உள்ளடக்கத்துக்குச் செல்

ஓயர்சுடெடு பதக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயற்பியல் கற்பிப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை ஓயர்சுடெடு பதக்கம் ஏற்கிறது. 1936 இல் நிறுவப்பட்ட இது அமெரிக்க இயற்பியல் ஆசிரியர்களின் கழகத்தால் வழங்கப்படுகிறது. இந்த விருது ஏன்சு கிறித்தியான் ஓயர்சுடெடு பெயரால் அழைக்கப்படுகிறது. இது கழகத்தின் மிகவும் மதிப்புமிக்க விருதாகும்.

ளேன்சு கிறித்தியன் ஓயர்சுடெடு

நன்கு அறியப்பட்ட பெறுநர்களில் நோபல் பரிசு பெற்றவர்கள் இராபர்ட் ஆந்திரூசு மில்லிகன் , எட்வர்டு எம். பர்செல் , இரிச்சர்ட் பேய்ன்மன் , ஐசிடோர் , இராபி , நார்மன் எஃப். ராம்சே , ஏன்சு பெத்தே , கார்ல் வீமன் , அர்னால்டு சோமர்ஃபெல்ட் , ஜார்ஜ் உகுலன்பெக் , ஜெரால்ட் ஜச்சாரியாசு , பிலிப் மோரிசன் , மெல்பா பிலிப்சு , விக்டர் வெய்சுகோப்ப் , ஜெரால்டு கோல்டன் , ஜான் ஏ. வீலர் , பிராங்க் ஓப்பன்கைமர் , இராபர்ட் இரெசுனிக் , கார்ல் சாகன் , பிரீமேன் டைசன் , டேனியல் கிளெப்னர் இலாரன்சு கிராசு , அந்தோனி பிரெஞ்சு டேவிட் எசுட்டென்சு , இராபர்ட் கார்ப்லசு , இராபர்ட் போல், பிரான்சிசு சியர்சு ஆகியோர் அடங்குவர்.

2008 ஆம் ஆண்டு பதக்கம் வென்ற மில்டிரெடு எசு. டிரெசல்காசு அதன் 70 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றில் இந்த விருதை வென்ற மூன்றாவது பெண் ஆவார்.[1][2][3]

மேலும் காண்க

[தொகு]
  • இயற்பியல் விருதுகள் பட்டியல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "List of Oersted Medalists on AAPT.org". Retrieved 12 February 2016.
  2. "Karl Mamola Names as 2015 Oersted Medal Recipient".
  3. "Gay-Stewart-to-Receive-AAPT-2019-Oersted-Medal".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓயர்சுடெடு_பதக்கம்&oldid=4164900" இலிருந்து மீள்விக்கப்பட்டது