உள்ளடக்கத்துக்குச் செல்

கபூர் அண்ட் சன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கபூர் அண்ட் சன்ஸ்
Kapoor & Sons
இயக்கம்ஷகூன் பாத்ரா
தயாரிப்புஹிரோ யஷ் ஜோஹார்
கரண் ஜோஹர்
அபூர்வா மேத்தா
கதைஷகன் பத்ரா
அயீஷா தேவிட்ரே தில்லன்
இசைபாடல்கள்:
அமல் மாலிக்
பாட்ஷா
அர்கோ பிராவோ முகர்ஜி
தணிஷ்க் பாக்கி
பென்னி தயாள்
நியூக்ளியா
பின்னணி இசை:
சமீர் உதின்
நடிப்புரிசி கபூர்
ரத்னா பாத் ஷா
ரஜத் கபூர்
ஃபவாத் கான்
சித்தார்த் மல்ஹோத்ரா
அலீயா பட்
ஒளிப்பதிவுஜெஃப்ரி எஃப்
படத்தொகுப்புசிவகுமார் வி. பணிக்கர்
கலையகம்தர்மா புரொடக்சன்ஸ்
விநியோகம்பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்
வெளியீடுமார்ச்சு 18, 2016 (2016-03-18)
ஓட்டம்140 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா
மொழிஇந்தி
ஆக்கச்செலவு35 crore[2]
மொத்த வருவாய்மதிப்பீடு. 152.45 crore[3]

கபூர் அண்ட் சன்ஸ் (Kapoor & Sons, மேலும் Kapoor & Sons (Since 1921) , என்றும் அறியப்படுகிறது) என்பது இந்திய இந்தி-மொழி காதல் நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை ஷகன் பாத்ரா இயக்க, கரண் ஜோஹர்,  ஹிரோ யஷ் ஜோகர், அபூர்வா மேத்தா ஆகியோர் தர்மா புரொடக்சன்ஸ் மற்றும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் ஆகிய பதாகைகளின்கீழ் தயாரித்துள்ளனர்.[4] இப்படத்தில் திரை நட்சத்திரங்களான ரிசி கபூர், ரத்னா பத்தாக் ஷா, ரஜத் கபூர், ஃபவாத் கான், சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் அலீயா பட் ஆகியோர் நடித்துள்ளனர்.[5][6]    கபூர் அண்ட் சன்ஸ்  படமானது  பிரிந்து சென்ற சகோதரர்களின் கதையைக்  கூறுகிறது, அவர்களின் தாத்தா மாரடைப்பால் பாதிக்கப்படும்போது அவர்கள் தங்கள் குடும்பத்திற்குத் திரும்பி வருகிறார்கள் என்பதாக உள்ளது. இப்படமானது உலகளவில் 2016 மார்ச் 18 அன்று வெளியாகி, குறிப்பாக இயக்கம் மற்றும் ரிஷி கபூர், ரத்னா பத்தாக் ஷா மற்றும் ஃபாவத் கான் ஆகியோரின்  நடிப்பு போன்றவை நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[7] படமானது  35 கோடி (US$5.2 மில்லியன்) செலவில் தயாரிக்கப்பட்டு,  152 கோடி (US$23 மில்லியன்) வசூல் செய்தது. 62 வது பிலிம்ஃபேர் விருதுகளில், கபூர் & சன்ஸ் படத்தில் நடித்த ரிஷி கபூருக்கு, சிறந்த துணை நடிகருக்கான விருது, மற்றும் சிறந்த கதை மற்றும் சிறந்த திரைக்கதை உள்ளிட்ட ஐந்து விருதுகளை வென்றது.[8] மேலும் இது சிறந்த திரைப்படத்திற்கான விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

கதை[தொகு]

90 வயரைக் கடந்த அமர் ஜித் கபூரின் ( ரிஷி கபூர்) குடும்பம் பெரியது. அவரது பேரன்களில் ஒருவரான ராகுல் கபூர் (பாவத் கான்) லண்டனில் பிரபல எழுத்தாளராக இருக்கிறார். மற்றோரு பேரனான அர்ஜுன் கபூர் (சித்தார்த் மல்ஹோத்ரா) நியூ ஜெர்சியில் வேலை பார்த்து வருகிறார். இந்த இருவருக்கும் இடையில் நல்லுறவு எப்போதும் இருந்ததில்லை. இந்நிலையில் தாத்தா அமர்ஜித் கபூருக்கு மாரடைப்பால் உடல் நலக்குறை ஏற்படுகிறது. இதனால் இருவரும் தங்கள் ஊர்களில் இருந்து தாத்தாவின் சொந்த ஊரான குன்னூருக்கு வருகின்றனர். இங்கு வந்தும் இருவரின் பனிப்போர் தொடர்கிறது. இந்நிலையில் இவர்களுக்கு இடையில் டியா மாலிக் (ஆலியா பட்) வருகிறாள். அவளின் அன்பைப்பெற இருவரும் முயல்கின்றனர். இதனால் ராகுல் கபூர் மற்றும் அர்ஜூன் கபூர் ஆகியோருக்கு இடையிலான மோதல் மேலும் வலுக்கிறது. இவர்களோடு சேர்ந்து அர்ஜூன் மற்றும் ராகுல் ஆகியோரின் பெற்றோரும் பகைகொண்டு திரிகின்றனர். இவற்றால் பல குழப்பங்கள் அரங்கேறுகின்றன. இருவரின் பகையுணர்ச்சி தீர்ந்த‍தா குடும்பம் ஒன்றானதா என்பதே கதை முடிவு.

நடிகர்கள்[தொகு]

 • ரிசி கபூர் - அமீர்ஜீத் கபூர் 
 • ரத்னா பாத் ஷா - சுனிதா கபூர்
 • ரஜத் கபூர் - ஹர்ஷ் கபூர்
 •  ஃபவாத் கான் - ராகுல் கபூர்
 • சித்தார்த் மல்ஹோத்ரா - அர்ஜூன் கபூர்
 • அலீயா பட் - டியா மாலிக்
 •  அனஹித்தா உபாரோஜ் - நீது சாச்சி
 • விக்ரம் கபாடியா - சஷி சச்சா
 • அனுராதா சந்தன் - அனு ஆண்ட்டி
 • ஷியாநாயியா கபூர் - அலியா
 • பிரதீப் பிரதான் - கிஷோர்  (தியாவின் சமையல்காரர்)
 • பாஹிம் ஷைக் - பூப்லி
 • ஆலேக் கபூர் - சாஹில்
 • சுகாந்த் கோயல் - வசிம்
 •  ஆக்ரிதி டோபல் - பங்கூ
 • முஸ்கான் கன்னா ஷரன் - பிரீட்
 • எலெனா பெர்னாண்டஸ்[9] - ராகுல் கபூரின் மேலாளர்[10]
 •  அர்பாஸ் கட்வானி - ஷரிக்
 • ஆர்யா ஷர்மா - ஜோயி 
 • பர்சார் படேல் - சௌக்சி ககா பர்சார் படேல்
 • சந்திரஜித் ரனவெடே - மக்கிஜா, தரகர் 
 • ராம் சிங் - மல்லிகா பவன்வாலா
 • ரூபா காமத் - திம்மி மாசி 
 •  எட்வர்ட் சோனென்ப்ளிக் - டான் 
 • ராஜு - கிஷு 

தயாரிப்பு[தொகு]

2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கரன் ஜோஹர் தனது அடுத்த படத்தின் பெயராக கபூர் அண்ட் சன்ஸ் என்ற படத்தை அறிவித்தார், இதில் ஃபாதாட் கான் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ஆலியா பட் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பார்கள் என அறிவிக்கப்பட்டது. ஃபாதாட் கான் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோர் நடித்த இரு சகோதரர்கள் பாத்திரத்தைச் மையமாகக் கொண்டே படம் நகர்கிறது.   ரிஷி கபூர் பாட்டனாராக நடித்தார்.[11][12] கரன் ஜோஹர் ஒரு நேர்காணலில், "கபூர் அண்ட் சன்ஸ் (1921 ஆம் ஆண்டு முதல்) படமானது நடிப்பதற்கு கடினமான படம் என்றார். பட முயற்சியை நாங்கள் ஒரு வருடத்திற்கு மேல் சுமந்து திரிந்தோம். ஃபவாத் கான் ஏற்ற பாத்திரத்தை செய்ய யாரும் தயாராக இல்லை. ஆறு நடிகர்களிடம் பாத்திரத்தை ஏற்கச் சொன்னபோது அவர்கள் நிராகரிப்புக்குப் பிறகு, நான் யோசனையை கைவிட வேண்டும் என்று ஷகன் பாத்ராவிடம் (இயக்குனர்) தெரிவித்தேன், அதன்பிறகு அவர் வேரொரு திரைக்கதை உருவாக்கத் தொடங்கினார்."[13]

மேற்கோள்கள்[தொகு]

 1. "KAPOOR AND SONS (12A)". British Board of Film Classification. 11 March 2016. Archived from the original on 20 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 16 March 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 2. Malvania, Urvi (19 March 2016). "Kapoor and Sons off to a decent start at box office". பிசினஸ் ஸ்டாண்டர்ட். http://www.business-standard.com/article/current-affairs/kapoor-and-sons-off-to-a-decent-start-at-box-office-116031900322_1.html. பார்த்த நாள்: 28 March 2016. 
 3. "Box Office: Worldwide Collections of Kapoor & Sons". Bollywood Hungama. பார்க்கப்பட்ட நாள் 28 March 2016.
 4. Bollywood Hungama. "Kapoor & Sons". bollywoodhungama.com.
 5. Bollywood Hungama. "Alia Bhatt – Sidharth Malhotra to play siblings long with Fawad Khan in Kapoor & Sons". Bollywood Hungama. பார்க்கப்பட்ட நாள் 22 August 2015.
 6. "'KAPOOR and SONS' shoot begins". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 10 May 2015. பார்க்கப்பட்ட நாள் 22 August 2015.
 7. "Kapoor & Sons trailer: It has all the ingredients of a blockbuster". ஹிந்துஸ்தான் டைம்ஸ். http://www.hindustantimes.com/bollywood/kapoor-sons-trailer-it-has-all-the-ingredients-of-a-blockbuster/story-XcXw0gRWB8s8Wq4Wp38FcN.html. பார்த்த நாள்: 10 February 2016. 
 8. "62nd Filmfare Awards 2017: Winners' list". The Times of India. 15 January 2017. http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/62nd-filmfare-awards-2017-winners-list/articleshow/56541241.cms. பார்த்த நாள்: 15 January 2017. 
 9. "Elena Fernandes" (in en). Wikipedia. 2017-09-04. https://en.wikipedia.org/w/index.php?title=Elena_Fernandes&oldid=798901687. 
 10. http://daily.bhaskar.com/news/ENT-BOW-elena-fernandes-5354714-PHO.html
 11. "Alia Bhatt to Romance Sidharth, Fawad Khan in Kapoor and Sons". என்டிடிவி. பார்க்கப்பட்ட நாள் 22 August 2015.
 12. "Here is the cast of upcoming Dharma Productions 'Kapoor & Sons'!". DNA India. 25 March 2015. பார்க்கப்பட்ட நாள் 22 August 2015.
 13. "Fawad's role in Kapoor And Sons was rejected by 6 actors, confirm KJo – The Express Tribune". 8 April 2016. பார்க்கப்பட்ட நாள் 27 December 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கபூர்_அண்ட்_சன்ஸ்&oldid=3953682" இலிருந்து மீள்விக்கப்பட்டது