian and Lynx Edicions
  3. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க. ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:72
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிச்சான்_குயில்&oldid=3826782" இலிருந்து மீள்விக்கப்பட்டது