அதானி குழுமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அதானி குழுமம்
வகைபொது
நிறுவுகை20 ஜீலை 1988; Error: first parameter cannot be parsed as a date or time. (20 ஜீலை 1988)
நிறுவனர்(கள்)கவுதம் அதானி
தலைமையகம்அகமதாபாத், குசராத், இந்தியா
சேவை வழங்கும் பகுதிGlobal
முக்கிய நபர்கள்கவுதம் அதானி
(தலைவர்)
தொழில்துறைகுழுமம் (நிறுவனம்)
சேவைகள்வளங்கள், தளவாடம், ஆற்றல் & வேளாண் வணிகம்
வருமானம்US$ 13 Billion[1]
பிரிவுகள்அதானி என்டர்பிரைசஸ் லிட்
அதானி துறைமுகம் & சிபொவ
அதானி பவர்
அதானி டிரான்ஸ்மிசன்
இணையத்தளம்www.adani.com

அதானி குழுமம் குஜராத்தின் அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய பன்னாட்டு நிறுவனமாகும். இது 1988 ஆம் ஆண்டில் கவுதம் அதானி என்பவரால், முதன்மை நிறுவனமாக அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் (முன்பு அதானி எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட்) ஒரு பொருள் வர்த்தக நிறுவனமாக நிறுவப்பட்டது. இதன் தலைவராக கவுதம் அதானி உள்ளார். இந்நிறுவனத்தின் பல்வேறு வணிகங்களில் ஆற்றல், வளங்கள், தளவாடங்கள், வேளாண் வணிகம், ரியல் எஸ்டேட், நிதி சேவைகள், பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆகியவை அடங்கும்.[2] இக்குழுவின் வருடாந்த வருவாய் 13 பில்லியன் டாலர்கள் ஆகும். இந்த நிறுவனம் 50 நாடுகளில் 70 இடங்களில் செயல்படுகிறது. [3] இது இந்தியாவின் மிகப்பெரிய துறைமுக உருவாக்குநர் மற்றும் இயக்கும் நிறுவனமாகும், இது முந்த்ரா துறைமுகம் உட்பட பத்து துறைமுகங்கள் மற்றும் டெர்மினல்களைக் கொண்டுள்ளது.[4] சிங்கப்பூரில் உள்ள வில்மர் இன்டர்நேஷனலுடன் ஒரு கூட்டு முயற்சியின் மூலம், இக்குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய சமையல் எண்ணெய் பிராண்டான "பார்ச்சூனை" சொந்தமாக் கொண்டுள்ளது. [5]


குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதானி_குழுமம்&oldid=3113671" இருந்து மீள்விக்கப்பட்டது