கட்டன்டுவனேஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கட்டன்டுவனேஸ்
மாகாணம்
நாடு பிலிப்பீன்சு
பிராந்தியம் பிகோல் பிராந்தியம்
நேர வலயம் பிசீநே (ஒசநே+8)

கட்டன்டுவனேஸ் (Catanduanes) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், பிகோல் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஆறு மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் விராக் ஆகும். இது 1945 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. இம்மாகாணத்தில் 315 கிராமங்களும், 11 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் ஜோசப் சி. குவா (Joseph C. Cua) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 1,492.16 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக கட்டன்டுவனேஸ் மாகாணத்தின் சனத்தொகை 260,964 ஆகும்.[2] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 70ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 67ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் பிலிப்பினோ ஆங்கிலம் உள்ளடங்கலாக மூன்று பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இம்மாகாணத்தின் சனத்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 170 மக்கள் என்பதாகும். மேலும் சனத்தொகை அடர்த்தியின் அடிப்படையில் இது 81 பிலிப்பீனிய மாகாணங்களில் 50ஆம் மாகாணம் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Provinces". PSGC Interactive. Makati City, Philippines: National Statistical Coordination Board. பார்த்த நாள் 30 December 2013.
  2. "Population of the provine".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டன்டுவனேஸ்&oldid=2168845" இருந்து மீள்விக்கப்பட்டது