உள்ளடக்கத்துக்குச் செல்

ஒலிம்பிக் பூங்கா, இலண்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒலிம்பிக் பூங்கா
(2012 ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
மற்றும் மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் போட்டிகளை அடுத்து
அரசி எலிசபெத் ஒலிம்பிக் பூங்கா
என அறியப்படும்.)[1]
அரசி எலிசபெத் ஒலிம்பிக் பூங்காவின் நிலவரைபடம்
அரசி எலிசபெத் ஒலிம்பிக் பூங்காவின் நிலவரைபடம்
நாடுஇங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
நகரம்இலண்டன்
மாவட்டம்இசுட்ராஃபோர்டு, பௌ, லெய்டன், ஓமர்டன்
நேர வலயம்ஒசநே0 (UTC)
 • கோடை (பசேநே)ஒசநே+1 (BST)
அஞ்சல் குறியீடு
இணையதளம்london2012.com, 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 2012 கோடைக்கால மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களின் அலுவல்முறை வலைத்தளம்

ஒலிம்பிக் பூங்கா (Olympic Park) இலண்டன், இங்கிலாந்து, 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 2012 கோடைக்கால மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்காக கட்டமைக்கப்பட்ட ஓர் விளையாட்டரங்கு வளாகமாகும். இலண்டன் மாநகரின் கிழக்குப் பகுதியில் இசுட்ராஃபோர்டு நகர் அருகே கட்டப்படும் இந்த வளாகத்தில் விளையாட்டு வீரர்களுக்கான ஒலிம்பிக் சிற்றூர் (Olympic Village), ஒலிம்பிக் விளையாட்டரங்கம், நீர் விளையாட்டுக்கள் மையம் மற்றும் நீர் போலோ மையம் போன்ற பல விளையாட்டரங்குகள் அமைந்துள்ளன. பிரித்தானியாவின் மிகப்பெரும் பொதுவெளி கலைப்படைப்பும் கூர்நோக்கி கோபுரமும் ஆன ஆர்செலர்மிட்டல் ஓர்பிட்டை பார்த்தவாறு இந்தப் பூங்கா அமைந்துள்ளது. இரண்டாம் எலிசபெத்தின் 60வது முடிசூட்டல் ஆண்டுக் கொண்டாட்டங்களின் அங்கமாக ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பின்னர் இந்தப் பூங்கா அரசி எலிசபெத் ஒலிம்பிக் பூங்கா என பெயரிடப்பட்டது.[1]

விளையாட்டு நிகழிடங்கள்

[தொகு]

விளையாட்டு வீரர்களை தங்க வைக்க ஓர் ஒலிம்பிக் சிற்றூரும் அமைக்கப்பட்டது.

ஒலிம்பிக் பூங்காவில் நீர் விளையாட்டுக்கள் மையம் (இடது), ஆர்செலர்மிட்டல் ஓர்பிட் (நடுவில்), ஒலிம்பிக் விளையாட்டரங்கம் (பின்னணியில், வலது), நீர் போலோ செயற்களம் (முன்னணியில், வலது) - மே 2012 நிலவரம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Staff (7 October 2010). "Games Site Renamed the Queen Elizabeth Olympic Park". BBC News. Retrieved 12 May 2012.

வெளி இணைப்புகள்

[தொகு]