கனக் சாகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனக் சாகா
பிறப்புகூச் பெகர், மேற்கு வங்காளம்
தேசியம்இந்தியர்
துறைவானியற்பியல்
பணியிடங்கள்பல்கலைக்கழகங்களுக்கான வானியல், வானியற்பியல் மையம்
கல்வி கற்ற இடங்கள்
விருதுகள்
இணையதளம்
www.iucaa.in/~kanak/welcomek.html

கனக் சாகா (Kanak Saha) என்பவர் இந்திய வானியல் இயற்பியலாளர் ஆவார். இவர் பல்கலைக்கழகங்களுக்கான வானியல், வானியற்பியல் மையம் வானியற்பியல் இணைப் பேராசிரியராக உள்ளார். இவரது ஆராய்ச்சி ஆரம்பக்கால பிரபஞ்சத்தில் விண்மீன் திரள்களின் உருவாக்கம் மற்றும் அவற்றின் பரிணாமம் ஆகியவையாகும்.[1] இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் வழங்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதினை 2021ஆம் ஆண்டு இவரது இயற்பியல் ஆய்வு பங்களிப்பிற்காக வழங்கியது.[2][3]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

கனக் சாகா மேற்கு வங்காளத்தில் உள்ள கூச் பெஹாரில் பிறந்தார். சாகா 1998-ல் இசுகாட்லாந்து தேவாலய கல்லூரியில் இளம் அறிவியல் பட்டம் இயற்பியலில் பெற்றார். இவர் முது அறிவியல் பட்டத்தினை 2001-ல் பனாரசு இந்து பல்கலைக்கழகத்திலும் 2008ஆம் ஆண்டு முனைவர் பட்டத்தினை இந்திய அறிவியல் நிறுவனத்தில் பெற்றார்.[3]

விருதுகள்[தொகு]

2021ஆம் ஆண்டில், வானியல் செயற்கைக்கோளினைப் பயன்படுத்தி அதிக சிவப்பு நிறத்தில் மங்கலான விண்மீனைக் கண்டுபிடித்ததற்காக சாகாவுக்கு இயற்பியல் அறிவியல் பிரிவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசு வழங்கப்பட்டது.[1][2][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "IUCAA scientist among 2021 Shanti Swarup Bhatnagar winners". The Indian Express (in ஆங்கிலம்). 2021-09-27. பார்க்கப்பட்ட நாள் 2021-09-30.
  2. 2.0 2.1 Shanti Swarup Bhatnagar Prize (SSB) for Science and Technology 2021. ssbprize.gov.in. 2021-03-26. Retrieved 2021-09-30.
  3. 3.0 3.1 "Meet the Indian researcher uncovering clues to the formation of the galaxies". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-03-26. பார்க்கப்பட்ட நாள் 2021-09-30.
  4. "Awardee Details: Shanti Swarup Bhatnagar Prize". ssbprize.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-19.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனக்_சாகா&oldid=3371962" இலிருந்து மீள்விக்கப்பட்டது