கபாலா

ஆள்கூறுகள்: 40°58′53″N 47°50′45″E / 40.98139°N 47.84583°E / 40.98139; 47.84583
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கபாலா
நகரம் & நகராட்சி
மேலே இருந்து: ஆற்றோர விடுதி; இடது: கபாலா கோட்டையின் இடிபாடுகள், வலது: இமாம் பாபா கல்லறையில் ஒரு இடைக்கால பள்ளிவாசல்; இடது: இஸ்மாயில் குடா குட்காஷென்லியின் சிலை, வலது: கபாலா சர்வதேச இசை விழா; கீழே: கபாலாந்து கேளிக்கைப் பூங்கா
மேலே இருந்து: ஆற்றோர விடுதி;
இடது: கபாலா கோட்டையின் இடிபாடுகள், வலது: இமாம் பாபா கல்லறையில் ஒரு இடைக்கால பள்ளிவாசல்;
இடது: இஸ்மாயில் குடா குட்காஷென்லியின் சிலை, வலது: கபாலா சர்வதேச இசை விழா;
கீழே: கபாலாந்து கேளிக்கைப் பூங்கா
ஆள்கூறுகள்: 40°58′53″N 47°50′45″E / 40.98139°N 47.84583°E / 40.98139; 47.84583
நாடு அசர்பைஜான்
நிர்வாகப் பிரிவுகபாலா
Established1537
பரப்பளவு
 • மொத்தம்1,548 km2 (598 sq mi)
ஏற்றம்783 m (2,569 ft)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்12,808
நேர வலயம்AZT (ஒசநே+4)
தொலைபேசி குறியீடு+994 160
இணையதளம்www.qebele-ih.gov.az

கபாலா (abala) என்பது அசர்பைஜான் குடியரசில் உள்ள ஒரு நகரமும்,கபாலா மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். [2] நகராட்சி கபாலா நகரத்தையும், கோஸ்நாட் கிராமத்தையும் உள்ளடக்கியுள்ளது . [3] இந்த நகரம் முன்னர், குட்காஷென் என்று அழைக்கப்பட்டது. ஆனால் அசர்பைஜான் குடியரசின் சுதந்திரத்திற்குப் பிறகு, காக்கேசிய அல்பேனியாவின் தொல்பொருள் தளத்திற்கு சுமார் 20 கிமீ தென்மேற்கில் அமைந்துள்ள முன்னாள் தலைநகரான கபாலாவின் நினைவாக இந்த நகரம் மறுபெயரிடப்பட்டது.

வரலாறு[தொகு]

பழங்காலம்[தொகு]

கபாலா காக்கேசிய அல்பேனியாவின் பண்டைய தலைநகரமாகும். கிமு 4 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த நகரம் காக்கேசிய அல்பேனியாவின் தலைநகராக செயல்பட்டதாக தொல்பொருள் சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. [4] தற்போது வரை பண்டைய நகரத்தின் இடிபாடுகளும், காக்கேசிய அல்பேனியாவின் பிரதான வாயிலும் உள்ளன. கிமு 4 முதல் 3 ஆம் நூற்றாண்டு வரையிலும், 18 ஆம் நூற்றாண்டு வரையிலும் கபாலா வளர்ந்த வர்த்தகம் மற்றும் கைவினைப்பொருட்களைக் கொண்ட முக்கிய நகரங்களில் ஒன்றாக இருந்தது என்பதை சுகுர் கிராமத்திற்கு அருகே நடந்து வரும் அகழ்வாராய்ச்சிகள் காட்டுகின்றன. பண்டைய நகரத்தின் இடிபாடுகள் பிராந்திய மையத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளன. இது கராச்சே மற்றும் ஜோர்லுச்சே ஆறுகளுக்கு இடையிலான பிரதேசத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. [5] [6] கபாலா 2,500 ஆண்டுகள் பழமையான பட்டுப் பாதையின் நடுவில் அமைந்திருந்தது. இளைய பிளினி "கபாலகா" என்றும், கிரேக்க புவியியலாளர் தொலமி "கபாலா" என்றும், அரபு வரலாற்றாசிரியர் அஹ்மத் இப்னு யஹ்யா அல்-பாலாதுரி "கஜார்" என்றும் இதை குறிப்பிட்டுள்ளனர். 19ஆம் நூற்றாண்டில், அசர்பைஜானின் வரலாற்றாசிரியர் அப்பாஸ்குலு பக்கிகனோவ் கபாலா அல்லது கப்பாலா என்று தனது குலிஸ்தானி ஐரெம் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குடியரசு சகாப்தம்[தொகு]

அசர்பைஜானில் அல்பேனிய தலைநகர் கபாலாவின் வாயில்களின் இடிபாடுகள்
கபாலாவின் இயற்கைக் காட்சி

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர், கபாலா அதன் வரலாற்றில் காணப்படாத அளவில் மறுசீரமைப்பு செய்வதற்கான ஒரு பணியைத் தொடங்கியது. [7] சோவியத் காலத்திலிருந்து ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிக்கப்பட்டு அதன் கரையில் ஒரு பச்சை புள்வெளிகள் வளர்க்கப்பட்டன; கபாலாவின் அடிவாரத்தை நிரப்புவதன் மூலம் மீட்டெடுக்கப்பட்ட நிலத்தில் பூங்காக்களும், தோட்டங்களும் கட்டப்பட்டன. [8] பொது சுத்தம், பராமரிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு ஆகியவற்றில் மேம்பாடுகள் செய்யப்பட்டன. இந்த சேவைகள் இப்போது மேற்கு ஐரோப்பிய தரத்தில் உள்ளன. காசுப்பியன் கடலின் கரையில் வடக்கு அச்சில் நகரம் மாறும் மற்றும் முழு வேகத்தில் வளர்ந்து வருகிறது.

2010களிளும், 2013இலிம் துருக்கிய சபையின் உச்சிமாநாடு போன்ற நிகழ்வுகள் இங்கு நடந்தது. [9] அசர்பைஜான் மற்றும் பிராந்தியத்தின் வரலாற்றில் அதன் நீண்டகால பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, 2013 ஆம் ஆண்டில், இந்த நகரம் பொதுநலவாய நாடுகளின் கலாச்சாரத் தலைநகராக அறிவிக்கப்பட்டது. [10]

பொருளாதாரம்[தொகு]

கபாலாவின் பொருளாதாரம் ஓரளவு விவசாயத்தையும், ஓரளவு சுற்றுலாவையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. சில உற்பத்தித் தொழில்கள், முக்கியமாக உணவுப் பாதுகாப்பு, புகையிலை, பட்டுப்புழு கூட்டை உலர்த்துதல் போன்றவை. [11] [12] நகரின் முக்கிய உற்பத்தி நிறுவனங்கள் பொறியியல், கட்டுமானம், காய்ச்சுதல் மற்றும் வடிகட்டுதல் மற்றும் உணவு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. [13] [14] "பெல்ட்மேன்" கின்னரப்பெட்டிதொழிற்சாலையும் உள்ளது. அதன் தயாரிப்பாளர் ஹான்ஸ் லெஃபெரிங்க் - ஜொஹான் பெல்ட்மேனின் பேரன், 1901 ஆம் ஆண்டில், நெதர்லாந்து இராச்சியத்தில் இதேபோன்ற வணிகத்தை நிறுவினார். [15] [16] சாறு தொழிற்சாலை, கொட்டை தொழிற்சாலை போன்ற பல்வேறு தொழிற்சாலைகள் மாவட்டத்தில் இயங்குகின்றன.

படத் தொகுப்பு[தொகு]

மேலும் காண்க[தொகு]

 • ஷாகி
 • லங்கரன்
 • நக்கிவன்
 • மிங்கசேவிர்

மேற்கோள்கள்[தொகு]

 1. Population of the region
 2. Gabala, Azerbaijan
 3. "Belediyye Informasiya Sistemi" (in Azerbaijani). Archived from the original on 24 September 2008.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 4. Revisiting History
 5. AZERBAIJAN.TRAVEL. "Gabala - Visit Azerbaijan". azerbaijan.travel (in ஆங்கிலம்). Archived from the original on 1 June 2017. பார்க்கப்பட்ட நாள் 26 May 2017.
 6. History of Gebele city
 7. "History of Qabala". www.qebele-ih.gov.az. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
 8. "Президент Ильхам Алиев: Сегодня Габала стала одним из культурных и туристических центров Азербайджана". www.azeri.lv. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
 9. "The Third Turkic Council Summit Meeting was held in Gabala". www.mfa.gov.tr. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
 10. "Summit to See". www.thebusinessyear.com. Archived from the original on 11 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
 11. "GABALA / QƏBƏLƏ". Archived from the original on 1 January 2011. பார்க்கப்பட்ட நாள் 6 December 2010.
 12. Qəbələ şəhəri on Ministry of Culture and Tourism of Azerbaijan Republic (in Azerbaijani)
 13. "Wine Adventures of Italians in Gabala. Furor Magazine (March 2013)". www.aspiwinery.com. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
 14. "Infrastructure of Gabala". www.qebele-ih.gov.az. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
 15. ""Beltman" piano factory". www.qebele-ih.gov.az. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
 16. Beltmann website பரணிடப்பட்டது 2 ஏப்பிரல் 2015 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கபாலா&oldid=3627329" இலிருந்து மீள்விக்கப்பட்டது