ஓசோன் அடுக்கு பாதுகாப்பிற்கான வியன்னா கருத்தரங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஓசோன் அடுக்கு பாதுகாப்பிற்கான வியன்னா கருத்தரங்கு
Vienna Convention for the Protection of the Ozone Layer
கையெழுத்திட்டது 22 மார்ச்சு 1985
இடம் வியன்னா
நடைமுறைக்கு வந்தது 22 செப்டம்பர் 1988
நிலை 20 நாடுகள் உறுதி செய்தன
கையெழுத்திட்டோர் 28[1]
வைப்பகம் செயலர், ஐ.நா
மொழிகள் அரபி,சீனம்,ஆங்கிலம்,பிரெஞ்சு,உருசியம் மற்றும் எசுப்பானியம்

ஓசோன் அடுக்கு பாதுகாப்பிற்கான வியன்னா கருத்தரங்கு (Vienna Convention for the Protection of the Ozone Layer) பன்னாட்டுச் சுற்றுச்சூழல் உடன்படிக்கையைக் குறித்தது ஆகும். இவ்வொப்பந்தம் 1985 வியன்னா மாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்டு 1988 முதல் நடைமுறைக்கு வந்தது. பொதுமை நோக்கில், நாடுகளுக்கிடையிலான அனைத்து காலத்திற்கும் உகந்த மிகவும் வெற்றிகரமான உடன்படிக்கைகளில் வியன்னா உடன்படிக்கையும் ஒன்றாகும். ஐக்கிய நாடுகள் அவையின் 197 உறுப்பு நாடுகள் அனைத்தும் இவ்வுடன்படிக்கையில் கையெழுத்திட்டு உறுதிசெய்துள்ளன. மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமாகக் கருதப்படும் திரு ஆட்சிப்பீடம், தென் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியுவே மற்றும் குக் தீவுகள் போன்ற அமைப்புகளும் இவ்வுடன்படிக்கையை உறுதி செய்துள்ளன[1]

ஓசோன் படலத்தைப் பாதுகாக்க, சர்வதேச அளவிலான முயற்சிகளை ஒரு கட்டமைப்புடன் இவ்வுடன்படிக்கை செயல்படுகிறது. எனினும், ஓசோன் அடுக்கு பாதிப்பிற்குக் காரணமான பிரதான இரசாயன முகவரான சி.எப்.சி எனப்படும் குளோரோபுளோரோகார்பன் நுகர்வைக் கட்டுப்படுத்தும் இலக்குடைய சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் ஏதும் இவ்வுடன்படிக்கையில் உறுதி செய்யப்படவில்லை. இந்த இலக்குகளையும் உடன்சேர்த்து மாண்ட்ரியல் உடன்படிக்கை தீட்டப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Vienna Convention for the Protection of the Ozone Layer". United Nations Treaty Series. பார்த்த நாள் 17 January 2012.

புற இணைப்புகள்[தொகு]