கதாநாயகன் (2017 திரைப்படம்)
கதாநாயகன் | |
---|---|
இயக்கம் | தா. முருகானந்தம் |
தயாரிப்பு | விஷ்ணு விஷால் ரஜனி நடராஜ் |
கதை | தா. முருகானந்தம் |
இசை | சீன் ரோல்டன் |
நடிப்பு | விஷ்ணு விஷால், கேத்ரின் தெரேசா ஆனந்தராஜ் சூரி |
ஒளிப்பதிவு | ஜே. லக்ஸ்மன் |
படத்தொகுப்பு | ஆர். ஶ்ரீதரன் |
கலையகம் | விஷ்ணு விஷால் ஸ்டுடியோ |
விநியோகம் | பொக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ |
வெளியீடு | 8 செப்டம்பர் 2017 |
ஓட்டம் | 116 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதாநாயகன் (kathanayagan (ஆங்கிலம் : லீட் ஹீரோ) 2017 ஆம் ஆண்டு வெளிவந்த தா. முருகானந்தம் எழுதி, இயக்கிய, நடிகர் விஷ்ணுவின் தயாரிப்பிலும், நடிப்பிலும் வெளிவந்த காதல் மற்றும் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். நடிகை கேத்ரின் தெரேசா, நடிகர் ஆனந்தராஜ், நடிகர் சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கின்றார். இசையமைப்பாளர் சான் ரோல்டன் இசையமைப்பில் வெளியானது. இத் திரைப்படத்தின் தயாரிப்பு 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் தொடங்கியது.[1] 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இத்திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் சினிமா ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.[2]
நடிகர்கள்
[தொகு]- விஷ்ணு விஷால் - தம்பி துரை
- கேத்ரின் தெரேசா - கண்மணி (டப்பிங் குரல் ரவீனா ரவி)
- ஆனந்தராஜ் - துபாய் ஷேக்
- சூரி - அண்ணாதுரை
- சரண்யா பொன்வண்ணன் - தம்பிதுரையின் தாய்
- ஜீவா ரவி - தம்பிதுரையின் தந்தை
- மீரா கிருஷ்ணன் - கண்மணியின் தாய்
- கே. நடராஜ் - சுப்பரமணி, கண்மணியின் தந்தை
- அருள் தாஸ் - தா
- இராசேந்திரன் (நடிகர்) - மைக் மாரி
- அதுல்யா - கண்மணியின் தோழி
- சித்தார்த் விபின் - வைத்தியர்
- மனோபாலா - சுவாமி
- சுவாமிநாதன் - மணி
- துர்கா - துர்கா, தம்பிதுரையின் சகோதரி
- பொக்ஸர் ஆறுமுகம் - சிங்கம்
- கோவை பாபு - சரவணன்
- ஜெயராஜ் - சரவணனின் தந்தை
- தீக்சன்யா - சரவணனின் தாய்
- மாயி சுந்தர்
- வைத்தியர் அருன் சின்னயா
- விஜய் சேதுபதி - வைத்தியர் பியோனிக்ஸ் ராஜ், சிறப்பு தோற்றம்
- தா. முருகானந்தம் - சண்டே நா போத்தல் எடு பாடல் , சிறப்பு தோற்றம்
- எம். ஷரீப் - சிறப்பு தோற்றம், ஒன் நெனப்பு பாடல்
தயாரிப்பு
[தொகு]2016 ஆம் ஆண்டு செப்டம்பரில், அறிமுக இயக்குனர் முருகானந்தத்தின் இயக்கத்தில் தனது தயாரிப்பிலும், நடிப்பிலும் இத்திரைப்படம் வெளியாகும் என விஷ்ணு விஷால் அறிவித்தார்.[3] பின் இசையமைப்பாளராக சான் ரொல்டனும், நடிகர் சூரியும் இணைந்தனர்.[4] பின்பு நடிகை கேத்ரின் தெரேசா இப்படத்தில் ஒப்பந்தமானார். இயக்குனர் சங்கர் தயாலின் இயக்கத்தில் வீர தீர சூரன் திரைப்படத்தில் விஷ்ணு மற்றும் கேத்ரின் தெரேசா ஆகியோர் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.[5] 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திரைப்படத்தின் பெயர் கதாநாயகன் என விஷ்ணு அறிவித்தார்.[6] திரைப்படத்தின் ஆரம்பத்தில் நடிகர் சிலம்பரசனின் குரல் ஒலிக்கின்றது. இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றமளிக்கின்றார்.[7]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்கள் | நீளம் | |||||||
1. | "கதா நாயகன் தி ஹீரோ" | சீன் ரோல்டன் | 2:44 | |||||||
2. | "ஒன் நெனப்பு" | அனிருத் ரவிச்சந்திரன் | 3:13 | |||||||
3. | "டப்பு டிப்பு" | முகேஷ் | 3:02 | |||||||
4. | "சண்டே நா போத்தல் எடு" | ரவி ஜி | 3:15 | |||||||
5. | "ரைஸ் ஒப் எ ஹீரோ" | 2:19 | ||||||||
மொத்த நீளம்: |
14:30 |
வெளியீடு
[தொகு]இந்த படத்தின் செயற்கைக்கோள் உரிமைகள் ஸ்டார் விஜய் பெற்றது..
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-09-13. பார்க்கப்பட்ட நாள் 2019-02-13.
- ↑ http://indianexpress.com/article/entertainment/tamil/kollywood-movie-review/kathanayagan-movie-review-vishnu-catherine-tresa-star-rating-4832886/
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-11-05. பார்க்கப்பட்ட நாள் 2019-02-13.
- ↑ http://www.indiaglitz.com/vishnu-vishalcatherine-tresa-untitled-tamil-movie-preview-21145.html
- ↑ http://www.indiaglitz.com/soori-and-music-director-sean-roldon-in-vishnu-vishal-catherine-tresa-film-tamil-news-167683.html
- ↑ http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/vishnu-vishals-next-film-has-been-titled-as-katha-nayagan.html
- ↑ http://www.deccanchronicle.com/entertainment/kollywood/140817/a-laugh-riot-in-the-making.html