கமுதி சூரிய மின் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கமுதி சூரிய மின் திட்டம்
Kamuthi Solar Power Project
கமுதி சூரிய மிந்திட்டம் கழுகுப் பார்வை
நாடுஇந்தியா
அமைவு9°20′51″N 78°23′32″E / 9.347568°N 78.392162°E / 9.347568; 78.392162ஆள்கூறுகள்: 9°20′51″N 78°23′32″E / 9.347568°N 78.392162°E / 9.347568; 78.392162
நிலைஇயக்கத்தில்
அமைப்பு துவங்கிய தேதிபெப்ரவரி 2016
இயங்கத் துவங்கிய தேதிமார்ச் 2017
அமைப்புச் செலவு4,550 கோடி
(US$596.51 மில்லியன்)
உரிமையாளர்அதானி பசுமை ஆற்றல்

கமுதி சூரிய மின் திட்டம் (Kamuthi Solar Power Project) என்பது 2,500 ஏக்கர்கள் (10 km2) பரப்பில் நிறுவப்பட்டுள்ள ஒளிமின்னழுத்த மின் நிலையம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து சுமார் 90 கி.மீ. தொலைவில் இந்நிலையம் அமைந்துள்ளது.[1] இந்த திட்டத்தை அதானி பவர் குழுமம் நிறுவியுள்ளது.[2] ஒரு குறிப்பிட்ட பகுதியில் 648 மெகாவாட் மின் உருவாக்கும் திறன் கொண்ட, உலகின் 12வது பெரிய பெரிய திறன் கொண்ட சூரிய சக்தி பூங்காவாக இது உள்ளது.[3] [4]

13 ஜூன் 2016 அன்று சூரிய பூங்காவைத் தேசிய கட்டமைப்புடன் இணைக்க ஐந்து துணை நிலையங்களை ஏபிபி நியமித்தது.[5] [6] கமுதி சூரிய மின்சக்தி திட்டம் 21 செப்டம்பர் 2016 அன்று 4,550 கோடி
(US$596.51 மில்லியன்)
செலவில் அமைக்கப்பட்டுள்ளது. சூரிய ஆலையில் 2.5 மில்லியன் சூரிய தொகுதிகள், 380,000 அடித்தளங்கள், 27,000 மீட்டர் கட்டமைப்புகள், 576 மாறுமின் எதிர் மாற்றிகள், 154 மின்மாற்றிகள் மற்றும் கிட்டத்தட்ட 6,000 கி.மீ. கம்பி வடங்கள் நிறுவப்பட்டுள்ளன.[7] [8] சூரிய பதாகைகளைத் தாங்குவதற்குத் தேவையான கட்டமைப்புகளை நிர்மாணிக்க 30,000 டன் கால்வனேற்றப்பட்ட எஃகு தேவைப்பட்டது. இந்த திட்டத்தை 8 மாதங்களுக்குள் முடிக்க சுமார் 8,500 தொழிலாளர்கள் ஒரு நாளைக்குச் சராசரியாக 11 மெகாவாட் திறன் கொண்டதாக நிறுவினர்.

முழு சூரிய பூங்காவும் தமிழ்நாடு மின்பகிர்மான நிறுவனத்துடன் 400 கி.வி துணை மின்நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [9] சூரியசக்தி பலகைகள் சுய-மின்னேற்றம் செய்யப்பட்ட பொறியன்கள் மூலம் தினமும் சுத்தம் செய்யப்படுகின்றன.

இந்த கட்டமைப்பினைப் பயன்படுத்தி சுமார் 2100 kWh/(m2*yr) அடிப்படையில் வருடத்திற்கு 1.35 TWh/yr உற்பத்தி செய்யலாம்.[10] இந்த அமைப்பு சுமார் 25 ஆண்டு தொழில்நுட்ப ஆயுட்காலத்தினை கொண்டது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "India Builds World's Largest Solar Power Plant, Covering 2,500 Acres". CleanTechnica. 11 September 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-03-20 அன்று பார்க்கப்பட்டது.
  2. PTI (15 March 2015). "Adani plans 1,000MW solar power plant at Ramanathapuram". Times of India. 22 July 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 14 June 2016 அன்று பார்க்கப்பட்டது.
  3. "World's largest solar project starts feeding electricity into national grid". Uniindia.com. 9 June 2016. 28 April 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 14 June 2016 அன்று பார்க்கப்பட்டது.
  4. "India unveils the world's largest solar power plant". Al Jazeera. 31 December 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 31 December 2016 அன்று பார்க்கப்பட்டது.
  5. PTI. "ABB links 648 MW solar project at Kamuthi with national grid". Economic Times. 13 June 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 14 June 2016 அன்று பார்க்கப்பட்டது.
  6. "ABB connects power to the Indian grid from one of the world's largest solar plants". Abb.com. 16 June 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 14 June 2016 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Adani dedicates to nation world's largest solar power plant in TN : The Hindu Business Line - Mobile edition". M.thehindubusinessline.com. 23 September 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 September 2016 அன்று பார்க்கப்பட்டது.
  8. The Hindu Business Line. "CDM: Adani dedicates to nation world's largest solar power plant in TN". 23 September 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 September 2016 அன்று பார்க்கப்பட்டது.
  9. Livemint. "CDM: Adani unveils world's largest solar plant in Tamil Nadu". 22 September 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 September 2016 அன்று பார்க்கப்பட்டது.
  10. "India Solar Resource - Global Horizontal Irradiance - Annual Average, by NREL, National Renewable Energy Laboratory". 29 March 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 December 2016 அன்று பார்க்கப்பட்டது.