கனகலதா பரூவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கனகலதா பரூவா
Kanaklata Barua
কনকলতাৰ প্ৰতিমুৰ্তি.JPG
கோபூரில் அமைக்கப்பட்டுள்ள கனகலதா பரூவாவின் சிலை
தாய்மொழியில் பெயர்কনকলতা বৰুৱা
பிறப்புதிசம்பர் 22, 1924(1924-12-22)
போராங்கபாரி, கோபூர், தர்ரங் மாவட்டம் (தற்போதய சோணித்பூர் மாவட்டப் பகுதி)
இறப்பு20 செப்டம்பர் 1942(1942-09-20) (அகவை 17)
போராங்கபாரி, கோபூர்
அரசியல் இயக்கம்இந்திய விடுதலை இயக்கம்

கனகலதா பரூவா ( அசாமி কনকলতা বৰুৱা (22 திசம்பர் 1924 - 20 செப்டம்பர் 1942), என்பவர் அசாமைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனையாவார். 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது, தேசிய கொடி தாங்கி ஊர்வலமாக சென்றபோது சுட்டுக் கொல்லப்பட்டார். [1]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

அசாமின் தேஜ்பூரில் கனகலதா உதயன் அல்லது பாறைப் பூங்காவில் உள்ள ஒரு சிற்பமானது இந்த நிகழ்வை விவரிக்கிறது.

அசாமின் பிரிக்கப்படாத தர்ரங் மாவட்டத்தின், போராங்கபாரி கிராமத்தில் கிருஷ்ணா காந்தா, கர்னேஸ்வரி பாரூவா இணையருக்கு மகளாக கனகலதா பிறந்தார். இவரது தாயார் கனகலாதாவின் ஐந்து வயதிலேயே இறந்தார், அதைத் தொடர்ந்து இவருடைய தந்தையும் இறந்துவிட்டார். மூன்றாம் வகுப்பு வரை பள்ளிக்குச் சென்ற நிலையில், தன் தங்கைகளை கவனித்துக் கொள்வதற்காக படிப்பைக் கைவிட்டார். [2]

விடுதலைப் போராட்டத்தில்[தொகு]

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது, அசாமின் கோபூர் துணைக் கோட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களைக் கொண்ட குழுவான மிருத்யு பாகிணி என்ற அமைப்பில் கனகலதா இணைந்தார். 20 செப்டம்பர் 1942 அன்று உள்ளூர் காவல் நிலையத்தில் தேசியக் கொடியை ஏற்ற பகிணி முடிவு செய்தது. நிராயுதபாணிகளான கிராமவாசிகளின் ஊர்வலத்தில் கனகலதா முன்வரிசையில் சென்றார். காவல் நிலையத்தை பொறுப்பாளராக இருந்த ரெபாட்டி மகான் சோ என்பவரின் தலைமையில் இருந்த காவலர்கள் பாகிணிகள் தங்கள் திட்டத்தை நிறைவேற்ற முனைந்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தனர். ஆனால் காவல்துறையினரின் தடையை மீறி ஊர்வலமானது முன்னேறியது. இதையடுத்து காவல்துறையினர் ஊர்வலத்தினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் ஊர்வலத்தின் முன் வரிசையில் கொடியை ஏந்திவந்த கனகலதா சுட்டப்பட்டார். இதையடுத்து அவர் ஏந்திவந்த தேசியக் கொடியை அவருக்கு அருகில் இருந்த முகுந்தா ககோதியிடம் கையளித்தார். இதையடுத்து அவரும் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிகழ்வில் கனகலதா மற்றும் ககோதி ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர். இப்போராட்டத்தின்போது உயிரிழந்த கனகலாதாவுக்கு அப்போது வயது 17 மட்டுமே. [3]

இறப்பும் நினைவேந்தலும்[தொகு]

இந்திய கடலோரக் காவல்படையின் விரைவுக் கண்காணிப்புக் கப்பலாக 1997 இல் சேர்க்கப்பட்ட கப்பலுக்கு கனகலதா என்ற பெயரிடப்பட்டது. [4] 2011 ஆம் ஆண்டில் கௌரிபூரில் இவருக்கு முழு உருவச் சிலை நிறுவப்பட்டது. [5]

பரவலப் பண்பாட்டில்[தொகு]

இயக்குனர் சந்திர முடாவின் திரைப்படமான ஈப்பா புல்லில் எப்பா ஜொரிலில் இவரது வாழ்க்கைக் கதையாகும். இந்த திரைப்படத்தின் இந்திப் பதிப்பு, புராப் கி ஆவாஸ் என்ற பெயரில் வெளியிடப்பட்டு, பரந்த அளவிலான பார்வையாளர்களை அடையுமாறு வெளியிடப்பட்டது. [6]


குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனகலதா_பரூவா&oldid=2721729" இருந்து மீள்விக்கப்பட்டது