ஒலிம்பிக் விளையாட்டரங்கம் (இலண்டன்)

ஆள்கூறுகள்: 51°32′19″N 0°00′59″W / 51.53861°N 0.01639°W / 51.53861; -0.01639
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒலிம்பிக் விளையாட்டரங்கம்

சூன் 2011இல் ஒலிம்பிக்கு விளையாட்டரங்கம்
இடம் மார்ஷ்கேட் லேன், இசுட்ராஃபோர்டு, இலண்டன், ஐக்கிய இராச்சியம்
அமைவு 51°32′19″N 0°00′59″W / 51.53861°N 0.01639°W / 51.53861; -0.01639
எழும்பச்செயல் ஆரம்பம் 2007
எழும்புச்செயல் முடிவு 2011
திறவு 2011
உரிமையாளர்
ஆளுனர் ஒலிம்பிக் வழங்கல் ஆணையம்
தரை தடம் & களம் (புல்)
கட்டிட விலை £486 மில்லியன்[1]
கட்டிடக்கலைஞர் பாப்புலசு (கட்டிட வடிவமைப்பாளர்கள்)
Structural engineer புரோ அப்போல்டு
Services engineer புரோ அப்போல்டு
Main contractors சேர் ரோபர்ட் மக்கால்பைன் லிட்.,
குத்தகை அணி(கள்) 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
2012 கோடைக்கால மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
2017 உலக தடகள சாதனையாளர் போட்டிகள்
அமரக்கூடிய பேர் 80,000[2]

ஒலிம்பிக்கு விளையாட்டரங்கம் (Olympic Stadium) இங்கிலாந்திலுள்ள ஒலிம்பிக்கு பூங்காவில் கட்டப்பட்டு வருகிறது. இது 2012 கோடைக்கால ஒலிம்பிக்கு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 2012 கோடைக்கால மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களின் முதன்மை மையமாக வடிவமைக்கப்படுகிறது; தடகள விளையாட்டுக்களும் ஒலிம்பிக் திறப்பு விழா, இறுதி விழா நிகழ்ச்சிகளும் இங்கு நடைபெற உள்ளது. இது இலண்டன் மாநகரின் கீழ் லீ பள்ளத்தாக்கில் இசுட்ராஃபோர்டு மாவட்டத்தில் மார்ஷ்கேட் லேனில் அமைந்துள்ளது. இந்த விளையாட்டரங்கில் ஏறத்தாழ 80,000 பார்வையாளர்கள் விளையாட்டுக்களைக் கண்டு களிக்கலாம். ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்குப் பிறகு இதன் பார்வையாளர் அளவு குறைக்கப்பட உள்ள நிலையில் தற்காலிகமாக இது பிரித்தானியாவின் மூன்றாவது பெரிய விளையாட்டரங்கமாக உள்ளது. 2017ஆம் ஆண்டு தடகள சாதனையாளர் போட்டிகளுக்கு இந்த விளையாட்டரங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.[3]


2007ஆம் ஆண்டின் மத்தியிலிருந்தே நில கையகப்படுத்தும் பணி துவங்கினாலும் அலுவல்முறையாக மே 22, 2008இல் கட்டிட வேலைகள் துவங்கின.

மேற்கோள்கள்[தொகு]

  1. Staff (3 October 2011). "London 2012 Olympic Stadium Athletics Track Completed". BBC Sport. http://news.bbc.co.uk/sport1/hi/olympics/london_2012/15149865.stm. பார்த்த நாள்: 14 May 2012. 
  2. "New Era of Stadium Design Unveiled". London 2012 HQ. https://web.archive.org/web/20071019173914/http://www.london2012.com/news/archive/2007-11/new-era-of-stadium-design-unveiled.php from the original on 19 அக்டோபர் 2007. பார்க்கப்பட்ட நாள் 17 January 2008. {{cite web}}: |archiveurl= missing title (help)
  3. Livingston, Robert (11 November 2011). "London Defeats Doha To Host 2017 International Athletics Championships" பரணிடப்பட்டது 2011-11-13 at the வந்தவழி இயந்திரம். GamesBids. Retrieved 14 May 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Olympic Stadium (London)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.