கயாவால் பிராமணர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கயாவால் பிராமணர்கள் (Gayawal Brahmin) என்பவர்கள் ஒரு இந்திய இந்து பிராமண துணைப்பிரிவினராவர். பிரம்ம கல்பித், கயாவால் பண்டிதர்கள், கயாவால் பாண்டா எனவும் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் முக்கியமாக இந்திய மாநிலமான பீகாலிருந்து வந்தவர்கள். அதன் உறுப்பினர்கள் மத்வாச்சாரியர் முன்வைத்த துவைதாத்வைதத்தையும், உத்தராதி மடத்தையும் பின்பற்றுபவர்கள் ஆவர். [1] [2] கயையின் பெரிய புனித யாத்திரை மையத்தில் இவர்களின் பிரதான கோயில் அமைந்துள்ளது. [3]

கயையின் நீத்தார் வழிபாடு செய்வதில் இவர்கள் மிகவும் சிறப்பு வாய்ந்த குழுவாக உள்ளனர். இவர்கள் கயையின் பால்கு ஆற்றங்கரையில் பிண்ட தானம், தர்ப்பணம் போன்ற நீத்தார் வழிபாடு செய்வது [4] போன்றச் சடங்குகளின் பாரம்பரிய ஏகபோக உரிமையைக் கொண்டுள்ளனர். [5]

சொற்பிறப்பியல்[தொகு]

"கயாவால்" என்ற வார்த்தையின் அர்த்தம் "கயாவில் வசிப்பவர்". என்ப்படும். ஆனால் இது ஒரு குறிப்பிட்ட கயாவால் பிராமண சமூகத்தை குறிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. [6]

குறிப்புகள்[தொகு]

  1. A. M. Shah. The Structure of Indian Society: Then and Now. Routledge. பக். 88. https://books.google.com/books?id=HtrfCgAAQBAJ&pg=PA88. பார்த்த நாள்: 6 December 2012. 
  2. T. N. Madan (1992). Religion in India. Oxford University Press. https://archive.org/details/religioninindia0000unse. 
  3. A.R. Desai. State and Society in India. Popular Prakashan. பக். 438. https://books.google.com/books?id=0yqV1Ux0oGIC&pg=PA438. 
  4. "In Bihar, Hindu period to pray for dead begins". Thaindian News. Archived from the original on 2012-10-08. பார்க்கப்பட்ட நாள் 2010-05-05.
  5. Journal of Social Research, Volume 17. Council of Social and Cultural Research, Bihar. 1974. பக். 3. https://books.google.com/books?id=JuUKAAAAIAAJ. 
  6. Prasad, Narbadeshwar (1952). "The Gayawals of Bihar". American Anthropologist 54 (2): 279. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7294. http://www.jstor.org/stable/663940. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கயாவால்_பிராமணர்கள்&oldid=3739754" இலிருந்து மீள்விக்கப்பட்டது