கங்காரு (2007 திரைப்படம்)
கங்காரு என்பது 2007 ஆம் ஆண்டு இந்திய மலையாள மொழி நாடக திரில்லர் படமாகும். இந்தத் திரைப்படத்தினை ராஜ் பாபு இயக்கியிருந்தார். பிருத்விராஜ் சுகுமாரன், காவ்யா மாதவன் மற்றும் ஜெயசூர்யா ஆகியோர் நடித்திருந்தனர். இது அனில் ராஜ் எழுதிய கதையாகும். அதனை திரைக்கதையாக ஜே.பல்லசேரி எழுதினார். இந்த படம் 2007 இல் ஒரு சராசரி வெற்றி அடைந்தது.
நடிகர்கள்[தொகு]
- ஜோசப் ஆபிரகாம் / ஜோசகுட்டியாக பிருத்விராஜ் சுகுமாரன்
- ஜான்சியாக காவ்யா மாதவன்
- மோனிச்சனாக ஜெயசூர்யா
- ஓவியா - சோசனா
- லாலு அலெக்ஸ் ஸ்டீபனாக
- பாப்பிக்குஞ்சாக ஹரிஸ்ரீ அசோகன்
- ஜகதி ஸ்ரீகுமார் மேத்யூ ஆபிரகாம் அல்லது மாத்துகூட்டியாக
- 'நடப்பு' குஞ்சாச்சனாக சலீம் குமார்
- நான்சியாக காவேரி
- பாபிச்சனாக சூரஜ் வெஞ்சராமுத்
- செல்லப்பனாக இந்திரன்ஸ்
- அண்ணகுட்டியாக பிந்து பானிகர்
- சிசிலியாக கலராஞ்சினி
- ஜோசெகுட்டியின் தாயாக சுகுமாரி
- ஜான்சியின் தாயாக கே. பி. ஏ. சி லலிதா
- 'சிரிஞ்ச்' வாசுவாக ஸ்ரீஜித் ரவி
- பி. சாந்தகுமாரி - ஜனாமாமா
- பால் கே.மணியாக டி.பி. மாதவன்
- லிட்டில் கேர்லாக அன்னி
ஆக்கம்[தொகு]
இந்தத் திரைப்படத்தின் ஆரம்பத்தில் ஜோசகுட்டியின் முக்கிய கதைப்பாத்திரத்தில் ஜெயசூர்யா நடிப்பதாக இருந்தது. சோட்டா மும்பையில் என்ற திரைப்படத்தில் அவர் நடிப்பதனால் இப்படத்தின் அவருடைய கதைப்பாத்திரத்தினை பிருத்விராஜ் சுகுமாரன் ஏற்று நடித்தார்.[1]
வெளியீடு[தொகு]
இந்த திரைப்படம் 21 டிசம்பர் 2007 அன்று வெளியிடப்பட்டது.
குறிப்புகள்[தொகு]
- ↑ George, Vijay (4 January 2008). "Interview : A positive impact". தி இந்து. Archived from the original on 8 ஜனவரி 2008. https://web.archive.org/web/20080108213537/http://www.hindu.com/fr/2008/01/04/stories/2008010450070400.htm. பார்த்த நாள்: 25 July 2019.