இந்திரன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்திரன்ஸ்
Indrans.jpg
2018இல் சுரேந்திரன் கொச்சுவேலு
பிறப்புசுரேந்திரன் கொச்சுவேலு
12 மார்ச்சு 1956 (1956-03-12) (அகவை 65)
திருவனந்தபுரம், கேரளம், இந்தியா
தேசியம் இந்தியா
பணி
செயற்பாட்டுக்
காலம்
1981–தற்போது வரை
பெற்றோர்
  • பாலவிலா கொச்சுவேலு
  • கோமதி

சுரேந்திரன் கொச்சுவேலு (Surendran Kochuvelu) (பிறப்பு 12 மார்ச் 1956),[1] இந்திரன்ஸ் என்ற தனது திரைப்பெயரால் நன்கு அறியப்பட்ட இவர், ஓர் இந்திய திரைப்பட நடிகரும், முன்னாள் ஆடை வடிவமைப்பாளரும் ஆவார். இவர் முக்கியமாக மலையாளத் திரைப்படங்களில் தோன்றுகிறார். 1981 இல் ஆடை வடிவமைப்பாளராகவும் நடிகராகவும் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1994 இல் சிஐடி உன்னிகிருஷ்ணன் பி,ஏ,, பி.எட்., என்ற நகைச்சுவைத் திரைப்படத்தின் மூலம் ஒரு வாய்ப்பைப் பெற்றார். 1990- 2000களில் இவர் நகைச்சுவை வேடங்களில் பிரபலமானார். தனது பிந்தைய வாழ்க்கையில் குணச்சித்திர வேடங்களில் நடிப்பதில் வெற்றியைக் கண்டார். மேலும், 2014 இல் அப்போதெக்கரி என்ற படத்தில் சிறப்பான நடிப்பிற்காக கேரளா மாநில திரைப்பட விருதுகளில் சிறப்புப் பரிசையும், 2018இல், ஆலோருக்கம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதையும் பெற்றார். வெயில்மரங்களில் படம் 2019 சிங்கப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் இவருக்கு சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுத் தந்தது. ஜூன் 2021 நிலவரப்படி, இவர் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். [2]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இந்திரன்ஸ் 12 மார்ச் 1956 இல் பிறந்தார். சுரேந்திரன் என்று பெயரில் திருவனந்தபுரம் குமாரபுரத்தில் உள்ள பாலவிலா கொச்சுவேலு- கோமதி தம்பதியின் ஏழு குழந்தைகளில் இரண்டாவதாக பிறந்தார்.[3] சாஸ்தம்கோட்டா அரசு கல்லூரியில் நுண்ணுயிரியலில் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர் சிலகாலம் தனது மாமாவுடன் சேர்ந்து தையல்காரராக வேலை செய்யத் தொடங்கினார். பின்னர், கலைக் கழகங்களில் சேர்ந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். தூர்தர்ஷனில் காளிவீடு என்ற தொலைக்காட்சித் தொடரின் மூலம் தனது நடிப்புத் தொழிலைத் தொடங்கினார். இவரது சகோதரர்கள் விஜயகுமார் கே, ஜெயக்குமார் கே ஆகியோருடன் சேர்ந்து, திருவனந்தபுரம் குமாரபுரத்தில் "இந்திரன்ஸ் பிரதர்ஸ் டெய்லர்ஸ்" என்ற தையல் கடையைத் திறந்தார். [4]

குடும்பம்[தொகு]

இவர் சாந்தகுமாரி என்பவரை 23 பிப்ரவரி 1985 இல் மணந்தார். இவர்களுக்கு மகிதா என்ற மகளும் மகேந்திரன் என்ற மகனும் உள்ளனர்.[5]

இந்திரன்ஸ், பார்வதி ஆகியோர் 2018 ஆம் ஆண்டில் சிறந்த நடிகர், சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதுகளைப் பெறுகின்றனர்

தமிழ்ப் படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரன்ஸ்&oldid=3209869" இருந்து மீள்விக்கப்பட்டது