கனாரியின் பெரும் தொலைநோக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கனாரியின் பெரும் தொலைநோக்கி
Gran Telescopio de Canarias
GranTeCan Mosaic.jpg
கனாரியின் பெரும் தொலைநோக்கி, 2008
நிறுவனம்கனாரியின் வானியற்பியல் கழகம்,
புளோரிடா பல்கலைக்கழகம்
அமைவுLa Palma,  எசுப்பானியா
ஆள்கூறுகள்28°45′23.8″N 17°53′31.3″W / 28.756611°N 17.892028°W / 28.756611; -17.892028ஆள்கூற்று: 28°45′23.8″N 17°53′31.3″W / 28.756611°N 17.892028°W / 28.756611; -17.892028
உயரம்2267 மீ[1] + 8 m pier
அமைக்கப்பட்ட காலம்2002–2008
முதல் ஒளி2007-07-13
தொலைநோக்கி வகை Segmented Ritchey-Chrétien telescope[2]
விட்டம்10.4 மீ (நிகர), 11386.9 மிமீ (அதிகூடியது)[2]
சேர்க்கும் பரப்பு78.54 மீ² (74.14 மீ² effective)[2]
குவியத் தூரம்16.5 மீ[2]
MountingAltitude/azimuth
இணையத்தளம்http://www.gtc.iac.es/en/

கனாரியின் பெரும் தொலைநோக்கி (Gran Telescopio Canarias, GranTeCan அல்லது GTC), எனப்படுவது கனாரி தீவுகளில் அமைக்கப்பட்டுள்ள 10.4 மீட்டர் உயரமான உலகின் மிகப்பெரும் தெறிப்புவகைத் தொலைநோக்கி ஆகும். இது ஸ்பெயினின் கனாரி தீவுகளில் ஒன்றான லா பால்மா தீவில் உள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து 2,267 மீட்டர் (7,440 அடி) உயரத்தில் எரிமலைக் குன்றின் மேல் அமைக்கப்பட்டுள்ள இப்பெரும் தொலைநோக்கி யின் கட்டுமானப் பணிகள் முடிவதற்கு ஏழாண்டுகள் ஆயின. இதற்கான மொத்தச்செலவு €130 மில்லிய யூரோக்கள் ஆகும்[3]. இந்தத்திட்டத்தை ஸ்பெயின், மெக்சிக்கோ, மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளின் பல தொழில்நுட்பக்கழகங்கள், பல்கலைக்கழகங்கள் இணைந்து செயல்படுத்தின[4]. 1987 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டு கிட்டத்தட்ட 100 நிறுவனக்களின் ஆயிரத்திற்கும் அதிகமானோரால் இத்தொலைநோக்கி கட்டி முடிக்கப்பட்டது[3]. புளோரிடா பல்கலைக்கழகம் மட்டும் இத்திட்டத்திற்கு 5 மில்லியன் டாலர்களை முதலிட்டது. இப்பல்கலைக்கழகத்துக்கு 5 விழுக்காடு பங்கு கொடுக்கப்பட்டுள்ளது[5]. தற்போது இதுவே உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியாகும்[6].

திறப்பு விழா[தொகு]

கனாரியின் பெரும் தொலைநோக்கி

கனாரியின் பெரும் தொலைநோக்கி 2009, ஜூலை 24 ஆம் நாள் ஸ்பெயின் மன்னர் முதலாம் ஹுவான் கார்லோசுவினால் திறந்து வைக்கப்பட்டது[7]. ஐரோப்பா மற்றும் அமெரிக்காக்களில் இருந்து ஐநூறுக்கும் அதிகமான வானியலாளர்கள், அரசப் பிரதிநிதிகாள், ஊடகவியலாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்[5].

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]