ஓய்வு நாள் (யூதம்)
Jump to navigation
Jump to search
ஓய்வு நாள் அல்லது ஷபாத் (Shabbat) என்பது யூத சமயத்தைப் பொறுத்த வரை ஏழாவது நாள் ஆகும். ஆறு நாட்களில் உலகைப் படைத்த இறைவன் ஏழாம் நாள் ஓய்வு எடுத்ததை இது அடிப்படையாய்க் கொண்டுள்ளது. ஓய்வு நாள் வெள்ளிக்கிழமை சூரிய மறைவிலிருந்து சனிக்கிழமை இரவு வரையிலான காலம் ஆகும்.[1]
பத்துக் கட்டளைகளின் அடிப்படையில் ஓய்வு நாளின் போது இறைவனை ஆராதிப்பதைத் தவிர எந்த வேலையும் செய்யக் கூடாது;பெரும்பாலான இயந்திரங்களை இயக்கக் கூடாது.
சபாத் தழுவல்[தொகு]
கிறித்தவ சமயத்தைப் பொறுத்த வரையில் ஓய்வு நாள் என்பது ஞாயிற்றுக் கிழமை ஆகும். புரோட்டஸ்டன்டு கிறித்தவர்களான செவன்த் டே அட்வென்டெஸ்ட் சபையினர் மற்றும் உண்மையான இயேசு தேவாலயம் சபையினர் போன்றோர் சனிக் கிழமையையே ஓய்வு நாளாய்க் கடைப்பிடிக்கின்றனர்.
இசுலாமியர்கள் வெள்ளிக் கிழமையைத் தொழுகை நாளாய்க் கடைப்பிடிக்கின்றனர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "கத்தோலிக்க கலைக்களஞ்சியம்". பார்த்த நாள் May 29, 2012.